டாக்கா (வங்காள மொழி: ঢাকা) வங்காளதேசத்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். முகலாயப் பேரரசு காலத்தில் "ஜஹாங்கீர் நகர்" என்று இந்நகரம் அழைக்கப்பட்டது. இந்தியப் பிரிவினைக்குப் பிறகு, இந்நகரம் கிழக்குப் பாகித்தானின் தலைநகராக விளங்கியது. டாக்கா மாநகரத்தின் மக்கள் தொகை 12.5 மில்லியன் ஆகும். கை ரிக்சாக்களின் தலைநகரம்' என்னும் சிறப்பையும் டாக்கா பெற்றுள்ளது. டாக்காவின் தெருக்களில் ஒரு நாளைக்கு சுமார் 4 லட்சம் கை ரிக்சாக்கள் செல்கின்றன.

விரைவான உண்மைகள் டாக்கா, நாடு ...
டாக்கா
Thumb
டாக்காவின் லால்பாக் கோட்டை
அடைபெயர்(கள்): மசூதிகளும் ஆலயங்களும் இருந்த நகரம்
Thumb
டாக்கா வங்காளதேசத்தின் அமைவிடம்
நாடுவங்காளதேசம்
மாவட்டம்டாக்கா மாவட்டம்
அரசு
  மாநகரத் தலைவர்சத்தீக் ஹுசேன் கோக்கா
பரப்பளவு
  நகரம்145 km2 (56 sq mi)
மக்கள்தொகை
 (2006 மதிப்பு)[1]
  நகரம்67,24,976
  அடர்த்தி14,608/km2 (37,830/sq mi)
  பெருநகர்
1,19,18,442
நேர வலயம்ஒசநே+6 (BST)
மூடு

பெயர்க் காரணம்

Thumb
National Assembly of Bangladesh

டாக்கா என்ற சொல்லானது, முன்பு ஒரு காலத்தில் இங்கு அதியம் காணப்பட்ட தாக்கா எனும் மரத்தின் பெயரிலிருந்து வந்திருக்கலாம். இல்லையேல், 1610ம் ஆண்டு முதலாம் இசுலாம் கான் தனது நாட்டின் தலைநகரை அறிவிக்கும் பொழுது தெற்காசியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட தாக் எனும் இசைக்கருவி இசைக்கப்பட்டது, இதிலிருந்தும் டாக்கா எனும் பெயர் வந்திருக்கலாம்[2]. மேலும் நகரின் தென்மேற்கு பகுதியில் 800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவிலில் வீற்றிருக்கும் தாக்கேசுவரி அம்மனின் பெயரிலிருந்தும் வந்திருக்கலாம் என அவ்வூர் மக்களால் நம்பப்படுகின்றது[3]. மேலும் குறிப்பேடுகள் சிலவற்றில் டாக்கா எனும் சொல்லானது, பிராகிருத மொழியின் கிளை மொழியான தாக்காவிலிருந்து வந்ததாகவும், அது இராஜதரங்கினி கண்காணிப்புக் கோபுரத்தில் உபயோகப்படுத்தியதாகவும் குறிப்பிடுகின்றன[4].

வரலாறு

Thumb
Mausoleum of ex-president Ziaur Rahman.
Thumb
Hatirjheel 2nd-bridge
Thumb
entrance of Chandrima Uddan

பெளத்தீகம் மற்றும் இந்து சமய அரசாட்சி

தற்போதைய டாக்காவிற்கு ஏழாம் நூற்றாண்டிலிருந்து மக்கள் குடிபெயர ஆரம்பித்தனர். இக்குறுநில பகுதியினை முதலில் காமரூப மன்னர்களும், பாலப் பேரரசர்களும் ஆட்சி செலுத்திவந்தனர். பின்னர் 9ம் நூற்றாண்டில் சென் குல மன்னர்கள் ஆட்சி அமைத்தனர்[5]. இங்கு பிரசித்தி பெற்றது தாகேஸ்வரி தேசிய கோயில் ஆகும். இக்கோயிலை சென் பேரரசரால் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது[6]. சேனை அரசர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர், வங்காள சுல்தானியர்கள் ஆட்சி புரிந்தனர்.

