![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/84/Carica_papaya_-_K%25C3%25B6hler%25E2%2580%2593s_Medizinal-Pflanzen-029.jpg/640px-Carica_papaya_-_K%25C3%25B6hler%25E2%2580%2593s_Medizinal-Pflanzen-029.jpg&w=640&q=50)
பப்பாளி
பழவகைத்தாவர இனங்களில் ஒன்று / From Wikipedia, the free encyclopedia
பப்பாளி அல்லது பப்பாசி (Carica papaya) ஒரு பழந் தரும் மரமாகும். இதன் பூர்வீகம் மெக்சிக்கோ. தற்போது மேற்கிந்தியத் தீவுகள், ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, தென் அமெரிக்கா முதலான நாடுகளிலும் பப்பாளி விளைகிறது. இதன் விளைச்சல் காலம் பெப்ரவரி, மார்ச் மாதங்களும், மே முதல் அக்டோபர் வரையான மாதங்களும் எனக் கணிக்கப் பட்டுள்ளது. எளிதில் கிடைப்பது விலை மலிவானது எல்லாக் காலங்களிலும் விளைவது போன்ற சிறப்புத்தன்மை பெற்றுள்ளதால் ஏழைகளின் கனி என்று அழைக்கப்படுகிறது. பப்பாளி காயாக இருக்கும் போது பச்சையாகவும், நன்கு கனிந்ததும் மஞ்சளாகவும் தோற்றமளிக்கும். கனிந்த பப்பாளி மிகவும் இனிமையாக இருக்கும். விதைகள் கசப்பாக இருக்கும். பார்ப்பதற்கு கரு மிளகு போன்றிருக்கும்.
விரைவான உண்மைகள் பப்பாளி, உயிரியல் வகைப்பாடு ...
பப்பாளி | |
---|---|
![]() | |
கோயெலர்-ன்மெடிசினல்-ப்லான்ட்ஸ்-லிருந்து (1887), பப்பாளிப் பழமும் மரமும் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | Brassicales |
குடும்பம்: | Caricaceae |
பேரினம்: | Carica |
இனம்: | C. papaya |
இருசொற் பெயரீடு | |
Carica papaya L. | |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/80/Young_leaves_of_Papaw.jpg/640px-Young_leaves_of_Papaw.jpg)