விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia
நேபாள பிரதம அமைச்சர்கள் (Prime Minister of Nepal] (நேபாளி: नेपालको प्रधानमन्त्री, Nēpālkō Pradhānmantrī), வரலாற்றில் ஷா வம்ச காலத்தில், நேபாள இராச்சிய மன்னர் கீர்வான் யுத்த விக்ரம் ஷா ஆட்சிக் காலத்தில் மன்னருக்கு ஆலோசனை வழங்க மூல்-கஜி எனும் பதவிப் பெயரில் பிரதம அமைச்சர் பதவி உருவாக்கப்பட்டது.
நேபாள இராச்சியம் நேபாளம் நேபாள பிரதம அமைச்சர் | |
---|---|
நேபாள அரசின் சின்னம் | |
வாழுமிடம் | சிங்க அரண்மனை, காட்மாண்டு |
நியமிப்பவர் | வித்யா தேவி பண்டாரி நேபாள குடியரசுத் தலைவர் |
உருவாக்கம் | 25 திசம்பர் 1843 |
நேபாள மன்னர் ராணா பகதூர் ஷா 1806ல் முக்தியார் எனும் பிரதம அமைச்சர் பதவியை உருவாக்கினார். நாட்டின் அன்றாட நிர்வாகத்தின் தலைமை அலுவலராக முக்தியார் செயல்பட்டார்.[1][2][3]
15 செப்டம்பர் 1846 முதல் ராணா வம்சத்தின் ஜங் பகதூர் ராணா, நேபாள மன்னர்களை கைப்பாவை பொம்மை அரசர்களாகக் கொண்டு, அவரது வழித்தோன்றல்கள், நேபாள பிரதம அமைச்சர்களாக 1951 முடிய பதவி வகித்தனர்.
ஐக்கிய இராச்சியத்தின் ஆவணக் குறிப்புகளில் முதல் நபராக பீம்சென் தபாவை, நேபாளத்தின் முக்தியார் (பிரதம அமைச்சர்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் பிரித்தானிய இந்திய அரசின் குறிப்புகளின் படி, மாதவர் சிங் தபா நேபாள இராச்சியத்தின் முதல் முக்தியார் என உள்ளது.[4]
நேபாள இராச்சியத்தை 1930ல் நேபாளம் என பெயர் மாற்றிய பிறகு, 1960 முதல் 1990 முடிய நேபாள தேசியப் பஞ்சாயத்து ஆட்சி முறை நடைமுறைபடுத்தப்பட்டது. அரசியல் கட்சிகள் & மக்கள் போராட்டங்களின் விளைவாக 1990ல் அரசியலமைப்புக்குட்பட்ட மன்னராட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் இரண்டாம் ஜனநாயகப் போராட்டத்தின் விளைவாக இயற்றப்பட்ட நேபாள அரசியலமைப்புச் சட்டத்தின் படி, 28 மே 2008ல் நேபாளத்தில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
புதிய நேபாள அரசியலமைப்பு சட்டம், 2015, 20 செப்டம்பர் 2015 அன்று நடைமுறைக்கு வருவதை குறிக்கும் வகையில், நாட்டின் அதிபர் ராம் பரன் யாதவ் புதிய அரசியல் சாசனத்தில் கையெழுத்திட்டார். நேபாளம் சமயசார்பற்ற, ஜனநாயக கூட்டாச்சி குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டது.
புதிய அரசியலமைப்புச் சட்டப்படி, ஈரவை முறைமையுடன், 334 உறுப்பினர்கள் கொண்ட நேபாள நாடாளுமன்றம் நிறுவ வழிகோலியது. 2017 நேபாள நாடாளுமன்றத் தேர்தல்கள் நவம்பர் மற்றும் டிசம்பர், 2017ல் இரு கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்ற நேபாள பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள், நேபாளத்தின் புதிய பிரதம அமைச்சரை தேர்ந்தெடுப்பர்.
