தேரை அனுரா வரிசையின் பலவகை நிலநீர் வாழிகளின் இனங்களைக் குறிக்கும். இவற்றிற்கும் தவளைகளுக்கும் இடையே வறண்ட சூழலிலும் வாழக்கூடிய வகையிலான தேரைகளின் உருவைக் கொண்டு வேறுபடுத்தப்படுகின்றன. கல்லினுள் தேரைக்கும் உணவு வழங்கும் இறைவனைக் குறித்தப் பாடல் இவை வாழும் சூழலை எடுத்தியம்புவதாக உள்ளது. இவற்றின் தோல் நீரை தேக்கிக்கொள்ளும்விதமாக தடித்துக் காணப்படுகிறது. மேலும் வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்ள பழுப்பு நிறத்தைக் கொண்டுள்ளது. அவற்றின் தோலில் பருக்கள் போன்ற வெளியுடல் சுரப்பிகள் உள்ளன. மேலும் தாவுகின்ற தவளைகள் போலன்றி இவை கால்களைக் கொண்டு நடக்கின்றன. குளிர்காலங்களில் தங்கள் தோலைப் பாதுகாக்க வளைகளில் பதுங்குகின்றன. தேரைகளுக்குக் கண்களுக்குப் பின்னால் ஒரு சிறு நஞ்சுச் சுரப்பி அமைந்திருக்கும். இவற்றின் எதிரிகளிடமிருந்து தப்பிக்க இந்தத் தற்காப்பானது பயன்படுகிறது. மனிதர்களுக்கு இந்த நச்சு சுரபியினால் எவ்வித ஆபத்தும் இல்லை.[1] ஆனால் இவை இவ்வினத்தின் வரலாற்றைப் பாதிப்பதில்லை. உயிரியல் வகைப்பாடு ஓரினத்தின் வளரும் மாற்றங்களை மட்டுமே கருத்தில் கொள்வதால் தேரைகளும் தவளைகளும் ஒரே வகைப்பாட்டில் உள்ளன.
தேரைகள் | |
---|---|
பொதுவான தேரை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | அனுரா Merrem, 1820
அனுரா வரிசையைச் சேர்ந்தவை பட்டியல் |
மேலும் படிக்க
- Beltz, Ellin (2005). Frogs: Inside their Remarkable World. Firefly Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1552978699.
இந்தக் கட்டுரை தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: "தேரை". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press.
வெளி இணைப்புகள்
தேரையும் தேரையர்களும்: சில தமிழ் மரபுகளின் குறிப்புகள் சுந்தர் காளி, இந்து தமிழ் rasi love
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.