டிஸ்கவரி விண்ணோடம் (Space Shuttle Discovery) என்பது ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் ஓய்வு பெற்ற மூன்று விண்ணோடங்களில் ஒன்றாகும்.[4] மற்றைய இரண்டும் அட்லாண்டிஸ் மற்றும் எண்டெவர் ஆகியனவாகும். 1984இல் டிஸ்கவரி விண்ணோடம் முதன் முதலில் செலுத்தப்பட்டபோது அந்நேரத்தில் பயன்பாட்டில் இருந்த மூன்றாவது விண்ணோடமாக இருந்தது. டிஸ்கவரி விண்ணில் பல ஆய்வுகளையும் அனைத்துலக விண்வெளி நிலையத்தை அமைக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. ஹபிள் தொலைநோக்குக் கருவி முதன் முதலில் டிஸ்கவரி மூலமே விண்ணுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
டிஸ்கவரி OV-103 | |
---|---|
டிஸ்கவரி விண்ணோடம் STS-124 திட்டத்தை விண்ணுக்குக் கொண்டு செல்லத் தயாராகிறது. | |
OV Designation | OV-103 |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
Contract award | சனவரி 29, 1979 |
Named after | டிஸ்கவரி (கப்பல், 1602) எச்எஸ்எம் டிஸ்கவரி (1774), எச்எஸ்எம் டிஸ்கவரி (1874), ஆர்ஆர்எஸ் டிஸ்கவரி (1901) |
முதல் பயணம் | எஸ்டிஎஸ்-41-D ஆகத்து 30, 1984 – செப்டம்பர் 5, 1984 |
கடைசிப் பயணம் | எஸ்டிஎஸ்-133 பெப்ரவரி 24, 2011 – மார்ச் 9, 2011 |
திட்டங்களின் எண்ணிக்கை | 39 |
பயணிகள் | 252[1] |
விண்ணில் செலவழித்த நேரம் | 364 நாட்கள், 22 மணி, 39 நிமி, 29 செக் |
பயணித்த தூரம் | 148,221,675 mi (238,539,663 km)[2] |
அனுப்பிய செய்மதிகள் | 31 (ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி உட்பட) |
மீர் dockings | 1[2] |
அவிநி dockings | 13[2] |
Status | ஓய்வு பெற்றது[3] |
கடைசிப் பயணம்
கடைசியாக டிஸ்கவரி வீண்ணோடம் பிப்ரவரி 24, 2011 இல் விண்ணுக்குச் செலுத்தப்பட்டது. மார்ச் 9, 2011 இல் டிஸ்கவரி விண்கலம் முறைப்படி ஓய்வு பெற்றது.[5][6] இது தற்போது ஸ்மித்சோனியன் நிறுவனத்தின் தேசிய வான் மற்றும் விண்வெளி நிறுவன அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.[7][8][9]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.