தற்போது புஷ்ப கமல் தகால் 26 டிசம்பர் 2022 முதல் பிரதம அமைச்சராக உள்ளார்.
வ. எண் | படம் | பிரதம அமைச்சரின் பெயர் (பிறந்த-இறந்த) |
பதவிக் காலம் | அரசியல் கட்சி | நேபாள மன்னர் (ஆட்சிக் காலம்) | ||
---|---|---|---|---|---|---|---|
பதவி ஏற்ற நாள் | விலகிய நாள் | ||||||
1 | தாமோதர பாண்டே (1752–1804) |
1799 | 1804 | சுயேட்சை | கீர்வான் யுத்த விக்ரம் ஷா (8 மார்ச் 1799-20 நவம்பர் 1816) | ||
2 | பீம்சென் தபா (1775–1839) |
1806 | 1837 | சுயேட்சை | ராஜேந்திர விக்ரம் ஷா (20 நவம்பர் 1816-12 மே 1847) | ||
3 | ராணா ஜங் பாண்டே (1789–1843) முதல் முறை |
1837 | 1837 | சுயேட்சை | |||
4 | ரங்கநாத் பௌதேல் (1773–?) முதல் முறை |
1837 | 1838 | சுயேட்சை | |||
5 | சௌதாரிய புஷ்கர் ஷா (1784–1846) |
1838 | 1839 | சுயேட்சை | |||
(3) | ராணா ஜங் பாண்டே (1789–1843) இரண்டாம் முறை |
1839 | 1840 | சுயேட்சை | |||
(4) | ரங்கநாத் பௌதேல் (1773–?) இரண்டாம் முறை |
1840 | 1840 | சுயேட்சை | |||
6 | பதே ஜங் ஷா (1805–1846) முதல் முறை |
நவம்பர் 1840 | சனவரி 1843 | சுயேட்சை | |||
7 | மாதவர் சிங் தபா (1798–1845) |
சனவரி 1843 | 17 மே 1845 | சுயேட்சை | |||
(6) | பதே ஜங் ஷா (1805–1846) இரண்டாம் முறை |
செப்டம்பர் 1845 | 14 செப்டம்பர் 1846 | சுயேட்சை |
வரிசை எண் | படம் | பெயர் (பிறப்பு-இறப்பு) |
பதவிக் காலம் | சுயேட்சை | நேபாள இராச்சிய மன்னர்கள் (ஆட்சிக் காலம்) | ||
---|---|---|---|---|---|---|---|
பதவியேற்ற நாள் | பதவி விலகிய நாள் | ||||||
8 | ஜங் பகதூர் ராணா (1816–1877) முதல் முறை |
15 செப்டம்பர் 1846 | 1 ஆகஸ்டு 1856 | சுயேட்சை | சுரேந்திர விக்ரம் ஷா (12 மே 1847-17 மே 1881) | ||
9 | பம் பகதூர் குன்வார் (1818–1857) |
1 ஆகஸ்டு 1856 | 25 மே 1857 | சுயேட்சை | |||
— | கிருஷ்ண பகதூர் ராணா (1823–1863) தற்காலிக பிரதம அமைச்சர் |
25 மே 1857 | 28 சூன் 1857 | சுயேட்சை | |||
(8) | ஜங் பகதூர் ராணா (1816–1877) இரண்டாம் முறை |
28 சூன் 1857 | 25 பிப்ரவரி 1877 | சுயேட்சை | |||
10 | ரணோதீப் சிங் குன்வார் (1825–1885) |
27 பிப்ரவரி 1877 | 22 நவம்பர் 1885 | சுயேட்சை | |||
11 | வீர சூம்செர் ஜங் பகதூர் ராணா (1852–1901) |
22 நவம்பர் 1885 | 5 மார்ச் 1901 | சுயேட்சை | பிரிதிவி வீர விக்ரம் ஷா (17 மே 1881-11 டிசமப்ர் 1911) | ||
12 | தேவ் சம்செர் ஜங் பகதூர் ராணா (1862–1914) |
5 மார்ச் 1901 | 27 சூன் 1901 | சுயேட்சை | |||
13 | சந்திர சம்செர் ஜங் பகதூர் ராணா (1863–1929) |
