From Wikipedia, the free encyclopedia
நுபீடியா என்பது ஆங்கில மொழியில் உருவான இணையதளம் சார்ந்த கலைக்களஞ்சியம், இது துறை சார்ந்த நிபுணர்களால், உருவாக்கப்பட்டு, கட்டற்ற திறந்த மூலமாக வெளியிடப்பட்டது. ஜிம்மி வேல்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்ட இத்தளம், போமிஸ் என்பவருக்கு சொந்தமானது. இதில் லாரி சாங்கர் என்பவர் முதன்மைத் தொகுப்பாளராக விளங்கினார். நுபீடியா மார்ச் 2000 முதல்[1] செப்டம்பர் 2003 வரை பயன்பாட்டில் இருந்தது. இது விக்கிப்பீடியா திட்டங்களின் முன்னோடியாகத் திகழ்கிறது.
வலைத்தள வகை | இணையதள கலைக்களஞ்சியத் திட்டம் |
---|---|
கிடைக்கும் மொழி(கள்) | ஆங்கிலம், இடாய்ச்சு, ஸ்பானியம், பிரெஞ்சு, இத்தாலியம் |
உரிமையாளர் | போமிஸ் |
உருவாக்கியவர் | ஜிம்மி வேல்ஸ், லேரி சாங்கர் |
தற்போதைய நிலை | உபயோகத்தில் இல்லை; பிறகு வந்தவை: விக்கிப்பீடியா |
உரலி | http://nupedia.com (உபயோகத்தில் இல்லை) |
விக்கிப்பீடியாவைப் போல, நுபீடியா ஒரு விக்கி அல்ல; அதற்கு பதிலாக பியர் ரிவியூ என்னும் பல்முனை தொகுத்தல் மூலமாக கட்டுரைகள் எழுதப்பட்டது. நுபீடியா தரத்தில் கலைக்களஞ்சியத்தை ஒத்திருந்தது, அறிஞர்களின் பங்களிப்பை கொண்டிருந்தது. இத்தளத்தினை பயன்பாட்டிலிருந்து நீக்கும் வரையில் 25[2] கட்டுரைகளை கொண்டிருந்தது[3] (அனைத்து அடுக்குகளையும் நிறைவு செய்து), (3 கட்டுரைகள் 2 பதிப்புகளிலும் வேறு வேறு அளவுகளிலும் இருந்தது) மேலும் 74 கட்டுரைகள் வளர்ச்சியில் இருந்தது.
ஜூன் 2008-இல், சினெட் இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, நுபீடியா சிறந்த குறுகிய காலத்தில் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்ட இணையதளம் என்று குறிப்பிட்டிருந்தது.[4]
1999-ம் ஆண்டு இறுதியில் வேல்ஸ், இணையதளத்தில் கலைக்களஞ்சியம் உருவாக்க எண்ணம் கொண்டு, 2000-ம் ஆண்டு சனவரியில் சாங்கர் என்பவரை இப்பணிக்காக தேர்வு செய்தார்.[1] இத்திட்டம் மார்ச் 9, 2000-ம் திகதி பயன்பாட்டுக்கு வந்தது.[5] அதே ஆண்டில் நவம்பர் மாதம் வரையிலும், வெறும் இரண்டே முழுமையான கட்டுரைகள் பதிவேற்றப்பட்டிருந்தது.[6]
ஆரம்ப காலத்திலிருந்து, நுபீடியா ஒரு இலவச கலைக்களஞ்சியமாகவே இருந்தது,[5] போமிஸ் நுபீடியாவில் விளம்பரங்கள் சேர்ப்பதில் ஆர்வம் இருந்தது.[6] ஆரம்பத்தில் ஹோம்க்ரவும் உரிமையுடனும் (நுபீடியாவின் திறந்த உள்ளடக்க உரிமை), ரிச்சர்ட் ஸ்டால்மன் மற்றும் திறந்த மூல மென்பொருட்கள் கூட்டமைப்பின் வலியுறுத்தலின் காரணமாகவும் சனவரி 2001 முதல், குனூ உரிமைக்கு மாற்றப்பட்டது.[7]
மேலும், 2001-ம் ஆண்டு சனவரியில் நுபீடியா, விக்கிப்பீடியா என்னும் புதிய திட்டத்தினை பல்முனை கண்காணிப்பு இன்றி தொடங்கியது.[8] இத்திட்டம் ஜி. என். இ. கலைக்களஞ்கசியத்தினை விட வேறு வகையில் இருந்தது. அதனால், விக்கிப்பீடியாவை அந்நிறுவனம் தன்னுடைய போட்டியாக கருதவில்லை. விக்கிப்பீடியா வளர வளர அதிகமான பங்களிப்பாளர்களை கொண்டது, மேலும் இது தனித்துவத்துடன் விளங்கிய காரணத்தால், நுபீடியாவில் இருந்து பிரிந்து தன்னிச்சையாக செயல்படத் துவங்கியது.
