நெதர்லாந்து இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
நெதர்லாந்து இராச்சியம் (Kingdom of the Netherlands, டச்சு: Koninkrijk der Nederlandenⓘ), பொதுவாக நெதர்லாந்து,[note 7] மேற்கு ஐரோப்பாவிலும் கரிபியனிலும் பரந்துள்ள அரசியல்சட்ட முடியாட்சியுடனான இறைமையுள்ள நாடு ஆகும். இந்த இராச்சியத்தின் நான்கு அங்கங்களான – அருபா, குராசோ, நெதர்லாந்து, மற்றும் சின்டு மார்தின் – உள்ளடங்கிய நாடுகள் (டச்சு மொழியில் லான்டென்) எனக் குறிக்கப்பெறுகின்றன. இவை இராச்சியத்தில் சமமான கூட்டாளிகளாக பங்கேற்கின்றனர்.[7] இருப்பினும் நடைமுறையில், இராச்சியத்தின் பெரும்பாலான செயற்பாடுகளை (இராச்சியத்தின் பரப்பளவு மற்றும் மக்கள்தொகையில் 98% கொண்ட) நெதர்லாந்து மேற்பார்க்கின்றது. இதன்படி வெளிநாட்டுக் கொள்கை, பாதுகாப்பு போன்றவற்றிற்கு நெதர்லாந்தைச் சார்ந்து அரூபா, குராசோ, மற்றும் சின்டு மார்தின் ஆகியவை உள்ளன.
நெதர்லாந்து இராச்சியம்
| |
---|---|
குறிக்கோள்: "Je maintiendrai"(பிரான்சிய மொழி) "Ik zal handhaven"(இடச்சு மொழி) | |
நாட்டுப்பண்: "வில்ஹெல்மசு" | |
தலைநகரம் | ஆம்ஸ்டர்டம்[note 2] 52°22′N 4°53′E |
பெரிய நகர் | தலைநகரம் |
ஆட்சி மொழி(கள்) | டச்சு (நடைமுறைப்படி) |
வட்டார மொழிகள் | |
மக்கள் | டச்சு |
நாடுகள் (non-sovereign parts) | |
அரசாங்கம் | நாடாளுமன்ற முறை அரசியல்சட்ட முடியாட்சி கூட்டாட்சிக் கூறுகளுடன் |
• அரசர் | வில்லெம்-அலெக்சாண்டர் |
• நெதர்லாந்தின் பிரதமர்[note 4] | மார்க் ருட் |
• அரூபா அரசத் தூதர் அமைச்சர் | கில்ஃப்ரெட் பெசாரில் |
• குராசோ அரசத் தூதர் அமைச்சர் | அந்தோணி பெகினா |
• சின்டு மார்தின் அரசத் தூதர் அமைச்சர் | ரெனே வயோலினஸ் |
சட்டமன்றம் | இசுட்டேட்சு ஜெனரல் |
• மேலவை | செனட் |
• கீழவை | சார்பாளர் மன்றம் |
எசுப்பானியப் பேரரசுவிடமிருந்து விடுதலை | |
• கைவிடுதல் | 26 சூலை 1581 |
30 சனவரி 1648 | |
• நெதர்லாந்து இராச்சியம் | 16 மார்ச் 1815 |
• சாற்றுரை | 15 திசம்பர் 1954 |
பரப்பு | |
• மொத்தம் | 42,508 km2 (16,412 sq mi) (131ஆவது) |
• நீர் (%) | 18.98 |
மக்கள் தொகை | |
• 2019 மதிப்பிடு | 1,77,37,438[6] (64ஆவது) |
• அடர்த்தி | 393/km2 (1,017.9/sq mi) (30ஆவது) |
நாணயம் | 4 நாணயங்கள்
|
நேர வலயம் | ஒ.அ.நே-4 (CET (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்+1) AST) |
ஒ.அ.நே-4 (CEST (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்+2) AST) | |
திகதி அமைப்பு | dd-mm-yyyy |
வாகனம் செலுத்தல் | right |
அழைப்புக்குறி | 4 calling codes
|
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | NL |
இணையக் குறி |
உள்ளடங்கிய நாடு நெதர்லாந்தின் பெரும்பாலான பகுதி ஐரோப்பாவில் உள்ளது; மூன்று சிறப்பு நகராட்சிகள் (பொனெய்ர், சேபா, சின்டு யூசுட்டாசியசு) மட்டும் கரிபியனில் உள்ளது. மற்ற உள்ளடங்கிய நாடுகளான அரூபா, குராசோ,சின்டு மார்தின் மூன்றுமே கரிபியனில் அமைந்துள்ளன.