பாக்கித்தானில் சுற்றுலாத் துறை
பொருளாதாரப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
பாகிஸ்தானில் சுற்றுலாத்துறை (Tourism in Pakistan) என்பது வளர்ந்து வரும் தொழிலாகக் கருதப்படுகிறது. [1] 2010 ஆம் ஆண்டில், ஆத்திரேலிய பயண வழிகாட்டி புத்தகமான லோன்லி பிளானட் பாக்கித்தானை "சுற்றுலாவின் அடுத்த பெரிய விஷயம்" என்று குறிப்பிட்டது. நாடு புவியியல் ரீதியாகவும் இன ரீதியாகவும் வேறுபட்டது. மேலும் பல வரலாற்று மற்றும் கலாச்சார பாரம்பரிய தளங்களைக் கொண்டுள்ளது. நாட்டின் சில பகுதிகளுக்குச் செல்ல விரும்பும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தடையில்லாச் சான்றிதழைக் கட்டாயமாக்குவதை நிறுத்துவதற்கான பாக்கித்தான் அரசாங்கத்தின் சமீபத்திய முடிவால் கடந்த சில ஆண்டுகளில் சுற்றுலாத்துறையின் எழுச்சி உதவியது. [2]