தான் இலெசிலி இலிண்டு அல்லது டாண் லெஸ்லி லிண்டு (Don Leslie Lind) (பிறப்பு: மே, 18, 1930) அமெரிக்காவைச் சேர்ந்த வானியல் விஞ்ஞானி, முனைவர் ஆவார். இவர் ஓர் அமெரிக்க அறிவியலாளரும் முன்னாள் அமெரிக்கக் கடற்படை அலுவலரும் அமெரிக்கக் கடற்படை விமான வலவரும், நாசா விண்வெளி வலவரும் ஆவார். இவர் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் பணியாற்றியவர். இவர் தனது புவி இயற்பியல் ஆராய்ச்சிப் படிப்பை அலெஸ்கா பல்கலைக்கழகத்தில் (University of Alaska) படித்தார். 1964 லிருந்து நாசாவில் விண்வெளி இயற்பியலாளராகப் (Space physics) பணியாற்றினார்.[1] இவர் பூமியின் வெளிப்பரப்பிலுள்ள (magnetosphere and interplanetary space) இயற்கைக்கும் குறை சக்தி துகள்களுக்குமான (low-energy particles) ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 1986 ஆம் ஆண்டு நாசாவிலிருந்து விலகிய பின்னர் யுட்டா மாநில பல்கலைக்கழகத்தில் (Utah State University) இயற்பியல் மற்றும் விண்வெளிப் பேராசிரியராகப் பணியாற்றினார்.[2]

விரைவான உண்மைகள் தான் இலெசிலி இலிண்டு, நாசா வானியல் விஞ்ஞானி, விண்வெளி வலவர் ...
தான் இலெசிலி இலிண்டு
Thumb
நாசா வானியல் விஞ்ஞானி, விண்வெளி வலவர்
தேசியம்அமெரிக்கர்
நிலைஓய்வு
பிறப்புமே 18, 1930 (1930-05-18) (அகவை 94)
மிட்வேல், உட்டா, ஐக்கிய அமெரிக்கா
வேறு பணிகள்
கடற்படை விமான வலவர், அறிவியலாளர்
பயின்ற கல்வி நிலையங்கள்
உட்டா பல்கலைக்கழகம், அறிவியல் இளவல் 1953
கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்கேலி, முனைவர் (Ph.D.) 1964
அலாசுகா பல்கலைக்கழகம்
தரம்படைக்கட்டளையாளர், USNR
விண்வெளி நேரம்
7d 00h 08m
தெரிவு1966 நாசா குழு 5
பயணங்கள்STS-51-B
திட்டச் சின்னம்
ஓய்வுஏப்பிரல் 1986
மூடு

வாழ்க்கை

இளம்பருவமும் கல்வியும்

இலிண்டு 1930 மே 18 இல் பிறந்தார். இவர் மிட்வேல் தொடக்கப் பள்ளியிலும் ஜோர்டான் உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்றார். இவர் 1953 இல் உட்டா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் அறிவியல் இளவல் பட்டம் பெற்றார்.[3] அமெரிக்கக் கடற்படை அலுவலர் பள்ளியில் இவர் விளையாட்டாக பறத்தல் பயிற்சிக்கு விருப்பம் தெரிவித்துள்ளார். பின் இவ்விருப்பத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. என்றாலும், அப்போது இவர் வானில் பறப்பதில் பெருமகிழ்ச்சியுற்றார்.[4] அமெரிக்க கற்படை விமானவலவராக, இலிண்டு அண்டக் கதிர்களின் ஒளிப்படங்களை உயர்கிடக்கை மட்டத்தில் பறந்து தன்னார்வமோடு பெர்க்கேலி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்துக்காக எடுத்துள்ளார். இது இவர் பெர்க்கேலியில் சேர உதவியது.[5][6] இங்கு இவர் இலாரன்சு கதிர்வீச்சு ஆய்வகத்தில் பையான் – அணுக்கருவன் சிதறலில் ஆய்வு மேற்கொண்டு 1964 இல் உய்ராற்றல் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[3]:{{{3}}} இவர் அலாசுகா பல்கலைக்கழகத்தில் புவீயற்பியல் நிறுவனத்தில் முது முனைவர் பாட்ட ஆய்வை 1975 முதல் 1976 வரை மேற்கொண்டு நிறைவு செய்துள்ளார்.[7]:{{{3}}}

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.