From Wikipedia, the free encyclopedia
பத்தாம் பிரெடெரிக் (Frederik X', Frederik André Henrik Christian; பிறப்பு: 26 மே 1968) டென்மார்க்கின் அரசர் ஆவார். 2024 சனவரி 14 அன்று ராணி மார்கரீத் II முடி துறந்ததைத் தொடர்ந்து அவர் மகன் பிரெடெரிக் அரியணை ஏறினார். 52 ஆண்டுகளுக்குப் பிறகு, அவரது தந்தை, கிங் ஃபிரடெரிக் IX, அவர் டென்மார்க்கின் அரியணையில் ஏறுவதைக் கண்டார்.[4][5]
பத்தாம் பிரெடெரிக் Frederik X | |||||
---|---|---|---|---|---|
2018 இல் பிரெடெரிக் | |||||
டென்மார்க்கின் அரசர் | |||||
ஆட்சிக்காலம் | 14 சனவரி 2024 – இன்று | ||||
முன்னையவர் | இரண்டாம் மார்கரீத் | ||||
முடிக்குரியவர் | கிறித்தியான் | ||||
பிரதமர்கள் | பட்டியலைப் பார்க்க
| ||||
பிறப்பு | 26 மே 1968 கோபனாவன், டென்மார்க் | ||||
துணைவர் | மேரி டொனால்ட்சன் (தி. 14 மே 2004) | ||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||
| |||||
மரபு |
| ||||
தந்தை | என்றி டெ லபோர்ட் டெ மொன்பெசாத் | ||||
தாய் | இரண்டாம் மார்கரீத் | ||||
மதம் | டென்மார்க்கு திருச்சபை | ||||
இராணுவப் பணி | |||||
பட்டப்பெயர்(கள்) | பிங்கு[2][3] | ||||
சார்பு | டென்மார்க் | ||||
சேவை/ |
| ||||
சேவைக்காலம் | 1986–2024 | ||||
தரம் |
| ||||
கல்வி | ஆர்கசு பல்கலைக்கழகம் |
பிரெடெரிக் ராணி இரண்டாம் மார்கரீத், இளவரசர் என்றிக் ஆகியோரின் மூத்த மகன் ஆவார். இவர் அவரது தாத்தா, ஒன்பதாம் பிரெடெரிக்கின் ஆட்சியின் போது பிறந்தார், அவரது தாயார் டென்மார்க் ராணியாக 1972 சனவரி 14 இல் பதவியேற்றதைத் தொடர்ந்து பட்டத்து இளவரசரானார். ஆர்கசு பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பல்கலைக்கழகத்திற்குப் பிறகு, அவர் ஐக்கிய நாடுகள் சபையிலும் பாரிசிலும் தூதுவப் பதவிகளில் பணியாற்றினார். டென்மார்க்கு ஆயுதப்படையின் மூன்று பிரிவுகளிலும் பயிற்சி பெற்றவர்.
2000 ஆம் ஆண்டில், சிட்னியில் 2000 கோடைகால ஒலிம்பிக்கில் கலந்துகொண்டபோது, ஆத்திரேலிய சந்தைப்படுத்தல் ஆலோசகர் மேரி டொனால்ட்சனை பிரெடெரிக் சந்தித்து, 2004 மே 14 அன்று கோபனேகன் பேராலயத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்: கிறித்தியான், இசபெல்லா, இரட்டையர்கள் வின்சென்ட், யோசபின் ஆகியோர்.
2023 திசம்பர் 31 ஆம் தேதி ராணி மார்கரீத் II தான் ஆண்டுதோறும் வெளியிடும் நேரடி ஒளிபரப்பு உரையின் போது, தனது பதவி விலகலை அறிவித்தார். 2024 சனவரி 14 அன்று நடந்த அரசுப் பேரவைக் கூட்டத்தில் பிரெடெரிக் டென்மார்க்கின் மன்னராக பதவியேற்றார்.[6]
பதவியேற்புக்குப் பிறகு, கிறித்தியன்சுபோர்க் அரண்மனையின் மேல்மாடத்தில் இருந்து 1849 இல் அரசியலமைப்பு முடியாட்சி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து டென்மார்க்கு மன்னர்களின் வழக்கப்படி பிரதம மந்திரி மெட்டே பிரெடெரிக்சனால் மன்னராக அறிவிக்கப்பட்டார். அவரது குறிக்கோள் "டென்மார்க் இராச்சியத்திற்காக ஐக்கியம், அர்ப்பணிப்பு" என்பதாகும். ஏழாம் பிரெடெரிக்குக்குப் பிறகு கடவுளைக் குறிப்பிடாத முதல் அரசக் குறிக்கோள் இதுவாகும்.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.