From Wikipedia, the free encyclopedia
திவேர் மாகாணம் (Tver Oblast, உருசியம்: Тверска́я о́бласть, துவெர்ஸ்கயா ஓப்லஸ்த்) என்பது உருசியாவின் நடுவண் அலகும், ஒரு உருசிய மாகாணமும் ஆகும். இதன் ஆட்சி மையம் துவெர் நகரம். 2010 ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதியின் மக்கள்தொகை 1,353,392 (2010 கணக்கெடுப்பு)[9]. 1935 முதல் 1990 வரை, இது கலினின் ஒப்லாஸ்து (Калининская область) என அறியப்பட்டுவந்தது. திவேர் மாகாணம் உருசியாவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடிய வட்டாரங்களில் ஒன்று ஆகும். இங்கு பல வரலாற்று சிறப்புமிக்க நகரங்கள் உள்ளன.
திவேர் மாகாணம் Tver Oblast | |
---|---|
Тверская область | |
பண்: எதுவுமில்லைஉ[1] | |
நாடு | உருசியா |
நடுவண் மாவட்டம் | மத்திய[2] |
பொருளாதாரப் பகுதி | மத்திய][3] |
நிர்வாக மையம் | திவேர்[4] |
அரசு | |
• நிர்வாகம் | திவேர் சட்டமன்றம்[5] |
• ஆளுநர்[6] | அந்திரே செவெலியோவ்[7] |
பரப்பளவு | |
• மொத்தம் | 84,100 km2 (32,500 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 39வது |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை கணக்கெடுப்பு)[9] | |
• மொத்தம் | 13,53,392 |
• மதிப்பீடு (2018)[10] | 12,83,873 (−5.1%) |
• தரவரிசை | 33வது |
• அடர்த்தி | 16/km2 (42/sq mi) |
• நகர்ப்புறம் | 74.7% |
• நாட்டுப்புறம் | 25.3% |
நேர வலயம் | ஒசநே+3 ([11]) |
ஐஎசுஓ 3166 குறியீடு | RU-TVE |
அனுமதி இலக்கத்தகடு | 69 |
OKTMO ஐடி | 28000000 |
அலுவல் மொழிகள் | உருசியம்[12] |
இணையதளம் | http://www.region.tver.ru |
திவேர் மாகாணம் கிழக்கு ஐரோப்பிய சமவெளியின் மத்திய பகுதியின் மேற்கில் அமைந்துள்ளது. இது வடக்கில் இருந்து தெற்காக 260 கிலோ மீட்டரும், மேற்கிலும் இருந்து கிழக்காக 450 கி.மீ நீண்டுள்ளது. இதன் எல்லைகளாக யாரோசிலாவ் மாகாணம், வோல்க்தா ஒப்லாசுது, நாவ்கராட் ஓப்லாஸ்து ஆகியவை வடக்கிலும், மாஸ்கோ ஓப்லஸ்து மற்றும் ஸ்மோலென்ஸ்க் ஓப்லாஸ்து ஆகியவை தெற்கிலும், பிஸ்கோவ் ஒப்லாஸ்து மேற்கிலும் அமைந்துள்ளன.
இந்த ஒப்லாசுதுவில் கனிமவளங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை முதன்மையாக பண்டைய கடல்கள், ஏரிகள், சதுப்பு நிலங்கள் போன்றவற்றில் உள்ளன. தொழில்துறைக்கு முதன்மையாகத் தேவைப்படும் கனிமங்களான பழுப்பு நிலக்கரி மாஸ்கோ நிலக்கரி படுகையில் உள்ளன. 1948 இல் இருந்து 1996 வரை சுமார் 21 மில்லியன் டன் நிலக்கரி அகழப்பட்டது. மிகப் பரந்த அளவில் ஆற்றல்வாய்ந்த நிலக்கரி 15.4 பில்லியன் மீ³ கன அளவு நிலக்கரி இருப்பு உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஒப்லாசுதுவின் சராசரி சனவரி வெப்பநிலை மேற்குப் பகுதியில் -8 (18 °பாரங்கீட்), வடகிழக்கில் −13 °செல்சியஸ் (9 °பாரங்கீட்) சூலை மாத வெப்பநிலை +17 °செல்சியஸ் (63 °பாரங்கீட்) முதல் +19 °செல்சியஸ் (66 °பாரங்கீட்) வரை நிலவுகிறது. ஆண்டு சராசரி மழையளவு 560 முதல் 720 மிமீ வரை பொழிகிறது. நவம்பர் மாதத்தின் நடுவில் பனிப் பொழிவு துவங்குகி 130 முதல் 150 நாட்கள் வரை பொழிகிறது. 40-60 செ.மீ. வரை பனி பொழியும். அதிகபட்ச பனிப்பொழிவு 80 செ.மீ ஆகும்.
ஒப்லாசுது மக்கள் தொகை: 1,353,392 ( 2010 கணக்கெடுப்பு ); 1,471,459 ( 2002 மக்கள் தொகை கணக்கெடுப்பு ); 1,670,117 ( 1989 மக்கள் தொகை கணக்கெடுப்பு .)
2009 - 1.55 | 2010 - 1.52 | 2011 - 1.54 | 2012 - 1.65 | 2013 - 1.64 | 2014 - 1.66 (எதிர்பார்ப்பு)
உருசிய நிர்வாக தரவுத்தளங்களில் பதிவு செய்துள்ள 99.260 மக்கள் தங்களது இனம் குறித்து தெரிவிக்கவில்லை. [15]
2012 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அலுவல்முறைக் கணக்கெடுப்பின் படி[16] சராத்தவ் ஓப்லஸ்தின் மக்கள் தொகையில் 30% உருசிய மரபுவழித் திருச்சபையை பின்பற்றுகின்றனர். , 9% எந்த மரபையும் சேராத பொதுவான கிறித்துவர்கள், 1% முஸ்லீம்கள், 34% இறை நம்பிக்கையுள்ள ஆனால் சமயப்பற்றற்றோர் , 20% நாத்திகர்கள், 6% பிற மதங்களை சேர்ந்தவர்களாகவோ அல்லது கேள்விக்கு பதில் தரவிரும்பாதவர்களோ ஆவர்.[16]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.