![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e9/Firefox_logo_%2528horizontal_text%2529%252C_2017.svg/langta-640px-Firefox_logo_%2528horizontal_text%2529%252C_2017.svg.png&w=640&q=50)
பயர் பாக்சு
மொசில்லா நிறுவனம் உருவாக்கிய இணைய உலாவி / From Wikipedia, the free encyclopedia
மொசிலா பயர் பாக்சு என்பது ஒரு இலவச திறந்தமூல இணைய உலாவியாகும். இது மொஸிலா நிறுவனத்தாலும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களாலும் உருவாக்கப் பட்டதாகும். திசம்பர் 2013 இன்படி உலகின் 18.35% வீதமானவர்கள் இந்த உலாவியைப் பயன்படுத்துகின்றார்கள். இது உலகின் இரண்டாவது மிகப்பெரும் வலையுலாவியாக மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளருக்கு அடுத்தாக விளங்குகின்றது.[11]
மேம்பாட்டாளர் | Mozilla Foundation and contributors மொசில்லா நிறுவனம் |
---|---|
தொடக்க வெளியீடு | செப்டம்பர் 23, 2002; 21 ஆண்டுகள் முன்னர் (2002-09-23) |
எழுதப்பட்ட மொழி | சி++, யாவாக்கிறிட்டு, C, மீயுரைக் குறியிடு மொழி, Rust[1] |
இயக்க அமைப்பு | மைக்ரோசாப்ட் விண்டோசு, macOS, லினக்சு, Android, ஐஓஎஸ்[2] (Unofficial ports to BSDs, Solaris, OpenSolaris, illumos) |
அளவு | |
வளர்ச்சி நிலை | Active |
வகை | உலாவி Feed reader Mobile web browser |
உரிமம் | MPL 2.0[9][10] |
வலைத்தளம் | mozilla |
சீர்தரம் | HTML5, விழுத்தொடர் பாணித் தாள்கள், ஆர்எஸ்எஸ் (கோப்பு வடிவம்), Atom |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e9/Firefox_logo_%28horizontal_text%29%2C_2017.svg/320px-Firefox_logo_%28horizontal_text%29%2C_2017.svg.png)
இணையப்பக்கங்களைக் காட்டுவதற்கு இந்த உலாவியானது ஜிக்கோ வடிவமைப்பு இயந்திரத்தைப் பயனபடுத்துகின்றது. இது இணையத்தின் தற்போதைய தரநிர்ணயங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன் மேலதிக சீர்தரங்களாக வரக்கூடியவற்றையும் நடைமுறைப்படுத்தியுள்ளனர்.
பயர்பாக்சு தத்தல் முறையிலான இணைய உலாவல், எழுத்துப் பிழைதிருத்தி வசதிகளுடன் கூடிய தெரித்தெழு தத்தல்களை தடுத்தல் (pop up blocker), திறந்த நியம முறையூடாக மாற்றியமைக்கப்பட்ட நிகழ்நிலைப்புத்தககுறிப்பு (live Book mark), திறந்த நியமங்களை ஆதரித்தல் மற்றும் இடைமுகங்களை வேண்டியவாறு மாற்றுதல் வசதிகளுடன் பதிவிறக்க மேலாளர் (Download Manager) வசதிகளுடன் ஒருங்கிணைந்த விரும்பியடி மாற்றக்கூடிய தேடுபொறியைத் தன்னகத்தே உள்ளடக்கிய ஓர் உலாவியாகும். இதன் வசதிகளானது பொருத்துக்கள் (addons) மூலம் மென்பொருள் விருத்தியாளர்களூடாக விரிவாக்கப்படக்கூடியவை. பயர்பாக்சு மைக்ரோசாப்ட் இண்டர்நெட் எக்சுபுளோரர் மற்றும் ஆப்பிள் கணினிகளுக்கான சபாரி இணைய உலாவிகளை ஓர் மாற்று உலாவியாக விளங்குகின்றது.
பயர்பாக்சு விண்டோசு, மாக், லினக்சு, யுனிக்சு போன்ற இயங்குதளங்களில் இயங்கக்கூடியது.