முகலாய ஆட்சி

1576ல் வங்காளம், முகலாயரின் ஆட்சிக்குக் கீழ் இருந்தது. அப்போதைய இராணுவதளமாக டாக்காவை தெரிவு செய்தனர்[7]. நகரின் அபரிவிதமான வளர்ச்சியைக்கண்டு 1608ம் ஆண்டு முகலாய பேரரசுகளின் தலைமையிடமாக மாற்றினர். தலைநகராக அறிவித்தகனத்தில், எண்ணற்ற மசூதிகள், கோட்டைகள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை நிறுவினர். மேலும் இசுலாமியர்களுக்கு, வரிவிலக்கு அளிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான வேற்று மத மக்கள் இசுலாமியத்திற்கு மாறினர்[8][9][10]. அதற்குப் பின்னர் நிறைய முகலாயர்கள் ஆட்சி செய்த போதும், அவர்களின் முதலில் ஆட்சி செய்த சுபதார் முதலாம் இசுலாம் கானே முக்கியத்துவம் வாய்ந்தவன்[11]. முதலில் இவ்வூருக்கு, அரசர் ஜகாங்கீரின் நினைவாக ஜகாங்கீர் நகர் (شهر از جهانگیر) என பெயரிட்ட இசுலாம் கான், அவரின் மறைவிற்குப் பின்னர் அப்பெயரினை மாற்றினார். அதற்குப் பின்னர் 17ம் நூற்றாண்டில் அரச பொருப்பேற்ற சைஸ்தா கான், அரசர் அவுரங்கசீப்பின் கட்டளையின் பேரில், டாக்கா நகரம் வளர்ச்சி கண்டது[9][10]. நன்கு வளர்ச்சியடைந்த டாக்கா நகரத்தின் மொத்த பரப்பளவு 19க்கு 13கிமீ.ஆக இருந்தது. மேலும் மெத்த மக்கட்தொகையும் ஒரு மில்லியனைத் தொட்டது[12]

பிரித்தானிய ஆட்சி

1765ல் முகலாய பேரரசரின் சார்பாக வருவாய் சேகரிக்கும் உரிமையை பிரித்தானியாவின் கிழக்கிந்திய நிறுவனம் பெற்றது. வரி வசூலிப்பதில் செல்வாக்கு வளர்ந்து சர்வாதிகாரத்தைக் காட்டியது, கிழக்கு இந்திய நிறுவனம். பின்னர் நாடாளும் அதிகாரத்தை வங்காள நவாப்புகளிடமிருந்து பறித்து, பீகார் மற்றும் ஒடிஷாவை கிழக்கு இந்திய கம்பெனி 1763ல் தன்வசம் இழுத்தது. ஆட்சி மாறியதும் கல்கத்தாவிற்கு முக்கியத்துவம் உயர்ந்தது. இதனால் டாக்கா நகரின் பெரும்பான்மையான மக்கள் கல்கத்தா நோக்கி புலம் பெயர்ந்தனர்[13]. நகரின் மக்கள் தொகையும் வியத்தகு அளவில் சுருங்கியது. ஆனால் நிலையான வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கல் போன்றவை இறுதி வரை தொடர்ந்தது. ஓர் அதிநவீன குடிநீர் விநியோக முறை 1874ம் ஆண்டிலும் மின்சார வாரியம் 1878ம் ஆண்டிலும் தொடங்கப்பட்டது[14][15]. மேலும் டாக்காவில் ஒரு இராணுவ தளம் அமைக்கப்பட்டு, பிரித்தானிய மற்றும் வங்காள இராணுவ வீரர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது[10].

டாக்கா மஸ்லின்

இந்தியாவின் டாக்கா மஸ்லின் என்ற மிக மெல்லிய கைநெசவுத் துணி உலகப் பிரசித்தி பெற்றது. ஒரு மோதிரத்திற்குள் ஒரு மீட்டர் டாக்கா மஸ்லின் துணியை நுழைத்துவிடலாம். ஆங்கிலேயர் அவர்களது மான்செஸ்டர் ஆலைத்துணி விற்பனையாக வேண்டும் என்பதற்காக டாக்கா நெசவாளிகளின் கட்டை விரல்களை வெட்டினர்.[16]

புவி அமைப்பு

Thumb
டாக்கா நகர்

டாக்கா நகரானது, புரிகங்கை ஆற்றின் கிழக்கு கரையில், வங்காள தேசத்தின் மத்தியில் (23°42′0″N 90°22′30″E) அமைந்துள்ளது. நகரானது, கங்கை கழிமுகத்தெதிரின் கீழ் பகுதியில் 360 சது.கிமீ (140 சதுர மைல்) பரப்பளவில் அமைந்துள்ளது[17].

