டோக்கெலாவ்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
டோக்கெலாவ் (Tokelau) என்பது நியூசிலாந்தின் ஒரு பகுதியாகும். இது பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள மூன்று வெப்பவலய பவளத் திட்டுகளைக் கொண்டுள்ளது. இப்பிரதேசத்தை சுயாட்சியற்ற பிரதேசமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அறிவித்துள்ளது[1].
டோக்கெலாவ் Tokelau | |
---|---|
கொடி | |
குறிக்கோள்: Tokelau Mo Te Atua | |
தலைநகரம் | எதுவுமில்லை; |
ஆட்சி மொழி(கள்) | டோக்கெலாவியம், ஆங்கிலம் |
மக்கள் | டோக்கெலாவியர் |
அரசாங்கம் | அரசியலமைப்பு முடியாட்சி |
• நாட்டுத் தலைவர் | இரண்டாம் எலிசபெத் |
• நிர்வாகி | டேவிட் பேய்ட்டன் |
• அரசுத் தலைவர் | பியோ டூயியா |
நியூசிலாந்து பிரதேசம் | |
• டோக்கெலாவ் சட்டம் | 1948 |
பரப்பு | |
• மொத்தம் | 10 km2 (3.9 sq mi) (228வது) |
• நீர் (%) | புறக்கணிக்கத்தக்கது |
மக்கள் தொகை | |
• 2007 மதிப்பிடு | 1,449 (220வது) |
• 2006 கணக்கெடுப்பு | 1,4661 |
• அடர்த்தி | 115/km2 (297.8/sq mi) (86வது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 1993 மதிப்பீடு |
• மொத்தம் | $1.5 மில்லியன் (227வது) |
• தலைவிகிதம் | $1,035 (தரப்படுத்தப்படவில்லை) |
நாணயம் | நியூசிலாந்து டாலர் (NZD) |
நேர வலயம் | ஒ.அ.நே-10 |
வாகனம் செலுத்தல் | இடது |
அழைப்புக்குறி | 690 |
இணையக் குறி | .tk |
சிஐஏ இன் உலகத் தரவு நூலில் (2004) இருந்து சில தரவுகள் எடுக்கப்பட்டன. 1. Tuhiga Igoa o te 2006 - 2006 Tokelau Census of Population and Dwellings. The Census population figure of 1,466 includes 392 usual residents of Tokelau who were absent on census night. |
1976 ஆம் ஆண்டு வரையில் இப்பகுதி டோக்கெலாவ் தீவுகள் என அழைக்கப்பட்டு வந்தது. மேலை நாட்டவர்களால் இது சிலவேளைகளில் யூனியன் தீவுகள் எனவும் அழைக்கப்பட்டது. டோக்கெலாவ் என்பது பொலினீசிய மொழியில் வடக்குக் காற்று எனப் பொருள். டிசம்பர் 9, 1976 முதல் டோக்கெலாவ் என்ற பெயர் அதிகாரபூர்வமாக்கப்பட்டது.
டோக்கெலாவ், அடாஃபு, நுகுநோனு மற்றும் ஃபகாவோஃபோ ஆகிய பவளத் தீவுகளை உள்ளடக்கியது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.