27 சூன் 1901 | 26 நவம்பர் 1929 | சுயேட்சை | திரிபுவன் வீர விக்ரம் ஷா (11 டிசம்பர் 1911-13 மார்ச் 1955) | ||
14 | பீம் சம்செர் ஜங் பகதூர் ராணா (1865–1932) |
26 நவம்பர் 1929 | 1 செப்டம்பர் 1932 | சுயேட்சை | |||
15 | ஜூத்தா சம்செர் ஜங் பகதூர் ராணா (1875–1952) |
1 செப்டம்பர் 1932 | 29 நவம்பர் 1945 | சுயேட்சை | |||
16 | பத்ம சம்செர் ஜங் பகதூர் ராணா (1882–1961) |
29 நவம்பர் 1945 | 30 ஏப்ரல் 1948 | சுயேட்சை | |||
17 | மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா (1885–1967) |
30 ஏப்ரல் 1948 | 12 நவம்பர் 1951 | சுயேட்சை |
வரிசை எண் | படம் | பெயர் (பிறப்பு-இறப்பு ஆண்டு) |
பதவிக் காலம் | அரசியல் கட்சி | நேபாள இராச்சிய மன்னர்கள் (ஆட்சிக் காலம்) | ||
---|---|---|---|---|---|---|---|
பதவியேற்ற நாள் | விலகிய நாள் | ||||||
18 | மாத்ரிக பிரசாத் கொய்ராலா (1912–1997) முதல் முறை |
16 நவம்பர் 1951 | 14 ஆகஸ்டு 1952 | நேபாளி காங்கிரஸ் | திரிபுவன் வீர விக்ரம் ஷா (11 டிசம்பர் 1911–13 மார்ச் 1955) | ||
— | மன்னரின் நேரடி ஆட்சி திரிபுவன் வீர விக்ரம் ஷா (1906–1955) |
14 ஆகஸ்டு 1952 | 15 சூன் 1953 | — | |||
(18) | மாத்ரிக பிரசாத் கொய்ராலா (1912–1997) இரண்டாம் முறை |
15 சூன் 1953 | 14 ஏப்ரல் 1955 | நேபாள் ராஷ்டிரிய பிரஜா கட்சி | |||
— | மன்னரால் நேரடி ஆட்சி மகேந்திரா (1920–1972) |
14 ஏப்ரல் 1955 | 27 சனவரி 1956 | — | மகேந்திரா (14 மார்ச் 1955–31 சனவரி 1972) | ||
19 | தங்க பிரசாத் ஆச்சாரியா (1912–1992) |
27 சனவரி 1956 | 26 சூலை 1957 | நேபாள் பிரஜா பரிஷத் கட்சி | |||
20 | குன்வர் இந்திரஜித் சிங் (1906–1982) |
26 சூலை 1957 | 15 மே 1958 | நேபாள் ஐக்கிய ஜனநாயகக் கட்சி | |||
21 | சுபர்ன சாம்செர் ராணா (1910–1977) |
15 மே 1958 | 27 மே 1959 | நேபாளி காங்கிரஸ் | |||
22 | விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா (1914–1982) |
27 மே 1959 | 26 டிசம்பர் 1960 | நேபாளி காங்கிரஸ் |
வ.எண் | படம் | பெயர் (பிறப்பு-இறப்பு) |
பதவிக் காலம் | அரசியல் கட்சி | நேபாள மன்னர் (ஆட்சிக் காலம்) | ||
---|---|---|---|---|---|---|---|
பதவியேற்ற நாள் | விலகிய நாள் | ||||||
— | மன்னரின் நேரடி ஆட்சி மகேந்திரா (1920–1972) |
26 டிசம்பர் 1960 | 2 ஏப்ரல் 1963 | — | மகேந்திரா (14 மார்ச் 1955–31 சனவரி 1972) | ||
23 | துளசி கிரி (1926–) முதன்முறை |
2 ஏப்ரல்1963 | 23 டிசம்ப்ர் 1963 | சுயேச்சை | |||
24 | சூரிய பகதூர் தாபா (1928–2015) முதன்முறை |
23 டிசம்பர் 1963 | 26 பிப்ரவரி 1964 | சுயேச்சை | |||
(23) | துளசி கிரி (1926–) இரண்டாம் முறை |
