![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5e/M._S._Subbulakshmi_%252803%2529.jpg/640px-M._S._Subbulakshmi_%252803%2529.jpg&w=640&q=50)
ம. ச. சுப்புலட்சுமி
கர்நாடக இசை பாடகர் / From Wikipedia, the free encyclopedia
எம். எஸ். சுப்புலட்சுமி (M. S. Subbulakshmi) என்று பரவலாக அறியப்படும் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி (செப்டம்பர் 16, 1916 - திசம்பர் 11, 2004) ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகியாவார். 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம், குசராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையில் அரங்கேற்றத்தை நிகழ்த்திய முதல் இந்தியர் ஆவார்.[1][2] 1966 ஆம் ஆண்டில் இந்த அரங்கேற்றத்தினை நிகழ்த்தினார். இவர் இசையரசி என்றும் [3] இசைப் பேரரசி [4] என்றும் இசைக்குயில் [5] என்றும் இசை ராணி [6][7] என்றும் அழைக்கப்படுகிறார்.
விரைவான உண்மைகள் ம. ச. சுப்புலட்சுமிM. S. Subbulakshmi, பின்னணித் தகவல்கள் ...
ம. ச. சுப்புலட்சுமி M. S. Subbulakshmi | |
---|---|
![]() | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி |
பிறப்பு | (1916-09-16)16 செப்டம்பர் 1916 மதுரை, சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | 11 திசம்பர் 2004(2004-12-11) (அகவை 88) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | கருநாடக இசைப் பாடகர் |
இசைத்துறையில் | 1930–1997 |
வெளியீட்டு நிறுவனங்கள் | எச்.எம்.வி |
மூடு
விரைவான உண்மைகள்
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/47/Sound-icon.svg/45px-Sound-icon.svg.png)
இந்த ஒலிக்கோப்பு 28 செப்டம்பர் 2023 தேதியிட்ட ம. ச. சுப்புலட்சுமி பதிப்பில் இருந்து உருவாக்கப்பட்டது. இது கட்டுரையின் பிந்திய தொகுப்புக்களைக் காட்டாது. (ஒலி உதவி)
மூடு