தமிழ்நாட்டின் தஞ்சாவூரிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
தமிழ்ப் பல்கலைக்கழகம் (Tamil University) என்பது தஞ்சாவூரில் உள்ள தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1981, செப்டம்பர் 15ஆம் நாள் உருவாக்கப்பட்டது. தஞ்சாவூரில் தஞ்சாவூர்-திருச்சிராப்பள்ளி சாலையில் 972.7 ஏக்கர் நிலப்பரப்பில் இப்பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. தமிழ் மொழி, தமிழர் பண்பாடு போன்றவற்றின் முதன்மையான உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது இப்பல்கலைக்கழகம்.
குறிக்கோளுரை | உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் |
---|---|
வகை | தமிழ் - பொது |
உருவாக்கம் | செப்டம்பர் 15 1981 |
வேந்தர் | ஆர். என். ரவி[1] |
துணை வேந்தர் | வி. திருவள்ளுவன்[2] |
அமைவிடம் | , 10.7363°N 79.0980°E |
இணையதளம் | www.tamiluniversity.ac.in |
தமிழ்ப் பல்கலைக்கழகத் தனிப் பெருஞ்சின்னம் (emblem) பற்றிய விளக்கம் பின்வருமாறு அமையும்.[3]
“ | எங்குமுள தமிழருக்கும் உரியதாகும் என்பதனை உலகுருண்டை எடுத்துக்காட்டும்; தங்கிவளர் இடம் தஞ்சை என்ற உண்மை தஞ்சாவூர்ப் பெருவுடையார் கோயில் காட்டும்; |
” |
பழங்கலை வடிவங்களை அவற்றின் மரபு, சுய அமைப்பு, தூய்மை கெடாது பாதுகாத்தல், புது உத்திகள் கண்டு அவற்றின் வளர்ச்சிக்கு உதவுதல் முதலிய விரிவானஅடிப்படை நோக்கம் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் நான்கு துறைகள் தொடங்கப்பட்டு தற்போது சிற்பம், இசை, நாடகம் ஆகிய மூன்று துறைகள் செயல்பட்டுவருகின்றன.
தமிழ்ப் பணிக்கு அடிப்படையாக அமையும் ஓலைச்சுவடிகள், அரிய கையெழுத்துச்சுவடிகள், கல்வெட்டுச் சான்றுகள் முதலியவற்றைத் தேடிக் கண்டுபிடித்துத் தொகுத்துப் பாதுகாத்தல் மற்றும் ஆய்வு செய்தல் ஆகிய நோக்கம் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் நான்கு துறைகள் செயல்பட்டு வருகின்றன.
பலவிடங்களில் வாழ்ந்துவரும் தமிழர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில் விரிவானஅடிப்படையில் பலதுறை சார்புடையதாக ஆய்வு அமைய வழிசெய்தலை நோக்கமாகக் கொண்டது இப்புலம்.
இலக்கிய இலக்கண ஆராய்ச்சிகளை வளர்ப்பது, தமிழ் இலக்கியப் படைப்புகளை உரிய முறையில் உலகிற்கு அறிமுகப்படுத்துவது ஆகிய அடிப்படை நோக்கங்களைக் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் ஆறு துறைகள் செயல்பட்டுவருகின்றன.
பழந்தமிழரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மரபுச் செல்வங்களைத் தேடிக் கண்டு தொகுத்தல், ஆய்வு செய்தல் மற்றும் இக்கால நவீன தொழில்நுட்ப நுணுக்கங்களைத் துணை கொண்டு பயன் காணல் முதலான நோக்கங்களைக் கொண்டது இப்புலம். இப்புலத்தின்கீழ் இப்போது ஆறு துறைகள் செயல்படுகின்றன.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முக்கிய வெளியீடுகளாவன:[4]
தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் எழுப்பப்படும் புலக்கட்டடங்கள் அவற்றின் உருவ அமைப்பில் "தமிழ்நாடு" என்ற சொல்லின் எழுத்துக்களைப் போன்று வடிவமைக்கப்படும்.[5] அவ்வகையில் தமிழ்நாடு என்ற சொல்லில் உள்ள எழுத்துக்களைக் குறிக்கும் நிலையில் ஒவ்வொரு எழுத்துக்கும் (த, மி, ழ், நா, டு) ஒவ்வொரு கட்டடம் அமையும்.[6][7] 'த' வடிவக்கட்டடத்தில் கலைப்புலத்துறைகளும், 'நா' வடிவக் கட்டடத்தில் சுவடிப்புலத் துறைகளும் அமையும். 'ழ்' வடிவக் கட்டடத்தில் மொழிப்புலம் செயல்பட்டுவருகிறது. 'மி' வடிவக் கட்டடத்தின் கட்டுமானம் முடிவடைய உள்ளது. இதில், அறிவியல் துறைகள் கொண்டுவரப்படவுள்ளன. 'டு' வடிவக் கட்டடம் இறுதிக்கட்டத்தையடைந்தது.[8] 'டு' வடிவக்கட்டடம் அண்மையில் திறக்கப்பட்டது. தற்போது 'மி' வடிவத்திலுள்ள அறிவியல் புலக்கட்டடம் 8 பிப்ரவரி 2016இல் திறக்கப்பட்டது.[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.