From Wikipedia, the free encyclopedia
தெற்குப் பிரதேசம் (Southern Nations, Nationalities, and Peoples' Region) (சுருக்கமாக: SNNPR) கிழக்கு ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியாவின் தெற்கில் அமைந்த பிரதேசம் ஆகும். இதன் தலைநகரம் ஹவாஸ்சா நகரம் ஆகும். ஹவாஸ்சா நகரம் இப்பிரதேசத்திற்கு வெளியே அமைந்த சிதாமா பிரதேசத்தில் உள்ளது.[5] இப்பிரதேசம் 21 சூன் 1992 அன்று நிறுவப்பட்டது.[6] இப்பிரதேசத்தை நிர்வகிக்க ஆளுநர் தலைமையிலான பிரதேச சட்டமன்றம், நீதிமன்றம் செயல்படுகிறது. இப்பிரதேசத்தின் பெரிய நகரம் அர்பா மிஞ்ச் நகரம் ஆகும்.
தெற்குப் பிரதேசம்
Southern Nations, Nationalities and Peoples' Region ደቡብ ብሔሮች ብሔረሰቦችና ሕዝቦች ክልል | |
---|---|
பிரதேச மாகாணம் | |
எத்தியோப்பியாவின் தெற்கின் பிரதேசத்தின் அமைவிடம் | |
நாடு | எதியோப்பியா |
தலைநகரம் | ஹவாஸ்சா |
பரப்பளவு | |
• மொத்தம் | 54,400 km2 (21,000 sq mi) |
[1] | |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 91,26,000[2] |
[3] | |
ஐஎசுஓ 3166 குறியீடு | ET-SN |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019) | 0.488[4] low • 6th of 11 |
தெற்குப் பிரதேசத்தின் தெற்கில் கென்யா நாடும், தென் மேற்கில் தெற்கு சூடான் நாடும் வடக்கிலும், கிழக்கிலும் ஒரோமியா பிரதேசம், மேற்கில் தென்மேற்குப் பிரதேசம் எல்லைகளாக உள்ளது.
2007-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுபின்படி, 105,887 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 3,110,995 குடியிருப்புகளும் கொண்ட தெற்கு பிரதேசத்தின் மக்கள் தொகை f 14,929,548 ஆகும். அதில் ஆண்கள் 7,425,918 மற்றும் பெண்கள்7,503,630 ஆக உள்ளனர். 89.98% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 141 மக்கள் வாழ்கின்றனர். 2017-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 19,170,007 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.[2]
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1994 | 1,03,77,028 | — |
2007 | 1,49,29,548 | +43.9% |
2017 | 1,91,70,007 | +28.4% |
source:[7] |
சமயம் | 1994 கணக்கெடுப்பு | 2007 கணக்கெடுப்பு |
---|---|---|
சீர்திருத்த கிறித்துவர்கள் | 34.8% | 55.5% |
பழைமைவாத கிறித்தவர்கள் | 55.6% | 52.86% |
இசுலாமியர்கள் | 16.7% | 14.12% |
பாரம்பரிய சமயத்தினர் | 15.4% | 6.6% |
ரோமன் கத்தோலிக்க கிறித்தவர்கள் | 3% | 2.4% |
பிற சமயத்தினர் | — | 1.5% |
மக்கள் | 1994 கணக்கெடுப்பு | 2007 கணக்கெடுப்பு[3] |
---|---|---|
வெலாயுத மக்கள் | 12% | 10.59% |
ஹதியா மக்கள் | - | 7.98% |
குர்ராஜ் மக்கள் | 15% | 19.54% |
கமோ மக்கள் | - | 7% |
கபிச்சோ மக்கள் | - | 5.44% |
சில்ட்தே மக்கள் | - | 5.37% |
அம்மாரா மக்கள் | - | 4.10% |
தெற்கு பிரதேசத்தில் பெரும்பான்மையாக சிதாமா மொழி 19.59%, வெலாயுத மொழி 10.48%, ஹதியா மொழி 8%, குராஜ் மொழி 7.13%, காமோ மொழி 6.9%, காபா மொழி 5.36% மற்றும் அம்மாரா மொழியை 4.10% மக்களால் பேசப்படுகிறது.
2004–2005 ஆண்டின் கணக்குப்படி, தெற்குப் பிரதேசத்தில் 100,338 டன்கள் காபிக் கொட்டை உற்பத்தி செய்யப்பட்டது. இது எத்தியோப்பியாவின் மொத்த காபிக் கொட்டை உற்பத்தியில் 44.2% ஆகும். தெற்கு பிரதேசத்தில் மொத்த கால்நடைகள் 7,938,490 ஆகும். இது எத்தியோப்பாவின் மொத்த கால்நடைகளில் 20.5% ஆகும்.[8]பெரிய வாழை தெற்கு பிரதேசத்தின் மிகப்பெரிய வேளாண்மைப் பயிர் ஆகும்.
தெற்குப் பிரதேசம் நிர்வாக வசதிக்காக மண்டலங்களாகவும், மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.[9]
வரிசை எண் | மண்டலம் | தலைமையிடம் |
---|---|---|
1 | காமோ மண்டலம் | அர்பா மிஞ்ச் |
2 | கோபா மண்டலம் | சவுலா |
3 | கெதியோ மண்டலம் | தில்லா |
4 | குராஜ் மண்டலம் | வெல்கைட் |
5 | ஹதியா மண்டலம் | ஹோசைனா |
6 | கெம்பட்டா மண்டலம் | துராமே |
7 | சில்ட்டே மண்டலம் | வொராபி |
8 | தெபுப் ஒமோ மண்டலம் | ஜிங்கா |
9 | வெலாயுதா மண்டலம் | சோடோ |
10 | அலபா மண்டலம் | ஹலபா குலிதோ |
11 | அம்ரோ சிறப்பு மண்டலம் | கேலே |
12 | அல்லே சிறப்பு மண்டலம் | |
13 | பாஸ்கேதோ சிறப்பு மண்டலம் | லஸ்கா |
14 | புர்ஜி சிறப்பு மண்டலம் | சோயாமா |
15 | திரேசே சிறப்பு மண்டலம் | கில்தோலே |
16 | கோன்சோ மண்டலம் | காரத் |
17 | யெம் சிறப்பு மண்டலம் | போபா |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.