விக்கிப்பீடியாவின் அபரிவிதமான வளர்ச்சி, ஜி. என். இ. திட்டத்தினை நிறுத்தியதோடு இல்லாமல், நுபீடியாவையும் முடிவுக்கு கொண்டு வந்தது. இணைய பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, ஜிம்மி வேல்ஸ் தனது முதன்மை தொகுப்பாளருக்கு திசம்பர் 2001 முதல் ஊதியத்தை நிறுத்தினார்[1] அதன்பிறகு, சாங்கர் இருதிட்டங்களிலிருந்தும் வெளியேரினார். சாங்கர் வெளியேரிய பிறகும் நுபீடியா மதிப்பு குறையத் தொடங்கியது, விக்கிப்பீடியா உயரத் தொடங்கியது. நுபீடியாவில் 2001-ம் ஆண்டு வரை, இரண்டே இரண்டு கட்டுரைகள் மட்டும் அனைத்து அடுக்குகளையும் தாண்டியிருந்தது. நுபீடியாவின் செயலின்மை காரணமாக, விக்கிப்பீடியாவை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பிறகு நிலைபெற்ற பதிப்பாக மாற்றும் திட்டம் கைவிடப்பட்டது. 2003-ம் ஆண்டு, செப்டம்பர் 26-ம் திகதி நுபீடியாவின் இணையதளமான nupedia.com நிறுத்தப்பட்டது.
நுபீடியா ஏழு அடுக்குகளாக அதன் தொகுத்தல் பணியை பிரித்திருந்தது.
நுபீடியாவில் எழுதுவதற்கு அந்த துறை சார்ந்த நிபுணர்களாக இருக்க வேண்டும், (பட்டம் பெற்றவர்களை விட கட்டுரைகளை ஒரு நல்ல எழுத்தாளர் எழுதிட முடியும் என்று ஒப்பு இருந்தது)[9] ஒவ்வொரு துறைகளில் உண்மையான நிபுணர்கள் மற்றும் (சில விதி விலக்குகளை தவிர) முனைவர் பெற்றிருக்க வேண்டும் என்ற கொள்கையையும் வைத்திருக்கிறார்கள்.[10]
நுபீடியா, நூப்கோட்(NupeCode) என்னும் ஒருங்கிணைப்பு மென்பொருளால் உருவாக்கப்பட்டது. நூப்கோட், ஒரு கட்டற்ற திறல்மூல நிரல் மென்பொருளாகும், குனூ உரிமத்தின் கீழ் வெளிவந்த பல்முனை தொகுக்கும் மென்பொருளாகும். இதனுடைய நிரல், நுபீடியா வாயிலாக உபயோகப்படுத்த போதிலும், போதுமான மென்பொருள் வசதியின்மை காரணமாகவும், நுபீடியாவில் இல்லாத இணைப்புகளும், மற்ற பக்கங்களை இணைக்கும் பக்கங்களை இணைக்கும் இணைப்பும் ஒரே மாதிரியாக இருந்ததாலும், இத்திட்டம் தோல்வியைத் தழுவியது.
இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக, நநுபீடியா, சோர்ஸ்போர்ஜ் தளத்தில் ஆய்வில் உள்ளது, ஆயினும், பழைய குறைகள் அனைத்தும் இதிலும் நிவர்த்தி செய்யப்படவில்லை.
Seamless Wikipedia browsing. On steroids.