நீலகிரி அணில்
இந்தியா மற்றும் இலங்கையில் காணப்படும் ஒரு அணில் இனம் / From Wikipedia, the free encyclopedia
நீலகிரி அணில் (Funambulus sublineatus) அல்லது நீலகிரி வரி அணில் இந்திய அணில் வகைகளுள் ஒன்றாகும். இவ்வினமும் இலங்கையிலுள்ள மங்கிய வரி அணில் இனமும் (Funambulus obscurus) ஒரே இனத்தின் துணையினங்களாக முன்பு கருதப்பட்டது. இப்போது மரபணு ஆய்வுகளின்படி அவற்றைத் தனித்தனி இனங்களாக அறிந்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சி மலையில் சில பகுதிகளில் மட்டும் உள்ளக விலங்காக இருப்பதாலும் மிகச்சிறியதாக இருப்பதாலும் நீலகிரி வரி அணில்களைக் காண்பது அரிதாக உள்ளது. இதன் மலையாளப் பெயர் குஞ்ஞன் அண்ணான் (കുഞ്ഞൻ അണ്ണാൻ) என்பதாகும்.
நீலகிரி அணில் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Funambulus |
இனம்: | F. sublineatus |
இருசொற் பெயரீடு | |
Petinomys fuscocapillus (Waterhouse, 1838) | |
Subspecies | |
அடிக்குறிப்பில்[2] | |
வேறு பெயர்கள் | |
Funambulus kathleenae Thomas & Wroughton, 1915 |