26 பிப்ரவரி 1964 | 26 சனவரி 1965 | சுயேச்சை | |||
(24) | சூரிய பகதூர் தாபா (1928–2015) இரண்டாம் முறை |
26 சனவரி 1965 | 7 ஏப்ரல் 1969 | சுயேச்சை | |||
25 | கீர்த்தி நிதி பிஸ்தா (1927–2017) முதன் முறை |
7 ஏப்ரல் 1969 | 13 எப்ரல் 1970 | சுயேச்சை | |||
— | கெகெந்திர பகதூர் ராஜ்பண்டாரி (1923–1994) தற்காலிக பிரதம அமைச்சர் |
13 ஏப்ரல் 1970 | 14 ஏப்ரல் 1971 | சுயேச்சை | |||
(25) | கீர்த்தி நிதி பிஸ்தா (1927–2017) இரண்டாம் முறை |
14 ஏப்ரல் 1971 | 16 சூலை 1973 | சுயேச்சை | பிரேந்திரா (31 சனவரி 1972–1 சூன் 2001) | ||
26 | நாகேந்திர பிரசாத் ரிஜால் (1927–1994) முதன் முறை |
16 சூலை 1973 | 1 டிசம்பர் 1975 | சுயேச்சை | |||
(23) | துளசி கிரி (1926–) மூன்றாம் முறை |
1 டிசம்பர் 1975 | 12 செப்டம்பர் 1977 | சுயேச்சை | |||
(25) | கீர்த்தி நிதி பிஸ்தா (1927–2017) மூன்றாம் முறை |
12 செப்டம்பர் 1977 | 30 மே 1979 | சுயேச்சை | |||
(24) | சூரிய பகதூர் தாபா (1928–2015) மூன்றாம் முறை |
30 மே 1979 | 12 சூலை 1983 | சுயேச்சை | |||
27 | லோகேந்திர பகதூர் சந்த் (1940–) முதன் முறை |
12 சூலை 1983 | 21 மார்ச் 1986 | சுயேச்சை | |||
(26) | நாகேந்திர பிரசாத் ரிஜால் (1927–1994) இரண்டாம் முறை |
21 மார்ச் 1986 | 15 சூன் 1986 | சுயேச்சை | |||
28 | மரீச் மான் சிங் சிரேஸ்தா (1942–2013) |
15 சூன் 1986 | 6 ஏப்ரல் 1990 | சுயேச்சை | |||
(27) | லோகேந்திர பகதூர் சந்த் (1940–) இரண்டாம் முறை |
6 ஏப்ரல் 1990 | 19 ஏப்ரல் 1990 | சுயேச்சை |
No. | படம் | பெயர் (பிறப்பு-இறப்பு) |
பதவிக் காலம் | அரசியல் கட்சி | மன்னர் (ஆட்சிக் காலம்) | |||
---|---|---|---|---|---|---|---|---|
பதவியேற்ற நாள் | விலகிய நாள் | நாட்கள் | ||||||
29 | கிருஷ்ண பிரசாத் பட்டாராய் (1924–2011) முதன் முறை |
19 ஏப்ரல் 1990 | 26 மே 1991 | 402 | நேபாளி காங்கிரஸ் | பிரேந்திரா (31 சனவரி 1972–1 சூன் 2001) | ||
30 | கிரிஜா பிரசாத் கொய்ராலா (1925–2010) முதல் முறை |
26 மே 1991 | 30 நவம்பர் 1994 | 1284 | நேபாளி காங்கிரஸ் | |||
31 | மன்மோகன் அதிகாரி (1920–1999) |
30 நவம்பர் 1994 | 12 செப்டம்பர் 1995 | 286 | நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) | |||
32 | செர் பகதூர் தேவ்பா (1946–) முதன் முறை |
12 செப்டம்பர் 1995 | 12 மார்ச் 1997 | 547 | நேபாளி காங்கிரஸ் | |||
(27) | லோகேந்திர பகதூர் சந்த் (1940–) மூன்றாம் முறை |
12 மார்ச் 1997 | 7 அக்டோபர் 1997 | 209 | ராஷ்டிரிய பிரஜாதந்திரக் கட்சி | |||
(24) | சூரிய பகதூர் தாபா (1928–2015) நான்காம் முறை |
