பலூசிஸ்தான் உயர் நீதிமன்றம் பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் (பாகிஸ்தான்) ல் உள்ள ஒரு உயர் நீதி மன்றமாகும். இது பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தின் படி இயங்கி வருகிறது.[1][2][3]
பலூசிஸ்தான் உயர் நீதிமன்றம் | |
---|---|
நிறுவப்பட்டது | 1955 |
அமைவிடம் | பலூசிஸ்தான் (பாகிஸ்தான்) |
அதிகாரமளிப்பு | பாகிஸ்தான் அரசியலமைப்புச் சட்டம் |
தீர்ப்புகளுக்கானமேல் முறையீடு | பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் |
வலைத்தளம் | |
தலைமை நீதிபதி | |
தற்போதைய | திரு. முகமது நூர் மெஸ்கண்சி |
வரலாறு
மேற்கு பாகிஸ்தானில் உள்ள இந்த நீதிமன்றம் 14 அக்டோபர் 1955 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தார். பின்னர் இந்த நீதிமன்றம் 1 ஜூலை 1970ல் கலைக்கப்பட்டு பின் 30 நவம்பர் 1976 ல் இருந்து சிந்து மற்றும் பலுசிஸ்தான் என இரண்டு தனித்தனி உச்ச நீதிமன்றங்களாக செயல்படுகின்றன.
கட்டிடங்கள்
பலூசிஸ்தான் உயர் நீதிமன்றம் 1 டிசம்பர் 1976 கட்டப்பட்டு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. குதா பக்ஷ் மாரி, உயர் நீதிமன்ற நீதிபதிகள் திரு. M. A. ராஸித் மற்றும் திரு. ஜாகா உல்லா லோதி , அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. ஆராம்பிக்கப்பட்ட போது 5 நீதியரசர்களைக் கொண்டு திறம்படச் செயல்பட்டது. தற்போது 11 நீதியரசர்களைக் கொண்டு திறம்படச் செயல்படுகிறது.
தற்போது உள்ள இந்த கட்டிடம் கட்டிட வேலைகள் 1987ல் தொடங்கி 1993 ல் கட்டி முடிக்கப்பட்டது. 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.
நீதிபதிகள்
தலைமை நீதிபதி
திரு. முகமது நூர் மெஸ்கண்சி
பிற நீதிபதிகள்
- திருமதி. சையத தஹிரா சஃப்டார்
- திரு. ஜமால் கான் மண்டொகைல்
- திரு. நயீம் அக்தர் அஃப்கான்
- திரு. முகமது ஹாஸிம் கான் காகர்
- திரு. முகமது ஈசாஜ் ச்வாடி
- திரு. முகமது கம்ரான் கான் முலாகைல்
- திரு. ஜாஹீர் உட் டீன் காகர்
- திரு. அப்துல்லா பலொக்
- திரு. நஸீர் அஹமது லாங்கோவ்
விடுமுறை தினங்கள்
- காஷ்மீர் தினம்
- பாகிஸ்தான் தினம்
- தொழிலாளர் தினம்
- பக்ரீத்
- மொஹரம்
- ரமலான்
- மிலாதுநபி
- சுதந்திர தினம்
- கிருஸ்துமஸ்
மேற்கோள்கள்
வலைத்தளம்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.