காலநிலை

டாக்கா, ஈரப்பதம் மற்றும் வெப்பமண்டல காலநிலையை கொண்டுள்ளது. ஆண்டின் சராசரி காலநிலையாக 25 °C (77 °F) ம், குறைந்தபட்சமாக மார்கழி, தை மாதங்களில் 18 °C (64 °F) மற்றும் அதிகபட்சமாக சித்திரை மற்றும் வைகாசி மாதங்களில் 32 °C (90 °F)ம் இருக்கும்[18]. நகரின் மழைக்காலமான வைகாசி முதல் ஐப்பசி வரையிலான மாதங்களில் சராசரி மழையின் அளவு 2,123  மிமீ. (83.5 in) பதிவாகியுள்ளது[18]. போக்குவரத்து நெரிசல் மற்றும் தொழில்துறை நிறுவனங்களின் கழிவுகளினால் காற்று மற்றும் நீர் மாசுபடுகின்றது[19]. மேலும் நகரைச்சுற்றி அடுக்குமாடி குடியிறுப்புகள் மற்றும் கடைகளை கட்டுவதற்காக, பல்வேறு குளங்களையும் ஏரிகளையும் மூடி வருகின்றனர். காற்று மற்றும் தண்ணீர் மாசுபடுவதினால், மணல் அரிப்பு மற்றும் இயற்கை வாழ்விடங்கள் அழிப்பு என பல்வேறு அச்சுறுத்தல்கள் உருவாகி வருகின்றது[19]

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், டாக்கா, மாதம் ...
மூடு

குளங்கள் மற்றும் பூங்காக்கள்

டாக்கா நகரில் பல்வேறு பூங்காக்கள் உள்ளன அவற்றுள்,

  • ராம்னா பூங்கா
  • சுக்ரவர்த்தி உதயன் பூங்கா
  • ஷிசு பூங்கா
  • வங்காளதேச தேசிய தாவரவியல் பூங்கா
  • பால்தா பூங்கா
  • சந்திரிமா உத்தன் பூங்கா
  • குல்சன் பூங்கா
  • டாக்கா மிருககாட்சி சாலைப் பூங்கா

ஆகியவை நாட்டின் பூங்காக்களுள் முக்கியமானதாக கருதப்படுகின்றது. மேலும் பல்வேறு குளங்களும் அமைந்துள்ளது. அவற்றுள்

  • க்ரிசன்ட் குளம்
  • தனமோந்தி குளம்
  • பரிதாரா – குல்சன் குளம்
  • பனானி குளம்
  • உத்தார தனா குளம்
  • பேகன்பரி குளம்

ஆகியவை நாட்டின் பல்வேறு குளங்களுள் முக்கியமானதாக கருதப்படுகின்றது.

விளையாட்டு

Thumb
Crescent Lake - Chandrima Uddan
Thumb
சேர்-இ-பாங்களா மட்டைப் பந்து மைதானத்தின் தோற்றம்

