From Wikipedia, the free encyclopedia
டேவிட் கிளேரென்சு மெக்லிலேண்ட் (David Clarence McClelland) (மே 20, 1917 – மார்ச் 27, 1998) ஒரு அமெரிக்க உளவியலாளர் ஆவார். இவர் அடைவூக்கம் தொடர்பான இவரது கோட்பாட்டிற்காக நன்கறியப்பட்டவர். இவர் 1950 களில் பல அறிக்கைகளை வெளியிட்டதோடு 1990 களில் பொருள் கிளைக்கறிச் சோதனை தொடர்பான புதிய மதிப்பிடும் முறை மற்றும் அதன் வழித்தோன்றல்களையும் உருவாக்கினார். [1] மெக்லிலேண்டு அடைவூக்கம் பற்றிய கோட்பாட்டிற்காக மிகவும் பாராட்டப்பெற்றார். இந்தக் கோட்பாடானது "சாதனை புரியத் தேவையானவை" அல்லது n-அடைவுக் கோட்பாடு என அழைக்கப்பட்டது.[2] பொது உளவியல் குறித்த பார்வை என்ற காலாண்டு இதழ் 2002 ஆம் ஆண்டில் நடத்திய ஆய்வொன்றில் 20 ஆம் நூற்றாண்டில் அதிகம் குறிப்பிடப்பட்ட உளவியலாளர்கள் வரிசையில் டேவிட் மெக்லிலேண்ட் 15 ஆம் இடத்தைப் பிடித்துள்ளதாகத் தரப்படுத்தியுள்ளது. [3]
மெக்லிலேண்டு, நியூயார்க்கில் உள்ள மவுண்ட் வெர்ணான் என்ற இடத்தில் பிறந்தார். அவர் வெசுலேயான் பல்கலைக்கழகத்தில் 1938 ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டத்தையும் 1939 ஆம் ஆண்டில் முதுகலைப் பட்டத்தை மிசூரி பல்கலைக்கழகத்திலிருந்தும் பெற்றார். [1] பரிசோதனை உளவியல் பிரிவில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தை யேல் பல்கலைக்கழகத்திலிருந்து 1941 ஆம் ஆண்டில் பெற்றார். 1956 ஆம் ஆண்டில் ஆர்வர்டு பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகச் சேர்வதற்கு முன்னதாக அவர் கனெக்டிகட் கல்லூரி மற்றும் வெசுலேயான் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்பித்தார். ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் அவர் 30 ஆண்டுகள் பணியாற்றினார். 1962 முதல் 1967 வரையிலான காலத்தில் உளவியல் மற்றும் சமூகத் தொடர்புகள் துறையில் தலைவராகவும் பணியாற்றினார்.[4][5]
மெக்கிலெலண்ட் ஆளுமை மற்றும் நனவு நிலை குறித்தும் ஆராய்ச்சியை மேற்கொண்டார். 1930 களில் ஆர்வர்டு உளவியலாளர்கள் என்றி முர்ரே மற்றும் கிறிஸ்டியானா மோர்கன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒரு புறத்தெறி சோதனையான, பொருளறிவோடு இணைத்தறி சோதனைக்கான பரவலாகப் பயன்படுத்தப்படும் மதிப்பீட்டு அமைப்பை வளர்த்தெடுத்தது அவரது மிக முக்கியமான அறிவுசார் கொடையாகும். பொருளறிவோடு இணைத்தறி சோதனையானது இன்றளவும் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்தல் மற்றும் தொழிலைத் தேர்வு செய்தல் ஆகியவை போன்ற பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுகிறது. 1961 ஆம் ஆண்டில் மெக்லிலேண்ட் "சாதிக்கும் சமூகம்" (The Achieving Society) என்ற மனிதனின் ஊக்கம் தொடர்பான தனது மாதிரியை ஆய்வறிக்கையாக வெளியிட்டார். மெக்லிலேண்ட் மூன்று முக்கியமான ஆதிக்கம் செலுத்தக் கூடிய தேவைகளை வகைப்படுத்தினார். அவை - சாதனைக்கான தேவை, அதிகாரத்திற்கான தேவை, மற்றும் இணைப்பிற்கான தேவை - ஆகியவை மனிதனை ஊக்கப்படுத்தக்கூடிய, உந்தித்தள்ளக்கூடிய ஊக்கிகளின் அடிநாதமாக உள்ளன என்றார். ஒவ்வொரு தேவைக்கும் ஒப்பான முக்கியத்துவம் தனிநபர்களுக்கும் கலாச்சாரங்களுக்கும் ஏற்றவாறு வேறுபடுகிறது என்று மெக்லிலேண்ட் நம்பினார்.[6]
ஒரு சமுதாய மக்களிடையே அடைவு ஊக்கியின் செயற்பாடு உயர்ந்த அளவில் காணப்பட்டால், பலதுறைகளில் முனைவோரின் சாதனைகள் பெருகி, பொருளாதார வளர்ச்சி பெற்று, அச்சமுதாயம் முன்னேற்றமடைந்து அதன் மக்களது வாழ்க்கைத்தரம் உயரும் என்று மெக்லிலேண்டு தனது "சாதிக்கும் சமூகம்" (The Achieving Society) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.[7]
மெக்லிலேண்டின் கூற்றுப்படி மனிதனின் தேவைகள் சாதனை, அதிகாரம், இணைப்பு ஆகியவை சார்ந்ததாக உள்ளன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.