![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6f/DKPattammal.jpg/640px-DKPattammal.jpg&w=640&q=50)
தா. கி. பட்டம்மாள்
பாடகர் / From Wikipedia, the free encyclopedia
டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் (மார்ச் 19, 1919- ஜூலை 16, 2009[1]) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பாடகி நித்யஸ்ரீ மகாதேவன், இவரது பேத்தி ஆவார். கான சரஸ்வதி என்றும் [2] இசைப் பேரரசி என்றும் [3] அழைக்கப்படுகிறார்.
விரைவான உண்மைகள் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள்Damal Krishnaswamy Pattammal, பின்னணித் தகவல்கள் ...
தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் Damal Krishnaswamy Pattammal | |
---|---|
![]() 1940களின் இறுதியில் டி. கே. பட்டம்மாள் | |
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | கான சரஸ்வதி , சங்கீத சரஸ்வதி , இசைப் பேரரசி |
பிறப்பு | (1919-03-19)19 மார்ச்சு 1919 |
பிறப்பிடம் | காஞ்சிபுரம், சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | 16 சூலை 2009(2009-07-16) (அகவை 90) சென்னை, இந்தியா |
இசை வடிவங்கள் | கருநாடக இசை, பின்னணிப் பாடகி |
தொழில்(கள்) | பாடகி |
இசைத்துறையில் | 1929–2009 |
வெளியீட்டு நிறுவனங்கள் | எச்எம்வி, ஈஎம்ஐ, ஆர்பிஜி, ஏவிஎம் ஸ்டூடியோ |
மூடு
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலங்களில் ஆண்களே கோலோச்சி வந்த கருநாடக இசை மேடைகளில் தங்கள் இசைத்திறமையால் 'பெண் மும்மூர்த்திகள்' என நிலைநாட்டிக்கொண்ட மூவரில் ஒருவர்[4][5]. மற்றவர்கள் எம். எஸ். சுப்புலட்சுமியும் எம். எல். வசந்தகுமாரியும் ஆவர்.