![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/10/Map_Chhattisgarh_state_and_districts.png/640px-Map_Chhattisgarh_state_and_districts.png&w=640&q=50)
பலராம்பூர் மாவட்டம், சத்தீஸ்கர்
சத்தீசுகரில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
பலராம்பூர் மாவட்டம் (Balrampur district) மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் இருபத்து ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். சர்குஜா கோட்டத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் பலராம்பூர் நகரத்தில் அமைந்துள்ளது. சர்குஜா மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம் 1 சனவரி 2012-இல் துவக்கப்பட்டது.[1]
- உத்தரப் பிரதேசத்திலும் பலராம்பூர் மாவட்டம் என்றொரு மாவட்டம் உள்ளது!
![]() பலராம்பூர்மாவட்டத்தின் இடஅமைவு சத்தீஸ்கர் | |
மாநிலம் | சத்தீஸ்கர், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | மாவட்டம் |
தலைமையகம் | பலராம்பூர் |
பரப்பு | 3,806.08 km2 (1,469.54 sq mi) |
மக்கட்தொகை | 5,98,855 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 157/km2 (410/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 2 |
படிப்பறிவு | 54.24% |
பாலின விகிதம் | 1000:970 |
வட்டங்கள் | 6 |
மக்களவைத்தொகுதிகள் | 1 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | 1 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
இம்மாவட்டம் சத்தீஸ்கர் மாநிலத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.
இம்மாவட்டத் தலைமையிட நகரமாக பலராம்பூர், சர்குஜா மாவட்டத்தின் வடக்கில் எண்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இம்மாவட்டத்தின் பெரும் பகுதிகள் மலைக்காடுகளுடன் கூடியது. இம்மாவட்டத்தின் இராமானுஜகஞ்ச் பகுதி வரலாற்று சிறப்பு மிக்க பகுதியும், மாவட்டத்தின் மக்கள்தொகை அதிகம் கொண்ட நகரமும் ஆகும். இந்நகரம் சத்தீஸ்கர்-ஜார்கண்ட் மாநிலங்களின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது.