நவாபாக்கு காந்தர்பல்
இந்தியாவின் காசுமீரில் உள்ள ஒரு பகுதி From Wikipedia, the free encyclopedia
இந்தியாவின் காசுமீரில் உள்ள ஒரு பகுதி From Wikipedia, the free encyclopedia
நவாபாக்கு (Nawabagh Ganderbal) என்பது இந்தியாவின் சம்மு காசுமீர் மாநிலத்தின் இருபத்தி இரண்டு மாவட்டங்களில் ஒன்றான காந்தர்பல் மாவட்டத்தில் உள்ள ஓர் அறிவிக்கப்பட்ட பகுதியும் கிராமமும் ஆகும். இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படும் ஆப்பிள், செர்ரி, பீச், ஆப்ரிகாட், அக்ரூட் பருப்புகள் மற்றும் பேரிக்காய் ஆகியவற்றின் உற்பத்திக்கு நவாபாக்கு பிரபலமான இடமாகும். அமெரிக்க ஆப்பிள், சுவையான ஆப்பிள், கோல்டன் ஆப்பிள், குலு சுவை ஆப்பிள், அமுர், ரெட் கோல்டு, இரசாக்கு வாரி மற்றும் மகாராசி போன்ற பல ஆப்பிள் வகைகள் இப்பகுதியில் விளைகின்றன. இப்பகுதியின் அஞ்சல் குறியீடு 193501. [5]
நவாபாக்கு காந்தர்பல் Nawabagh Ganderbal | |
---|---|
Location in சம்மு காசுமீர், இந்தியா | |
ஆள்கூறுகள்: 34.218202°N 74.6878748°E | |
நாடு | இந்தியா |
ஒன்றியப் பகுதி | சம்மு காசுமீர் |
மாவட்டம் | காந்தர்பல் |
குடியிருப்பு | பண்டைய காலம் |
ஏற்றம் | 1,619 m (5,312 ft) |
மொழிகள் | |
• அலுவல் | காசுமீரி, உருது, இந்தி, தோக்ரி, ஆங்கிலம்[1][2] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் | 193501 |
தொலைபேசிக் குறியீடு | 0194 |
தில்லியிலிருந்து தொலைவு | 865 கிலோமீட்டர்கள் (537 mi)[3] |
மும்பையிலிருந்து தொலைவு | 2,227 கிலோமீட்டர்கள் (1,384 mi)[4] |
மும்பையில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1619 மீ உயரத்தில் நவாபாக்கு அமைந்துள்ளது. [6] வகுரா, பட்வினா, இயசுனா, பாதாம்போரா, கான்புரா, மனசுபல், வசுகுரா, அகான், கர்பாக் மற்றும் கசூமா ஆகிய கிராமங்கள் நவாபாக்கு பகுதிக்கு அருகிலுள்ள கிராமங்களாகும்.
இக்கிராமத்தில் சுமார் 800 எண்னிக்கைக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட 85 குடும்பங்கள் வசிக்கின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்களின் தாய் மொழி காசுமீரியாகும். மக்கள் இந்தி/உருது மற்றும் ஆங்கிலத்தையும் பயன்படுத்துகின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.