டாக்காவில் மட்டைப் பந்தும் கால்பந்து விளையாட்டும் பொது மக்கள் மத்தியில் மிகப் பிரசித்தம்[23]. நகரத்திலுள்ள பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கிடையே அதிக எண்ணிக்கையில் பல்வேறு போட்டிகள் தேசிய அளவில் நடைபெறுகின்றது. வங்காளதேச ப்ரீமியர் லீக் (கால்பந்து) போட்டியில் முகமதன் விளையாட்டுக் குழுவும், அபாகனி குழுவும் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது[24]. 1954ம் ஆண்டு, இந்தியாவிற்கு எதிராக பாக்கிஸ்தான் மட்டைப்பந்து அணி விளையாடிய டெஸ்ட் போட்டியே வங்கதேசம் முதன் முதலாக நடத்திய மட்டைப்பந்து போட்டி என்பது குறிப்பிடத்தக்கது[25]. பங்கபந்து விளையாட்டு மைதானம், முதலில் சர்வதேச மட்டைப்பந்து விளையாட்டுக்களமாக விளங்கியது. ஆனால் தற்போது அந்த மைதானத்தில் கால்பந்து மைதானமாக மாறியுள்ளது[25]. 2011 உலக கோப்பை மட்டைப்பந்து தொடக்க விழா இந்த மைதானத்தில் நடந்தது[26] பின்னர் நடந்த 2 கால் இறுதி போட்டிகள் உட்பட போட்டியின் 6 ஆட்டங்கள், சேர்-இ-பாங்களா மட்டைப்பந்து மைதானத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது[27]. மேலும் தெற்காசிய சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் மூன்று முறை ( 1985, 1993, 2010 ) டாக்காவில் சிறப்பாக நடந்தது[28]. உலகிலயே இங்கு மட்டும் தான் தெற்காசிய சர்வதேச விளையாட்டு போட்டிகள் மூன்று முறை நடந்துள்ளது. அதுவும் பங்கபந்து தேசிய விளையாட்டு மைதானத்தில் தான்[29].

கல்வி

Thumb
Hatirjheel
Thumb
Sunrise in Dhaka

வாங்காள தேசத்தின் மற்ற நகரங்களை விட டாக்காவில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. மேலும் "அனைவருக்கும் கல்வி" திட்டத்தின் கீழ் டாக்காவில் நிறைய பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு கல்வி நிலையங்கள் ஐந்து நிலைகளாக பிரித்தனர். ஆரம்பப் பள்ளி (1 முதல் 5ம் வகுப்பு வரை), தொடக்கப் பள்ளி (6 முதல் 8ம் வகுப்பு வரை), உயர்நிலைப் பள்ளி (9 மற்றும் 10ம் வகுப்பு), மேல்நிலைப் பள்ளி (11 மற்றும் 12ம் வகுப்பு).

இங்கு பள்ளிகளைப்போல கல்லூரிகளும் அதிகம். இங்குள் டாக்கா கல்லூரி பிரித்தானிய அரசால், 1841 ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரே டாக்காவில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் நிறைந்து காணப்பட்டது. மேலும் பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளும் பயிற்றுவிக்கப்பட்டது[30]. நாட்டின் பெரிய மற்றும் பழைமை வாய்ந்த டாக்கா பல்கலைக்கழகமும் இங்கு அமைந்திருப்பதும் சிறப்பு[31]. இந்த பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ 30,000 மாணவர்கள் மற்றும் 1,300 ஆசிரியர்கள் உள்ளனர். 1921ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பல்கலைக்கழகத்தில் 23 ஆராய்ச்சி மையங்களும், 70 துறைகளும் ஒருங்கே அமைந்துள்ளது[32]. மேலும் பல்வேறு பல்கலைக்கழகங்களான

  • வங்காளதேசம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (BUET)
  • பங்கபந்து சேக் முஜ்ஜிப் மருத்துவப் பல்கலைக்கழகம் (BSMMU)
  • ஜெகநாத் பல்கலைக்கழகம்
  • சேர்-இ-பாங்களா விவசாய பல்கலைக்கழகம்
  • டாக்கா பல்கலைக்கழகம்
  • சர் சலிமுல்லா மருத்துவப் பல்கலைக்கழகம்

ஆகியவை அமைந்துள்ளன[33][34]. இவ்வாறான கல்வி வசதிகள் அதிகமிருந்தும் மறியல் மற்றும் மாணவர் போராட்டங்கள் தனியார் பல்கலைக்கழக வளாகங்களில் தொடர்ந்து நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது[35][36].

போக்குவரத்து

Thumb
Road of Dhaka on a bridge
Thumb
CNG டாக்கா நகரிலுள்ள ஒரு ஆட்டோ ரிக்சா

டாக்காவிலுள்ள சைக்கிள் ரிக்சாவானது, உலக புகழ் பெற்றது[37][38][39]. கிட்டத்தட்ட 400,000 சைக்கிள் ரிக்சாக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன[40]. சைக்கிள் ரிக்சாவும், ஆட்டோ ரிக்சாவும் தான் இங்கு முக்கிய போக்குவரத்து சாதனங்கள்[41][42]. ஆனால் அந்த 400,000 ரிக்சாக்களில், 85,000 மட்டுமே அரசாங்கத்தின் முறையான உரிமத்துடன் செயல்படுகின்றது[43][44]. இது தவிர, வங்காளதேச அரசு நகரப் பேருந்துகள் இயக்குகின்றன.