7 அக்டோபர் 1997 | 15 ஏப்ரல் 1998 | 190 | ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி | |||
(30) | கிரிஜா பிரசாத் கொய்ராலா (1925–2010) இரண்டாம் முறை |
15 ஏப்ரல் 1998 | 31 மே 1999 | 411 | நேபாளி காங்கிரஸ் | |||
(29) | கிருஷ்ண பிரசாத் பட்டாராய் (1924–2011) இரண்டாம் முறை |
31 மே 1999 | 22 மார்ச் 2000 | 296 | நேபாளி காங்கிரஸ் | |||
(30) | கிரிஜா பிரசாத் கொய்ராலா (1925–2010) மூன்றாம் முறை |
22 மார்ச் 2000 | 26 சூலை 2001 | 491 | நேபாளி காங்கிரஸ் | |||
(32) | செர் பகதூர் தேவ்பா (1946–) இரண்டாம் முறை |
26 சூலை 2001 | 4 அக்டோபர் 2002 | 435 | நேபாளி காங்கிரஸ் | ஞானேந்திரா (4 சூன் 2001–28 மே 2008) | ||
— | மன்னரின் நேரடி ஆட்சி ஞானேந்திரா (1947–) |
4 அக்டோபர் 2002 | 11 அக்டோபர் 2002 | 7 | — | |||
(27) | லோகேந்திர பகதூர் சந்த் (1940–) நான்காம் முறை |
11 அக்டோபர் 2002 | 5 சூன் 2003 | 237 | ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி | |||
(24) | சூரிய பகதூர் தாபா (1928–2015) ஐந்தாம் முறை |
5 சூன் 2003 | 3 சூன் 2004 | 364 | ராஷ்டிரிய பிரஜா தந்திரக் கட்சி | |||
(32) | செர் பகதூர் தேவ்பா (1946–) மூன்றாம் முறை |
3 சூன் 2004 | 1 பிப்ரவரி 2005 | 243 | நேபாளி காங்கிரஸ் | |||
— | மன்னரின் நேரடி ஆட்சி ஞானேந்திரா (1947–) |
1 பிப்ரவரி 2005 | 25 ஏப்ரல் 2006 | 448 | — | |||
(30) | கிரிஜா பிரசாத் கொய்ராலா (1925–2010) நான்காம் முறை |
25 ஏப்ரல் 2006 | 28 மே 2008 | 764 | நேபாளி காங்கிரஸ் |
வ. எண் | படம் | பெயர் (பிறப்பு-இறப்பு) |
பதவிக் காலம் | அரசியல் கட்சி | அமைச்சரவை | குடியரசுத் தலைவர்கள் (1. பதவிக் காலம்) (2. அரசியல் கட்சி) | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
பதவியேற்ற நாள் | விலகிய நாள் | நாட்கள் | |||||||
(32) | கிரிஜா பிரசாத் கொய்ராலா (1925–2010) ஐந்தாம் முறை |
28 மே 2008[5][6][7] | 18 ஆகஸ்டு 2008[6][7] | 82 | நேபாளி காங்கிரஸ் | 2008 கொய்ராலா அமைச்சரவை | ராம் பரன் யாதவ் (1. 23 சூலை 2008-29 அக்டோபர் 2015) (2. நேபாளி காங்கிரஸ்) | ||
33 | புஷ்ப கமல் தகால் (1954–) முதன் முறை |
18 ஆகஸ்டு 2008 | 25 மே 2009 | 280 | நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) | 2008 பிரசந்தாவின் அமைச்சரவை | |||
34 | மாதவ் குமார் நேபாள் (1953–) |
25 மே 2009 | 6 பிப்ரவரி 2011 | 622 | நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) | 2009 மாதவ்குமாரின் அமைச்சரவை | |||
35 | சாலா நாத் கனால் (1950–) |
