![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3d/Kashi-gyanvapi_%25281%2529.jpg/640px-Kashi-gyanvapi_%25281%2529.jpg&w=640&q=50)
ஞானவாபி பள்ளிவாசல்
From Wikipedia, the free encyclopedia
ஞான வாபி பள்ளிவாசல் அல்லது ஞானக் கிணறு பள்ளிவாசல் (Gyan vapi mosque) இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரத்தில், கங்கை ஆற்றின் கரையில் உள்ள தச அஷ்வமேத படித்துறைக்கு வடக்கில், லலிதா படித்துறைக்கு அருகில், காசி விஸ்வநாதர் கோயில் சுவரை ஒட்டி அமைந்துள்ளது.[1] ஞான வாபி என்பதற்கு தமிழில் பேரரறிவுக் கிணறு என்று பொருள். பொ.ஊ. 1696-இல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடிக்க ஆணையிட்டார்.[2] கோயில் இடிக்கப்பட்ட இடத்தில் ஞான வாபி பள்ளிவாசலை கட்டப்படடு அன்சுமான் இந்த்ஜாமியா மஸ்ஜித் அமைப்பு நிர்வகிக்கிறது.[3]
விரைவான உண்மைகள் ஞான வாபி பள்ளிவாசல், அடிப்படைத் தகவல்கள் ...
ஞான வாபி பள்ளிவாசல் | |
---|---|
![]() காசி விஸ்வநாதரின் கோயிலின் உண்மையான சுவரை ஒட்டி ஞானவாபி பள்ளிவாசல் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | காசி விஸ்வநாதர் கோயில் சுவரை ஒட்டி, வாரணாசி, இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 25.311229°N 83.010461°E / 25.311229; 83.010461 |
சமயம் | இசுலாம் |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/22/Gyanvapi_Mosque.jpg/320px-Gyanvapi_Mosque.jpg)