From Wikipedia, the free encyclopedia
திரிபுவன் வீர விக்ரம் ஷா (Tribhuwan Bir Bikram Shah) (त्रिभुवन वीर विक्रम शाह), (30 சூன் 1906 – 13 மார்ச் 1955), நேபாள இராச்சியத்தை 11 டிசம்பர் 1911 முதல் 13 மார்ச் 1955 முடிய ஆட்சி செய்த மன்னராவர். இவரது தந்தை பிரிதிவி வீர விக்ரம் ஷாவின் மறைவின் போது, எட்டு வயதான திரிபுவன் ஷா 20 பிப்ரவரி 1913ல் நேபாள இராச்சியத்தின் அரியணைக்கு முடி சூட்டப்பட்டார். திரிபுவன் பருவ வயது அடையும் வரை, ராணி திவ்யேஷ்வரி, திரிபுவனின் அரசப் பிரதியாக நாட்டை நிர்வகித்தார்.
திரிபுவன வீர விக்ரம் ஷா | |||||
---|---|---|---|---|---|
நேபாள மன்னர் | |||||
நேபாள மன்னர் | |||||
முடிசூட்டுதல் | 20 பிப்ரவரி1913 | ||||
ஆட்சிக்காலம் | 11 டிசம்பர் 1911 – 7 நவம்பர் 1950 | ||||
முன்னையவர் | பிரிதிவி வீர விக்ரம் ஷா | ||||
பின்னையவர் | ஞானேந்திரா | ||||
ஆட்சிக்காலம் | 18 பிப்ரவரி 1951 – 13 மார்ச் 1955 | ||||
முன்னையவர் | ஞானேந்திரா | ||||
பின்னையவர் | மகேந்திரா | ||||
பிறப்பு | காட்மாண்டு, நேபாள இராச்சியம் | 30 சூன் 1906||||
இறப்பு | 13 மார்ச்சு 1955 48) கண்டோன் மருத்துவ மனை, சூரிக்கு, சுவிட்சர்லாந்து | (அகவை||||
துணைவர் | ராணி காந்தி ராஜ்ஜிய லெட்சுமி தேவி ஐஸ்வரிய ராஜ்ஜிய லெட்சுமி தேவி | ||||
குழந்தைகளின் #Family | மகேந்திரா இளவரசி இமாலயா இளவரசி வசுந்திரா இளவரசன் திரிலோக்கியன் இளவரசி நளினி இளவரசி விஜயா இளவரசி பாரதி | ||||
| |||||
Dynasty | ஷா வம்சம் | ||||
தந்தை | பிரிதிவி வீர விக்ரம் ஷா | ||||
தாய் | ராணி திவ்யேஷ்வரி | ||||
மதம் | இந்து சமயம் |
1857 முதல் ஷா வம்சத்தின் நேபாள மன்னர்கள், பெயரளவிற்கு மன்னர்களே இருந்தனரே தவிர, நாட்டின் நிர்வாகத்தை மன்னர்களின் பெயரில் ராண வம்சத்தின் பரம்பரை பிரதம அமைச்சர்களே நாட்டை ஆண்டனர். [1][2]
காத்மாண்டில் உள்ள நாராயணன்ஹிட்டி அரண்மனையில் மார்ச், 1919 அன்று திரிபுவன் ஷாவிற்கும், காந்தி தேவிக்கும் திருமணம் நடைபெற்றது.[3] அதே நாளில் ராணி காந்தி தேவியின் தங்கையான ஈஸ்வரி தேவியை இரண்டாம் தாரமாக மன்னர் மணந்து கொண்டார். பின்னர் பல பெண்களை மன்னர் திரிபுவன் ஷா மணந்து கொண்டார். மன்னர் திரிபுவன் ஷாவிற்கு, மகேந்திரா உள்ளிட்ட 13 ஆண் & பெண்கள் குழந்தைகள் பிறந்தனர்.
அவர்களில் மூன்று பெண் குழந்தைகள் 15 சனவரி 1934ல் ஏற்பட்ட 1934 நேபாள நிலநடுக்கத்தில், காத்மாண்டில் உள்ள நாராயணன்ஹிட்டி அரண்மனை சேதமடைந்த போது இறந்தனர்.[4]
முதலாம் உலகப் போரின் போது ஷா வம்ச நேபாள மன்னர் குடும்பத்தினருக்கும், ராணா வம்ச நேபாள பிரதம அமைச்சர் பீம் சூம்செர் ஜங் பகதூர் ராணவிற்கும் இடையே பிணக்குகள் உண்டாயின.
