![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/66/Taplejung_district_location.png/640px-Taplejung_district_location.png&w=640&q=50)
தாப்லேஜங் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
தாப்லேஜங் மாவட்டம் (Taplejung District) (நேபாளி: ताप्लेजुङ जिल्ला Listenⓘ வட கிழக்கு நேபாளத்தின் மாநில எண் 1-இல், லிம்புவான் கிழக்குப் பிராந்தியத்தில், மேச்சி மண்டலத்தில் இமயமலையில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தாப்லேஜங் நகரம் ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/66/Taplejung_district_location.png/640px-Taplejung_district_location.png)
தாப்லேஜங் மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 3646 சதுர கிலோ மீட்டராகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி மொத்த மக்கள் தொகை 1,27,461 ஆகும். [1] லிம்பு மொழி, நேபாளி மொழிகள் இங்கு பேசப்படுகிறது. இம்மாவட்டத்தின் வடக்கு பகுதிகள் திபெத் தன்னாட்சிப் பகுதியுடன் எல்லையாக கொண்டது.