டேவிட் கென்னத் கார்பர் (ஆங்கில மொழி: David Kenneth Harbour) (பிறப்பு: ஏப்ரல் 10, 1975 ) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 1999 ஆம் ஆண்டு முதல் புரோக்பேக் மவுண்டன் (2005), ண்டு ஒப் வாட்ச் (2012), பிளாக் மாஸ் (2015), சூசைட் ஸ்க்வாட் (2016), த ஈகுவலைசர் (2018), ஹெல்பாய் (2019),[2] பிளாக் விடோவ் ‎(2021)[3][4] போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விரைவான உண்மைகள் டேவிட் கார்பர், பிறப்பு ...
டேவிட் கார்பர்
Thumb
பிறப்புடேவிட் கென்னத் கார்பர் [1]
ஏப்ரல் 10, 1975 (1975-04-10) (அகவை 49)
ஒயிட் ப்ளைன்ஸ், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1999–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
லில்லி ஆலன் (தி. 2020)
மூடு

இவர் 2016 ஆம் ஆண்டு முதல் அறிவியல் புனைகதை நாடகத் தொடரான ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்[5] என்ற நெற்ஃபிளிக்சு தொடரில் 'ஜிம் ஹாப்பர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவர் மிகவும் அறியப்பட்டார்.[6] இந்த தொடருக்காக இவர் 2018 இல் விமர்சகர்களின் சாய்ஸ் தொலைக்காட்சி விருதைப் பெற்றார். அதை தொடர்ந்து பிரதானநேர எம்மி விருது மற்றும் கோல்டன் குளோப் விருதுக்கான பரிந்துரைகளையும் பெற்றார்.[7][8]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.