From Wikipedia, the free encyclopedia
நாகாலாந்தின் சட்டமன்றம், இந்திய மாநிலமான நாகாலாந்தின் சட்டவாக்க அவையாகும். நாகாலாந்தில் சட்டவாக்க அவை ஓரவை முறைமை உடையதால், சட்ட மேலவை கிடையாது. சட்டமன்றம் மட்டுமே செயல்படும். இந்த சட்டமன்றம் 1964ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த மன்றத்தில் 60 உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஒருவர் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒரு தொகுதியில் அதிக வாக்குகளை பெறுபவர், அந்த தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினராகிறார்.[5]
நாகாலாந்தின் சட்டமன்றம்
Legislative Assembly of Nagaland | |
---|---|
வகை | |
வகை | |
தலைமை | |
சபாநாயகர் | ஷரிங்கெய்ன் லாங்குமர், நாகாலாந்து ஜனநாயக மக்கள் முன்னணி பிப்ரவரி 7, 2020 முதல் |
துணை சபாநாயகர் | |
முதல்வர் | நெய்பியு ரியோ , நாகாலாந்து ஜனநாயக மக்கள் முன்னணி 8 மார்ச் 2018 முதல் |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 60 |
அரசியல் குழுக்கள் | அரசு (60)
|
தேர்தல்கள் | |
இந்திய வாக்களிப்பு மூறை | |
அண்மைய தேர்தல் | 27 பிப்ரவரி 2023 |
அடுத்த தேர்தல் | 2028 |
கூடும் இடம் | |
சட்டமன்றக் கூடம் | |
வலைத்தளம் | |
நாகாலாந்து சட்டமனறத்தை பற்றி |
இந்த மன்றத்தில் யாரும் நியமிக்கப்படுவதில்லை. (பாராளுமன்றத்திலும் மற்ற சில மாநிலங்களிலும் குடியரசுத் தலைவராலும், ஆளுநராலும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதுண்டு.) ஒவ்வொரு உறுப்பினர்களும் அதிகபட்சமாக ஐந்தாண்டு காலம் வரை பதவியில் இருப்பர். அரசின் தலைமைச் செயலகம் கோகிமாவில் உள்ளது. சட்டமன்றக் கட்டிடமும் கோகிமாவில் உள்ளது. இந்த சட்டமன்றத்தின் தற்போதைய சபாநாயாகராக கியனிலி பெசியீ என்பவர் பதவி வகிக்கிறார்.[6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.