![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/83/Tim_Berners-Lee-Knight-crop.jpg/640px-Tim_Berners-Lee-Knight-crop.jpg&w=640&q=50)
டிம் பேர்னேர்ஸ்-லீ
இணையத் தந்தை, பிரித்தானிய கணினி நிபுணர் / From Wikipedia, the free encyclopedia
சர் திமொத்தி ஜான் டிம் பேர்னேர்ஸ்-லீ (Sir Timothy John Berners-Lee - பிறப்பு 8 ஜூன் 1955)[2] உலகளாவிய வலையைக் கண்டுபிடித்த இங்கிலாந்தைச் சேர்ந்த கணினிப் பொறியாளர் ஆவார். 1990 ஆம் ஆண்டு திசம்பரில் ராபர்ட் கைலியூ (Robert Cailliau)உடனும் மற்றுமொரு மாணவருடனும் இணைந்து மீயுரை பரிமாற்ற நெறிமுறை வழங்கிக்கும், பயனர் கணினிக்கும் இடையே வெற்றிகரமான தொடர்பைச் செயற்படுத்தினார். "டெலிகிராப்" பத்திரிகை தெரிவுசெய்த வாழும் 100 அறிவாளிகளின் பட்டியலில் பேர்னேர்ஸ்-லீ, ஆல்பர்ட் ஹாப்மனுடன் சேர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.
டிம் பேர்னேர்ஸ்-லீ | |
---|---|
![]() டிம் பேர்னேர்ஸ்-லீ, 2008 இல். | |
பிறப்பு | திமொத்தி பேர்னேர்ஸ்-லீ 8 சூன் 1955 (1955-06-08) (அகவை 69) இலண்டன், ஐக்கிய இராச்சியம் |
இருப்பிடம் | லெக்சிங்டன், மாசாச்சூசெட்ஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
மற்ற பெயர்கள் | டிம் [1] |
கல்வி | குயீன்ஸ் கல்லூரி, ஆக்ஸ்போர்ட் |
பணி | கணினி அறிவியலாளர் |
பணியகம் |
|
அறியப்படுவது | உலகளாவிய வலையைக் கண்டுபிடித்தமை |
பட்டம் | மூத்த ஆய்வாளர் |
சமயம் | யூனிட்டேரியனிசம் |
பெற்றோர் | கான்வே பேர்னேர்ஸ்-லீ மற்றும் மேரி லீ வூட்ஸ் |
வாழ்க்கைத் துணை | நான்சி கார்ல்சன் (மறுமணம்) |
பிள்ளைகள் | 2 |
வலைத்தளம் | |
டிம் பேர்னேர்ஸ்-லீ | |
Notes மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தில் கணினி அறிவியல் மற்றும் செயற்கை அறிவுத்திறன் ஆய்வகத்தில் 3கொம் நிறுவனர் தலைமைப்பீடத்தில் அமர்ந்துள்ளவர் |
இவர் இணையவலையின் மேம்பாட்டைக் கண்காணிக்கும் வேர்ல்ட் வைட் வெப் கொன்சோர்ட்டியத்தின் (W3C) இயக்குனரும், உலகளாவிய வலை நிறுவனத்தை நிறுவியவரும் ஆவார். இவர் எம்.ஐ.டி கணினி அறிவியல் மற்றும் செயற்கை அறிவுத்திறன் ஆய்வகத்தில் மூத்த ஆய்வாளராகவும் உள்ளார்.[3] மேலும் வலை அறிவியல் ஆய்வு முனைப்பு (WSRI) அமைப்பின் இயக்குநராகவும்[4] மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் கூட்டு அறிவுத்திறன் வாரியத்தின் பரிவுரைக்குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.[5][6]
2004ஆம் ஆண்டில் இவரது முன்னோடியான பணிகளுக்காக ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத் பிரித்தானிய அரசின் சீர்வரிசையில் இணைத்து சர் பட்டத்தை வழங்கினார்.[7][8] ஏப்ரல் 2009இல் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாதமியின் வெளிநாட்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9][10] 2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுக்கள் திறப்புவிழாவின்போது "உலகளாவிய வலையின் கண்டுபிடிப்பாளர்" என்று கவுரவிக்கப்பட்டார்;அவ்விழாவில் லீ நேரடியாக இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டரங்கத்தில் பங்கேற்றார்.[11] அப்போது துவிட்டரில் "இது அனைவருக்குமானது",[12] என்று அவர் வெளியிட்டது உடனடியாக திரவப் படிகக் காட்சியில் அரங்கத்திலிருந்து 80,000 மக்களும் காணுமாறு செய்யப்பட்டது.[11]