From Wikipedia, the free encyclopedia
நாணு பிள்ளை (Nanoo Pillai) (1827–1886) இவர் திருவிதாங்கூரின் அரசியல்வாதி ஆவார். இவர் 1877 முதல் 1880 வரை திருவிதாங்கூரின் திவானாகப் பணியாற்றினார்.
திவான் நாணு பிள்ளை | |
---|---|
திருவிதாங்கூரின் திவான் | |
பதவியில் 1877–1880 | |
ஆட்சியாளர் | ஆயில்யம் திருநாள்[1] |
முன்னையவர் | சர் அ. சேசைய்ய சாத்திரி |
பின்னவர் | வெ. இராமையங்கார் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1827 நெய்யூர், கன்னியாகுமரி தெற்குப் பிராந்தியம், திருவிதாங்கூர் |
இறப்பு | 1886 திருவிதாங்கூர் |
நாணு பிள்ளை 1827 ஆம் ஆண்டில் திருவிதாங்கூரின் நெய்யூர் கிராமத்தின் நாயர் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை காரியவிளை நாகன் தம்பி, தாயார் ஈஸ்வரி பிள்ளை[2]. இவர் ஆரம்பக்கல்வியை வீட்டிலேயே தனிப்பட்ட முறையில் கற்றார். நாகர்கோவிலில் இலண்டன் மிசினரி சங்கத்திற்குப்பட்ட கல்லூரியில் ஆங்கிலத்தைக் கற்றார். இளம் வயதில், இவர் ஆங்கில அரசப் பிரதிநிதியான தளபதி கல்லனின் கவனத்தை ஈர்த்தார். அவரிடம் மொழிபெயர்ப்பாளராகவும் பின்னர் அவரது அலுவலகத்தில் செயலாளராகவும் பணியாற்ற முன்வந்தார். [3]
கல்லனின் அலுவலகத்தில் 14 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, நாணு பிள்ளை திருவிதாங்கூரின் அரசுப் பணியில் உதவி சிரஸ்தாராகச் சேர்ந்தார். அப்போதைய திவான், சர் டி. மாதவ ராவின் வலுவான பரிந்துரையுடன், நானூ பிள்ளை தெற்குப் பிரிவின் திவான் பேசுகராக பதவி உயர்வு பெற்றார். பின்னர், இவர் திருவிதாங்கூர் பிரிவுக்கு மாற்றப்பட்டு, ஆறு சந்தர்ப்பங்களில் மாதவ ராவ் இல்லாத நிலையில் பொறுப்பு திவானாக பணிபுரிந்துள்ளார். 1877 ஆகத்தில் சேசைய்ய சாத்திரி ஓய்வு பெற்றதும் திவானாக நியமிக்கப்பட்டார். [4]
இவரது முதல் முயற்சி மக்களின் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதாகும். திருவிதாங்கூரின் திவானாகப் பதவியேற்றதும், நாணு பிள்ளை வருவாய் தீர்வில் சில சீர்திருத்தங்களை கொண்டு வந்து பதிவேடுகளை மாற்றுவதை அறிமுகப்படுத்தினார். நெல் சாகுபடியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட இவர், தெற்குப் பிராந்தியத்தில் (குறிப்பாக நாஞ்சிநாட்டில்) நீர்ப்பாசனம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் கொண்டு வந்தார்.
1880 இல் ஓய்வு பெறுவதற்கு முன்னர், இவர் கோத்தையாறு பகுதியை ஆய்வு செய்து பொன்னமணை அணை மற்றும் பேச்சிப்பாறை அணை ஆகியவற்றை கட்ட ஒரு திட்டத்தை வகுத்தார். தென்னிந்தியாவில் முதல் தொங்கும் பாலமான புனலூர் தொங்கும் பாலம் கட்ட இவர் முயற்சி மேற்கொண்டார்.
திருவனந்தபுரத்தின் வளர்ச்சியில் ஆர்வம் காட்டிய இவர் பல புதிய கட்டிடங்கள், பாலங்கள் ஆகியவற்றைக் கட்டினார். வருவாய் தீர்வு முறைமையில் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். போகிமொன் விதி இவர் கொண்டு வந்த குறிப்பிடத்தக்க சீர்திருத்தமாகும். நீதித்துறையை மேலும் திறமையாக்க நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. மகாராஜா ஆயில்யம் திருநாள் ராம வர்மாவுக்குப் பிறகு 1880 செப்டம்பர் 15, அன்று அவர் திவான் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் மகாராஜா ஆன விசாகம் திருநாள், நாணு பிள்ளையை மீண்டும் திவான் பதவியில் அமர்த்தும் பணியைத் தொடங்கினார், ஆனால் பலனளிக்கவில்லை. [2]
ஜான் டேனியல் மன்ரோ என்ற வெளிநாட்டவருக்கு பூஞ்சார் காட்டை கண்ணன் தேவன் வனப்பகுதியாக மாற்ற அனுமதி அளித்தது நானு பிள்ளைதான்.
இவர் ஒரு வரலாற்றாசிரியராகவும் இருந்தார். திருவிதாங்கூர் வரலாறு என்ற புத்தகத்தின் பணிகளைத் தொடங்கினார். ஆனால் புத்தகம் முடிவடைவதற்கு முன்பே இவர் இறந்ததால் அதை வெளியிடவில்லை.
Seamless Wikipedia browsing. On steroids.