தாழிசை (பாவகை)
பாவகைகளில் தாழிசை என்பது கலிப்பாவில் வரும் இரண்டாவது உறுப்பைக் குறிக்கும். தாழ்ந்து ஒலிப்பத / From Wikipedia, the free encyclopedia
பாவகைகளில் தாழிசை என்பது கலிப்பாவில் வரும் இரண்டாவது உறுப்பைக் குறிக்கும். தாழ்ந்து ஒலிப்பதனால் தாழிசை என்னும் பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கலிப்பாவில் பொதுவாக இது முதல் உறுப்பான தரவைத் தொடர்ந்து வரும். இதற்கு இடைநிலைப்பாட்டு என்ற மற்றொரு பெயரும் உண்டு. கலிப்பாவில் பொதுவாக மூன்று அல்லது ஆறு தாழிசைகள் இருப்பது வழக்கம். பன்னிரண்டு தாழிசைகள் கொண்ட கலிப்பாக்களும் உள்ளன.
தாழிசை இரண்டு தொடக்கம் நான்கு அடிகளைக் கொண்டிருக்கலாம். எனினும் இவ்வெண்ணிக்கை தரவிலுள்ள அடிகளின் எண்ணிக்கையிலும் குறைவாக இருக்க வேண்டும் என்பது என்பது விதி.