From Wikipedia, the free encyclopedia
துவாலு (Tuvalu,IPA: [t:u:'valu]), என்பது பசிபிக் கடலில் ஹவாய்க்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடுவில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இது முன்னர் எலீஸ் தீவுகள் என அழைக்கப்பட்டது. இதன் அயல் நாடுகளாக கிரிபட்டி, சமோவா மற்றும் பீஜி ஆகியன அமைந்துள்ளன. துவாலுவில் மொத்தம் நான்கு தீவுகள் உள்ளன. மொத்தப் பரப்பளவு 26 சதுர கிமீ ஆகும். இதுவே வத்திக்கானை அடுத்து உலகின் இரண்டாவது மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடாகும். ஐநா அவையில் உறுப்புரிமை கொண்ட மிகக் குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட நாடு. உலகின் நான்காவது மிகச்சிறிய நாடு.
துவாலு | |
---|---|
குறிக்கோள்: "Tuvalu mo te Atua" (துவாலுவான்) "Tuvalu for the Almighty" | |
நாட்டுப்பண்: Tuvalu mo te Atua (Tuvaluan) Tuvalu for the Almighty | |
தலைநகரம் மற்றும் பெரிய நகரம் | புனாபுட்டி 8°31′S 179°12′E |
ஆட்சி மொழி(கள்) |
|
இனக் குழுகள் |
|
சமயம் | கிறிஸ்தவம் (Church of Tuvalu)[1] |
மக்கள் | துவாலுவான் |
அரசாங்கம் | ஒருமுக கட்சி சார்பற்ற நாடாளுமன்ற அரசியல்சட்ட முடியாட்சி |
• முடியாட்சி | சார்லசு III |
• அளுனர்-நாயகம் | டோஃபிகா வேவாலு ஃபலானி |
• பிரதமர் | கௌசியா நடனோ |
சட்டமன்றம் | நாடாளுமன்றம் |
விடுதலை | |
• ஐ.இ. இடமிருந்து | 1 அக்டோபர் 1978 |
பரப்பு | |
• மொத்தம் | 26 km2 (10 sq mi)[2] (192வது) |
• நீர் (%) | negligible |
மக்கள் தொகை | |
• 2021 மதிப்பிடு | 11,900 (225வது) |
• 2017 கணக்கெடுப்பு | 10,645 |
• அடர்த்தி | 475.88/km2 (1,232.5/sq mi) (27வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2016 மதிப்பீடு |
• மொத்தம் | $39 மில்லியன்[3] (226வது) |
• தலைவிகிதம் | $3,566[3] (156வது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2020 மதிப்பீடு |
• மொத்தம் | $45 மில்லியன்[3] (194வது) |
• தலைவிகிதம் | $2,970[3] (118வது) |
ஜினி (2010) | 39.1[4] மத்திமம் |
மமேசு (2021) | 0.641[5] மத்திமம் · 130வது |
நாணயம் |
|
நேர வலயம் | ஒ.அ.நே+12 |
வாகனம் செலுத்தல் | இடது பக்கம் |
அழைப்புக்குறி | +688 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | TV |
இணையக் குறி | .tv |
இந்நாட்டின் ஆதிமக்கள் பொலினேசியர்கள் ஆவார். 19ம் நூற்றாண்டின் இறுதியில் இத்தீவுகள் பிரித்தானியாவின் குடியேற்ற நாடாகியது. எலீஸ் தீவுகள் பிரித்தானியாவினால் 1892 முதல் 1916 வரை ஆளப்பட்டது. 1916இலிருந்து 1974 வரையில் இவை கில்பேர்ட் தீவுகளுடன் இணைந்து நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1974 இல் எலீஸ் தீவு மக்கள் தமது தீவை பிரித்தானிய ஆட்சிக்குட்பட்ட துவாலு என்ற தனித்தீவாக்க வாக்களித்தனர். இதன் படி 1978இல் இது பிரித்தானிய பொதுநலவாய நாடுகளின் கீழ் முழுமையான விடுதலை பெற்றது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.