6 பிப்ரவரி 2011 | 29 ஆகஸ்டு 2011 | 204 | நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) | 2011 கனால் அமைச்சரவை | |||
36 | பாபுராம் பட்டாராய் (1954–) |
29 ஆகஸ்டு 2011 | 14 மார்ச் 2013 | 563 | நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) | 2011 பாபுராம் பட்டாராய் அமைச்சரவை | |||
— | கில் ராஜ் ரெக்மி (1949–) தற்காலிக பிரதம அமைச்சர் |
14 மார்ச் 2013 | 11 பிப்ரவரி 2014 | 334 | சுயேச்சை | 2013 ரெக்மி இடைக்கால அமைச்சரவை | |||
37 | சுசில் கொய்ராலா (1939–2016) |
11 பிப்ரவரி 2014 | 12 அக்டோபர் 2015 | 608 | நேபாளி காங்கிரஸ் | சுசில் கொய்ராலா அமைச்சரவை | |||
38 | கட்க பிரசாத் சர்மா ஒளி (1952–) |
12 அக்டோபர் 2015 | 4 ஆகஸ்டு 2016 | 297 | நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) | 2015 கே. பி. அமைச்சரவை | வித்யா தேவி பண்டாரி (1. 29 அக்டோபர் 2015-) (2. மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) | ||
(33) | புஷ்ப கமல் தகால் (1954–) இரண்டாம் முறை |
4 ஆகஸ்டு 2016[8][8] | 31 மே 2017 | 300 | நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) | 2016 புஷ்ப கமல் அமைச்சரவை | |||
(32) | செர் பகதூர் தேவ்பா (1946–) நான்காம் முறை |
7 சூன் 2017[9] | 15 பிப்ரவரி 2018 | 2683 | நேபாளி காங்கிரஸ் | 2017 செர் பகதூர் தேவ்பா அமைச்சரவை | |||
38 | கட்க பிரசாத் சர்மா ஒளி (1952–) இரண்டாம் முறை |
15 பிப்ரவரி 2018 [10][11] | 13 மே 2021[12] | 468 | நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) | 2018 கே. பி. ஒளி அமைச்சரவை | |||
38 | கட்க பிரசாத் சர்மா ஒளி (1952–) மூன்றாம் முறை |
13 மே 2021 [13] | 17 சூலை 2021 | 53 நாட்கள் | நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) | 2021 கே. பி. ஒளி அமைச்சரவை | |||
(32) | செர் பகதூர் தேவ்பா[14] [15][16] (1946–) ஐந்தாம் முறை |
18 சூலை 2021 | 25 டிசம்பர் 2022 | நேபாளி காங்கிரஸ் & கூட்டணிக் கட்சிகள் | 2021 செர் பகதூர் தேவ்பா அமைச்சரவை | ||||
(33) | புஷ்ப கமல் தகால்[17] மூன்றாம் முறை | 26 டிசம்பர் 2022 | 15 சூலை 2024 | நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) | மாவோயிஸ்ட் & கூட்டணிக் கட்சிகள் | 2022 பிரசந்தா அமைச்சரவை | |||
(38) | கட்க பிரசாத் சர்மா ஒளி (1952–) நான்காம் முறை |
15 சூலை 2024 [18] | பதவியில் உள்ளார். | நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் ஒன்றியம்) | 2024 கே. பி. ஒளி அமைச்சரவை |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.