இசுக்காண்டியத்தின் கனிமம் From Wikipedia, the free encyclopedia
தோர்ட்வெய்தைட்டு (Thortveitite) என்பது (Sc,Y)2Si2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமம் ஆகும். இசுக்காண்டியம் இட்ரியம் சிலிக்கேட்டைப் பகுதிப்பொருளாகக் கொண்ட இக்கனிமமே இசுக்காண்டியத்தின் முதன்மையான ஆதார மூலப்பொருளாகும். பாறை போன்ற பெக்மாதைட்டுகளாக தோன்றும் இக்கனிமத்தை நார்வே நாட்டு பொறியாளர் ஒலாசு தோர்ட்வெய்ட் கண்டறிந்ததால் இப்பெயர் பெற்றது. சாம்பல்-பச்சை, கருப்பு அல்லது சாம்பல் நிறத்தில் தோர்ட்வெய்தைட்டு கனிமம் காணப்படுகிறது.
தோர்ட்வெய்தைட்டு Thortveitite | |
---|---|
தோர்ட்வெய்தைட்டு | |
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | (Sc,Y)2Si2O7 |
இனங்காணல் | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவு |
மோவின் அளவுகோல் வலிமை | 5-6 |
மிளிர்வு | கண்ணாடி போன்ற பளபளப்பு |
கீற்றுவண்ணம் | சாம்பல் |
ஒப்படர்த்தி | 3.3-3.8 |
2004 ஆம் ஆண்டில் ஒளிபுகும் இரத்தினம் போன்ற தரத்தில் தோர்ட்வெய்தைட்டு கனிம மாதிரியொன்று கண்டறியப்பட்டது. 2008 ஆம் ஆண்டு வெளிவந்த மணிக்கற்கள் ஆய்விதழின் தொகுதி 31 இல் இதைப்பற்றிய குறிப்பும் காணப்படுகிறது.
பன்னாட்டு கனிமவியல் சங்கம் தோர்ட்வெய்தைட்டு கனிமத்தை Tvt[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.