இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia
டெல்லி கணேஷ் (Delhi Ganesh, பிறப்பு : 1 ஆகத்து 1944) தூத்துக்குடியில் பிறந்த மூத்த தமிழ் நடிகர் ஆவார். இவர் பெரும்பாலும் குணசித்திர வேடங்களில் காணப்படும் ஒரு தமிழ் திரைப்பட நடிகர். கமலஹாசன் உடன் இணைந்து இவர் நடித்த நகைச்சுவைத் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். இவரது பாத்திரம் நாயகன் மற்றும் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படங்களில் மிகவும் சிறப்பாக அறியப்பட்டது. இவர் 1976 இல் இருந்து தற்போது வரை 400 இக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் 'தில்லி' நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். கணேஷ் படங்களில் நடிப்பதற்கு முன் 1964 முதல் 1974 வரை இந்திய வான்படையில் பணியாற்றினார்.[1]
டெல்லி கணேஷ் | |
---|---|
பிறப்பு | கணேஷ் ஆகத்து 1, 1944 வல்லநாடு, தூத்துக்குடி , தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1976–தற்போதுவரை |
டெல்லி கணேஷ் நடித்து வெளியான முதல் திரைப்படம் பட்டினப்பிரவேசம் (1977), தமிழ் திரையுலகுக்கு இவரை அறிமுகம் செய்தவர் இயக்குனர் கே. பாலசந்தர். டெல்லி கணேஷ் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்களில் துணை நடிகர் அல்லது நகைச்சுவை நடிகர் வேடங்களே இருந்தது. ஆனால் இவர், அபூர்வ சகோதரர்கள் (கதாபாத்திரம்-பிரான்சிஸ்) போன்ற படங்களில் வில்லனாகவும் நடித்தார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க படங்கள் சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காமராஜன், ஆஹா மற்றும் தெனாலி.[2]
டெல்லி கணேஷ் ஒரு முக்கியமான தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சித் தொடர் நடிகராவார். இவர் இதுவரை 8 முக்கிய சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வசந்தம் மற்றும் கஸ்தூரி போன்ற தொடர்களில் அப்பா வேடங்களில் நடித்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.