1930களில் நடுவில், ராணா நேபாள பிரதம அமைச்சருக்கு எதிராக, மக்கள் போர்க்கொடி தூக்கினர். பிரதம அமைச்சரைப் பதவியிலிருந்து விலக்க, நேபாள மக்கள் சபை நடத்திய போராட்டங்களுக்கு, நேபாள மன்னர் திருபுவன் நேரடியாக ஆதரவு தெரிவித்தார். ஆனால் மக்களை போராட்டங்களைத் தடை செய்தும், போராட்டத் தலைவர்களை சிறையில் அடைத்தும், ராணாக்கள் நசுக்கினர்.
1937 இல் ராணா வம்ச சர்வாதிகார பிரதம அமைச்சர் மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணாவைப் பதவி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக, நவம்பர் 1950 இல் மன்னர் திரிபுவன், இளவரசர் மகேந்திரா, பேரன் பிரேந்திரா முதலானவர்களுடன் நேபாளத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் அடைக்கலம் அடைந்தார்.
மன்னர் திரிபுவனின் இச்செயலால் கலக்கமடைந்த பிரதம அமைச்சர், 7 நவம்பர் 1950 இல் நேபாள இராச்சியத்தில் நெருக்கடி நிலையை நடைமுறைப்படுத்தினார். அமைச்சரவையை கூட்டி மன்னர் திரிபுவனின் நான்கு வயது பேரன் ஞானேந்திராவை நேபாளத்தின் புதிய மன்னராக்கினார். [5]
இந்திய விமானப் படையினரால் 10 நவம்பர் 1950 இல், ஞானேந்திரா தவிர மன்னர் திரிபுவனின் குடும்பத்தினர் நேபாளத்திலிருந்து இரண்டு வானூர்திகள் மூலம் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதனால் நேபாளம் முழுவதும் பிரதம அமைச்சருக்கு ஏதிராக பெருங்கிளர்ச்சிகள் நடைபெற்றது. பிரதம அமைச்சர் மோகன் சாம்செர் பகதூர் ஜங் ராணா, மன்னர் திரிபுவன் மற்றும் நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
22 நவம்பர் 1950 இல் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு நேபாள மன்னர் ஞானேந்திராவை மன்னராக அங்கீகாரம் அளிக்க மறுத்தார்.
நேபாளத்தில் தனக்கு எதிராக நடைபெறும் மக்கள் கிளர்ச்சிகளுக்கு பயந்த நேபாள பிரதம அமைச்சர், இந்தியாவுடன் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்த ஒரு தூதுக்குழுவை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்.[6]பேச்சுவார்த்தையின் இறுதியில் பிரதம அமைச்சர் மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா பதவி விலகினார். மன்னர் திரிபுவன் 15 பிப்ரவரி 1951 இல் நேபாளம் திரும்பினார்.
18 பிப்ரவரி 1951 இல் நேபாளத்தில் ராணா வம்சத்தினர் பரம்பரையாக பிரதம அமைச்சர்களாக பதவி வகிக்கும் முறை ஒழிக்கப்பட்டது. இருப்பினும் சில மாதங்கள் மோகன் சம்செர் பகதூர் ராணா நேபாளத்தின் பிரதமர் பதவி வகித்தார்.
நவம்பர், 1951 இல் நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவர் மாத்ரிக பிரசாத் கொய்ராலா புதிய பிரதம அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[7]
மன்னர் திரிபுவன் தனது 52வது அகவையில், 13 மார்ச் 1955 அன்று சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிக்கு நகரத்தின் கண்டோன் மருத்துவமனையில் காலமானார். திரிபுவனுக்குப் பின்னர் நேபாள மன்னராக மகேந்திராவிற்கு பட்டம் சூட்டப்பட்டது.
மன்னர் திரிபுவனை பெருமைப் படுத்தும் விதமாக, காட்மாண்டு பன்னாட்டு விமான நிலையத்திற்கு திரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்றும், தேசிய நெடுஞ்சாலைக்கு திரிபுவன் நெடுஞ்சாலை என்றும், நாட்டின் மிகப்பெரிய பல்கலைகழகத்திற்கு திரிபுவன் பல்கலைக்கழகம் என்றும், தாங் மாவட்டத் தலைமையிட நகரத்திற்கு திரிபுவன் நகர் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.