சாலைப் போக்குவரத்து

மோட்டார் சைக்கிள், டாக்சி மற்றும் இதர தனியார் உடைமை வாகனங்களும் நடுத்தர மக்களின் அன்றாட போக்குவரத்து சாதனங்களாக மாறிவிட்டன. அதற்கேற்ப அரசும், ரிக்சாக்களுக்கு பதில் பசுமை ஆட்டோக்களை அறிமுகப்படுத்தியது. இந்த ஆட்டோக்கள், முழுக்க இயற்கை எரிவாயுவினால் இயக்கப்படுகின்றது[45]. டாக்காவிலுள்ள டாக்சி இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒன்று மஞ்சள் நிற டாக்சி மற்றொன்று நீல நிற டாக்சி. டயோட்டா கரோலா எனும் வகையைச் சேர்ந்த வண்டியான மஞ்சள் நிற டாக்சி சொகுசாகவும் குளிர்சாதனம் பொருத்தப்பட்டதாக இருக்கும். இவ்வகையான டாக்சியின் வாடகையும் அதிகம் இருக்கும். மற்றொன்றான நீலம் மற்றும் கருப்பு நிற டாக்சி மாருதி 800 வகையைச் சேர்ந்ததாகும். இவ்வகையில் குளிர்சாதனம் இருக்காது மேலும் கட்டணமும் குறைவு. 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தினை பொருத்தவரை 11260 டாக்சிகளில், 2000 முதல் 2500 வரையிலான டாக்சிகள் மட்டுமே அரசின் முறையான உரிமத்துடன் இயங்குகின்றன[46]. அரசு இறக்குமதி செய்யும் 5000 புதிய டாக்சிகளில் 1500சிசி குதிரை வேகத்தை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மொத்த டாக்சிகளின் எண்ணிக்கையை 18000யாக உயர்த்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது[46].
1986ன் படி, டாக்காவில் மொத்தம் 1,868 கிலோமீட்டர்கள் (1,161 mi) சாலைகள் போடப்பட்டுள்ளது[47] நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகள் இந்திய பெருநகரங்களான கொல்கத்தா மற்றும் அகர்தாலா போன்ற நகரங்களை இணைக்கின்றன. மேலும் அந்நகரங்களுக்கு, வங்கதேச சாலை போக்குவரத்து கழகத்தின்[BRTC] மூலம் பேருந்துகள் டாக்கா நகரிலிருந்து இயக்கப்படுகின்றன[48]

தொடருந்து போக்குவரத்து

கமாலாபுரம் தொடருந்து நிலையம், பீமன் பந்தர் தொடருந்து நிலையம், தேஜ்கவுன் தொடருந்து நிலையம் மற்றும் இராணுவ முகாம் (Cantonment) தொடருந்து நிலையம் போன்றவை டாக்காவின் முக்கிய தொடருந்து நிலையங்களாகும். இத்தொடருந்து வழித்தடங்களில், வங்கதேச இரயில்வே துறையின் மூலம் உள்ளூர் மற்றும் தேசிய தொடருந்துகள் இயக்கப்படுகின்றன[49]. மேலும் டாக்கா – கொல்கத்தா இடையேயான சர்வதேச வழித்தடத்திலும் தொடருந்து இயக்கப்படுகின்றன. ஏப்ரல் 2013ல் இருந்து, வங்கதேச இரயில்வே துறையின் மூலம் டாக்காவுடன் மற்ற சிறு தொடருந்து நிலையங்கள் மற்றும் நாராயணகாஞ்ச் போன்ற நகரங்களோடு இணைக்கும் வகையில் புறநகர் தொடருந்துகள் இயக்கப்படுகின்றன[50]

ஆற்றுப் போக்குவரத்து

பூரிகங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள சர்தார்காட் துறைமுகமே, டாக்காவின் பிரதானமான துறைமுகமாகும். இத்துறைமுகத்தின் மூலம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வங்கதேசத்தின் மற்ற துறைமுகங்களோடு இணைக்கின்றது[51]

