From Wikipedia, the free encyclopedia
தெற்கு லெய்டே (Southern Leyte) என்பது பிலிப்பீன்சின் விசயாசின், கிழக்கு விசயாசுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் மாசின் ஆகும். இம்மாகாணம் 1956 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் ரோஜர் மெர்காடோ ( Roger Mercado) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 1,798.61 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக தெற்கு லெய்டே மாகாணத்தின் சனத்தொகை 421,750 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 65ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 62ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 500 கிராமங்களும், 18 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு, ஆங்கிலம் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. இமாகாணத்தில் வருடாந்தம் 200,000 சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இம்மாகாணத்தின் கடற்கரையோரங்களில் பல ஹோட்டல்களும் காணப்படுகின்றன. இஹ்ஹோட்டல்கள் சுற்றுலாத்துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.[3]
தெற்கு லெய்டே | |
---|---|
மாகாணம் | |
நாடு | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | கிழக்கு விசயாசு |
நேர வலயம் | ஒசநே+8 (PHT) |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.