நவாதா

From Wikipedia, the free encyclopedia

நவாதாmap

நவாதா (Nawada), வட இந்தியாவில் உள்ள பிகார் மாநிலத்தின் தெற்கில் உள்ள நவாதா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[2]இந்நகரத்தில் கூரி ஆறு பாய்கிறது. இது மாநிலத் தலைநகரான பாட்னாவிற்கு தென்கிழக்கே 108 கிலோ மீட்டர் தொலைவிலும்; கயைக்கு கிழக்கே 59.2 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

விரைவான உண்மைகள் நவாதா, நாடு ...
நவாதா
நகரம்
Thumb
கடிகாரச் சுற்றுப்படி, மேலிருந்து:பிரஜாதந்திர துவார், கூரி ஆற்றுப் பாலம், பகத் சிங் சதுக்கம், தூர்தர்சன் கேந்திரம்க், நவாதா இரயில் நிலையம்
Thumb
நவாதா
நவாதா
இந்தியாவின் பிகார் மாநிலத்தில் நவாதா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 24.88°N 85.53°E / 24.88; 85.53
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
பிரதேசம்மகதம்
மாவட்டம்நவாதா
வார்டுகள்33
அரசு
  வகைநகராட்சி
  நிர்வாகம்நவாதா நகராட்சி
ஏற்றம்
80 m (260 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
  மொத்தம்98,029
மொழிகள்
  அலுவல் மொழிஇந்தி மொழி உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
805110,805111
தொலைபேசி குறியீடு எண்06324
ஐஎசுஓ 3166 குறியீடுIN-BR
வாகனப் பதிவுBR-27
இணையதளம்nawada.nic.in
மூடு

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 33 வார்டுகளும், 15,399 வீடுகளும் கொண்ட நவாதா நகரத்தின் மக்கள் தொகை 98,029 ஆகும். அதில் ஆண்கள் 51,367 மற்றும் பெண்கள் 46,662 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 908 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 81.6% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,225 மற்றும் 67 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 68.21%, இசுலாமியர் 31.08% மற்றும் பிறர் 0.61% ஆகவுள்ளனர். இந்நகர மக்கள் இந்தி மொழி மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.[3]

சாலைப் போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை எண் 31 நவாதா நகரம் வழியாகச் செல்கிறது.

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.