![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/12/Provinces_of_Nepal_2015.png/640px-Provinces_of_Nepal_2015.png&w=640&q=50)
தூரமேற்கு பிரதேசம்
From Wikipedia, the free encyclopedia
தூரமேற்கு பிரதேசம் (முன்னர்:மாநில எண் 7) (सुदूरपश्चिम प्रदेश), 20 செப்டம்பர் 2015 அன்று புதிதாக துவக்கப்பட்ட மாநிலமாகும். 2015 நேபாள அரசியல் அமைப்புச் சட்டத்தின் [2], பட்டியல் எண் 4-இன் படி, நிர்வாக வசதிக்காக, 75 மாவட்டங்களைக் கொண்டு புதிதாக துவக்கப்பட்ட ஏழு நேபாள மாநிலங்களின் ஒன்றாகும். [2] [3]தற்காலிகமாக இமமாநிலத்திற்கு மாநில எண் 7 என பெயரிடப்பட்டுள்ளது.[2] இம்மாநிலம் நோபாளத்தில் தூரமேற்கில் உள்ளதால், தற்போது இம்மாநிலத்தின் பெயர் தூரமேற்கு பிரதேசம் என அழைக்கப்படுகிறது.
தூரமேற்கு பிரதேசம் | |
---|---|
![]() நேபாளத்தின் மேற்கில் அமைந்த மாநில எண் 7 | |
![]() மாநில எண் 7ன் 9 மாவட்டங்களைக் காட்டும் வரைபடம் | |
நாடு | ![]() |
மாநில எண் 7 | 20 செப்டம்பர் 2015 |
தலைநகரம் | தங்கடி |
நகரம் | தங்கடி, பீம்தத்தா (மகேந்திரநகர்) மற்றும் தீப்பாயல் |
மாநில எண் 7 | 9 மாவட்டங்கள் |
அரசு | |
• நிர்வாகம் | மாநில எண் 7 அரசு |
• ஆளுநர் | மோகன்ராஜ் மல்லா |
• முதலமைச்சர் | திரிலோசன பட்டா[1] ( மாவோயிஸ்ட்) |
• அவைத்தலைவர் | அர்சூன் பகதூர் தாபா |
• சட்டமன்றத் தொகுதிகள் | மொத்தம் 53 உறுப்பினர்கள் 32 உறுப்பினர்கள் நேரடித் தேர்தலிலும் + 21 விகிதாச்சாரத் தேர்தல் முறையிலும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
|
• மாநிலச் சட்டமன்றம் | அரசியல் கட்சிகள்
|
பரப்பளவு | |
• மொத்தம் | 19,539 km2 (7,544 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 25,52,517 |
• அடர்த்தி | 130/km2 (340/sq mi) |
இனம் | நேபாளிகள் |
நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |
புவிசார் குறியீடு | NP-SE |
அலுவல் மொழிகள் | நேபாளி |
2017 மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், 17 சனவரி 2018 அன்று இம்மாநிலத்தின் இடைக்காலத் தலைநகரமாக தங்கடி நகரத்தை தேர்வு செய்துள்ளது.
இம்மாநில 19,539 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இதன் மக்கள் தொகை 2,552,517 ஆகும். இம்மாநிலம் ஒன்பது மாவட்டங்களைக் கொண்டது.