நடுச் சாவகம்
இந்தோனேசிய மாகாணம் / From Wikipedia, the free encyclopedia
நடுச் சாவகம் (சாவகம்: ꦗꦮꦠꦼꦔꦃ; இந்தோனேசியம்:ஜாவா தெஙா (Jawa Tengah), சுருக்கம்: ஜாத்தெங் ) இந்தோனேசியாவின் மாகாணங்களில் ஒன்றாகும். இந்த மாகாணம் சாவகத் தீவின் நடுவில் அமைந்துள்ளது. செமாராங் இதன் நிருவாகத் தலைநகரமாகும்.
நடுச் சாவகம்
Jawa Tengah ꦗꦮꦠꦼꦔꦃ | |
---|---|
மாகாணம் | |
குறிக்கோளுரை: ꦥꦿꦱꦺꦠꦾꦈꦭꦃꦱꦏ꧀ꦠꦶꦨꦏ꧀ꦠꦶꦥꦿꦗ (சாவகம்) (meaning: A vow of devotion with all might to the country) | |
Location of Central Java in Indonesia | |
ஆள்கூறுகள்: 7°30′S 110°00′E | |
நாடு | இந்தோனேசியா |
Established | ஆகத்து 15, 1950 |
தலைநகரம் | செமராங் |
அரசு | |
• நிர்வாகம் | நடுச் சாவக மாகாண அரசாங்கம் |
• ஆளுநர் | கஞ்சர் பிரனவோ |
• துணை ஆளுனர் | ஹெரு சுட்ஜாமோக்கோ |
பரப்பளவு | |
• மொத்தம் | 32,800.69 km2 (12,664.42 sq mi) |
உயர் புள்ளி | 3,428 m (11,247 ft) |
மக்கள்தொகை (2014) | |
• மொத்தம் | 3,37,53,023 |
• தரவரிசை | 3rd |
• அடர்த்தி | 1,000/km2 (2,700/sq mi) |
மக்கள் தொகையியல் | |
• இனக்குழுக்கள் | சாவகர் (98%), சுண்டா இனத்தவர் (1%), சீனர் (1%) |
• மதம் | இசுலாம் 95.74%, கிறித்தவம் 4.95%, இந்துக்கள் 0.05%, பௌத்தம் 0.22%, கொன்பூசியம் 0.03%, கெச்சாவென் |
• மொழிகள் | இந்தோனேசிய மொழி (அலுவல்) சாவகம் (மொழி) (பூர்வீகம்) பஞுமாசியம் (பிராந்தியம்) கெடு (பிராந்தியம்) சுண்டா மொழி (பிராந்தியம்) |
நேர வலயம் | ஒசநே+7 |
இடக் குறியீடு | (62)2xx |
ஐஎசுஓ 3166 குறியீடு | ID-JT |
பரப்பளவில் பெரிய நகரம் | செமாராங் - 373.78 சதுர கிலோமீட்டர்கள் (144.32 sq mi) |
மக்கள் தொகையில் பெரிய நகரம் | செமாராங் - (1,555,984 - 2010) |
பரப்பளவில் பெரிய நிர்வாகப்பிரிவு | கிலாகப் பிராந்தியம் - 2,124.47 சதுர கிலோமீட்டர்கள் (820.26 sq mi) |
மக்கள் பிராந்தியப் பெரு நிருவாகப் பிரிவு | பிரிபீசு பிராந்தியம் - (1,733,869 - 2010) |
இணையதளம் | Government official site |
இந்த மாகாணமானது 32,800.69 கி.மீ. பரப்பளவில் உள்ளது, இது சாவகத்தின் மொத்த நிலப்பரப்பில் அண்ணளவாக கால்வாசி ஆகும். 2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அதன் மக்கள் தொகை 33,753,023 ஆகும்; இது மேற்குச் சாவகத்துக்கும் கிழக்குச் சாவகத்துக்கும் பிறகு சாவகத்திலும் ஒட்டுமொத்த இந்தோனேசியாவிலும் மூன்றாவதாக கூடிய மக்கள் தொகை கொண்ட மாகாணமாகும்.
பண்பாட்டு அடிப்படையில் நடுச் சாவகம் என்பது யோகியாகார்த்தா நகரமும் சிறப்பு பகுதியும் நடுச் சாவக மாகாணமும் அடங்கியதாகும். இருப்பினும் இந்தோனேசிய சுதந்திரத்திலிருந்து நிருவாக அடிப்படையில் யோகியாகார்த்தா நகரமும் அதனைச் சுற்றியுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளும் தனித்துவமான சிறப்புப் பகுதியை (மாகாணத்திற்கு சமமானதை) உருவாக்கி தனித்தனியாக நிர்வகிக்கப்படுகின்றன.