தீபன் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
தீபன் (Dheepan) என்பது 2015 ஆம் ஆண்டில் வெளியான ஒரு பிரெஞ்சு மொழி நாடகத் திரைப்படம் ஆகும். இதனை சாக் ஆடியார் என்பவர் இயக்கினார். ஈழத்தமிழ் எழுத்தாளரும் முன்னாள் ஈழப் போராளியுமான அந்தோனிதாசன் யேசுதாசன், தமிழக மேடை நாடகக் கலைஞர் காளீசுவரி ஆகியோர் நடித்த இத்திரைப்படம் 2015 கான் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்துக்கான தங்கப் பனை (Palme d'Or) விருது வென்றது.[2][3][4][5][6]
விரைவான உண்மைகள் தீபன்Dheepan, இயக்கம் ...
தீபன் Dheepan | |
---|---|
இயக்கம் | சாக் ஆடியார் |
தயாரிப்பு | பாசுக்கல் காச்செட்டோ |
கதை | சாக் ஆடியார்டு தொமசு பிடிகெயின் நோயே டெப்ரே |
இசை | நிக்கொலாசு ஜார் |
நடிப்பு | அந்தோனிதாசன் யேசுதாசன் |
ஒளிப்பதிவு | எப்போனைன் மொமென்சோ |
படத்தொகுப்பு | யூலியட் வெல்பிளிங்கு |
கலையகம் | வை நொட் புரொடக்சன்சு பிரான்சு 2 சினிமா பேஜ் 114 |
விநியோகம் | யூஜிசி டிஸ்ட்ரிபியூசன்சு |
வெளியீடு | 21 மே 2015 (2015-05-21) (கேன்) 26 ஆகத்து 2015 (பிரான்சு) |
ஓட்டம் | 109 நிமி. |
நாடு | பிரான்சு |
மொழி | தமிழ் பிரெஞ்சு ஆங்கிலம்[1] |
மூடு
இலங்கையில் இருந்து பாரிசு வந்திறங்கிய தமிழ் ஏதிலிகள் மூவரின் வாழ்க்கைப் போராட்டத்தை மையமாகக் கொண்டது இத்திரைப்படத்தின் கதை.[1][7]