வான் போக்குவரத்து

வங்கதேசத்தின் மிகப்பெரியதும் பரபரப்பும் மிகுந்த ஹஜ்ரத் சாஜ்லால் வானூர்தி நிலையம் டாக்கா நகரிலிருந்து 15கிமீ தொலைவில் அமைந்துள்ளது[52]. நாட்டின் 52 விழுக்காடு வான் போக்குவரத்து இந்த வானூர்தி நிலையத்தில்தான் நடைபெறுகிறது. சிட்டாக்ங், சில்எட், ராஜ்சாஹி, காக்ஸ் பஜார், ஜெசோர், சையதுபூர் போன்ற நகரங்களுக்கு உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து உள்ளது. மேலும் ஆசியாவின் முக்கிய நகரங்களுக்கும், மத்திய கிழக்கு நாடுகளுக்கும், வட ஆப்பிரிக்காவிற்கும் மேற்கு ஐரோப்பா போன்ற நகரங்களுக்கு, சர்வதேச வானூர்தி சேவையும் உள்ளது[53][54]

ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு

தபால் சேவை

வங்காளதேசி தபால் சேவை என்றழைக்கப்படும் வங்கதேச தபால் நிலையத்தின் தலைமையிடம் டாக்காவில் அமைந்துள்ளது. இங்கிருந்து நாடு முழுவதிலும் தபால் சேவை இயக்கப்படும்.

அச்சு ஊடகம்

மேலதிகத் தகவல்கள் மொழி, பெயர் ...
மொழிபெயர்
முக்கிய செய்திதாள்கள்டெய்லி இட்டாபக் • டெய்லி ஆசாத் • டெய்லி இன்குலாப் • முனாப்ஜமீன் • டெய்லி ஜனகாந்தா[55]
பிற செய்திதாள்கள்டெய்லி புரோதம் அலு • அமர் தேஷ் • காலேர் காந்தோ • சாமக்கல் • சுகாந்தர் • டெய்லி ஜெய்ஜெய்தின்
ஆங்கில செய்திதாள்கள்டெய்லி ஸ்டார்[56] • தி இன்டிபெண்டன்ட் • நியு ஏஜ் • தி ஃபினான்சியல் எக்ஸ்பிரஸ்
வார இதழ்கள்ஹாலிடே • தி ஸ்டார் • டாக்கா கூரியர் • அனந்தலோக் • சப்தாகித் 2000
இதரஃபோரம் • ஐஸ் டுடே • தி எக்ஸிக்யுடிவ் டைம்ஸ் • எனர்ஜி பாங்களா • அனன்யா • கம்யூட்டர் ஜகத்
மூடு

ஒலி மற்றும் ஒளி ஊடகம்

நாட்டின் மிகப்பழமையான தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையமான வங்கதேச தொலைக்காட்சி, டாக்காவிலுள்ள ராமாபுரத்தில் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றது[57]
மேலதிகத் தகவல்கள் ஒளிபரப்பு உரிமம், சேனல் ...
ஒளிபரப்பு உரிமம்சேனல்
அரசுபி.டிவி • பி.டிவி வேர்ல்டு
அரசு (செய்தித்துறை)சாங்சாத்
தனியார்பாய்சகி டிவி • தேஷ் டிவி • ஆர் டிவி • ஏ.டி.என் பாங்களா • சேனல் ஐ • என்.டி.என் • எகுசே டெலிவிசன் • பாங்களா விசன் • மோகனா டிவி • ஏடிஎன் செய்திகள் • சோமாய் டிவி • இன்டிபண்டன்ட் டிவி • சேனல் 9 • மாசரங்கா டிவி • சேனல் 24 • மை டிவி • எஸ்.ஏ டிவி
மூடு

அரசு ஏற்று நடத்தும் வானொலிபரப்பு நிலையமான வங்கதேச பீடர்,[58] டாக்காவிலுள்ள சேர்-இ-வங்காள நாகரில் அமைந்துள்ளது. இதர வானொலி சேவைகளாக

  • ரேடியோ ஃபூர்ட்டி
  • ரேடியோ டுடே
  • ஏ.பி.சி ரேடியோ
  • ரேடியோ அமர்
  • டாக்கா பண்பலை 90.4

மேற்கோள்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.