துளு நாடு
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
துளு நாடு (ஆங்கிலம் : Tulu Nadu) கர்நாடகா மாநிலத்தின் கடற்கரை மாவட்டங்களான உடுப்பி மாவட்டம் மற்றும் தெற்கு கன்னடம் மாவட்டங்களை உள்ளடக்கியது. முன்னர் இது சேரநாட்டின் வடமேற்கில் அமைந்திருந்ததாகவும், கோசர் என்னும் அரசர்கள் இந்நாட்டை ஆண்டதாகவும் மாமூலனார் அகப்பாடல் கூறுகிறது.அகம் 15 இந்த கோசரே குடகக்கொங்கர், கொங்கிளங்கோசர் சிலம்பு 30 : 159 என்றும் அழைக்கப்படுவதால் இந்நாடு குடகுநாட்டையும் கொங்கு நாட்டையும் அண்டியிருந்ததாக தெரிகிறது.
துளு நாடு | |
---|---|
நிலப்பரப்பு | |
தற்போது துளு மொழி பேசப்படும் பகுதி- துளுநாடு (மஞ்சள் நிறம்). | |
ஆள்கூறுகள்: 13.00°N 75.40°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம், கேரளம் |
மாவட்டம் | தெற்கு கன்னடம், உடுப்பி, மற்றும் காசர்கோடு |
பெரிய நகரம் | மங்களூர் |
மாவட்டங்கள் மற்றும் வட்டங்களின் எண்ணிக்கை | 3 மாவட்டம் மற்றும் 18 வட்டங்கள் |
பரப்பளவு | |
• மொத்தம் | 10,432 km2 (4,028 sq mi) |
மக்கள்தொகை (2011)[3] | |
• மொத்தம் | 45,74,385 |
• அடர்த்தி | 356.1/km2 (922/sq mi) |
இனம் | |
மொழிகள் | |
• இணைப்பு மொழி | துளுவம் |
• பேச்சுமொழி | துளுவம், மலையாளம், கன்னடம், கொங்கணி, பியரி[4] |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
தொலைபேசி குறியீடு | 0824, 0825 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:IN |
வாகனப் பதிவு | KA19, KA20, KA21, KA62, KA70, KL14. |
துளுநாட்டில் கோசர் குடிமக்கள் வாழ்ந்தனர். அவர்கள் அந்நாட்டு வழியாகச் செல்பவர்களைப் பேணி விருந்தளித்துப் பாதுகாப்பர். துளுநாட்டில் மயில்கள் மிகுதி.[5]
இந்தச் செம்மற் கோசர் அக்காலத்தில் தமிழும் பேசத் தெரிந்த நான்மொழிக் கோசர்.
இது சங்ககால நிலைமை. கி.பி. 13ஆம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூலுக்கு 16ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய மயிலைநாதர் தமிழ் பேசப்படாத நிலங்கள் 17 என நன்னூல் நூற்பாவின் வழி சுட்டி அவை இவை எனப் பெயர் சொல்லிக் காட்டும்போது இந்தத் துளு நாட்டையும் குறிப்பிடுகிறார். [6]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.