![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a1/Joseph_Lister_1902.jpg/640px-Joseph_Lister_1902.jpg&w=640&q=50)
ஜோசப் லிஸ்டர்
From Wikipedia, the free encyclopedia
ஜோசப் லிஸ்டர் (Joseph Lister) 5 ஏப்ரல் 1827 முதல் 10 பிப்ரவரி 1912 ஆம் ஆண்டு காலத்தில் வாழ்ந்த [1] அறுவை சிகிச்சையில் நோய் நுண்மத்தடை (Antiseptic) முறைகளைப் பயன்படுத்துவதைக் கண்டு பிடித்த பிரித்தானிய அறுவை சிகிச்சை வல்லுநர் ஆவார்.[2] விக்டோரியா அரசியாரின் சொந்த மருத்துவராகப் பணிபுரிந்தவர். அறுவை சிகிச்சைக்காகப் பயன் படுத்தும் மருத்துவக் கருவிகளைக் கொதிக்க வைப்பதன் மூலம் நோய் நுண்மம்ங்களை ஒழிக்க முடியும் எனக் கண்டறிந்தவர். தற்போது 'பினாயில்' என்றழைக்கப்படும் கார்போலிக் அமிலத்தினால் காயங்களில் உள்ள நோய்க் கிருமிகளைத் தடை செய்ய முடியும் எனவும் கருவிகளைச் சுத்திகரிக்க முடியும் எனவும் கண்டறிந்த அறிவியலாளர் ஆவார்.
விரைவான உண்மைகள் ஜோசப் லிஸ்டர், முதலாம் பேரன் லிஸ்டர், பிறப்பு ...
ஜோசப் லிஸ்டர், முதலாம் பேரன் லிஸ்டர் | |
---|---|
![]() புகைப்படம் (1902) | |
பிறப்பு | (1827-04-05)5 ஏப்ரல் 1827 அப்ட்டான், எஸ்ஸெக்ஸ் |
இறப்பு | 10 பெப்ரவரி 1912(1912-02-10) (அகவை 84) வால்மர், நெட் |
தேசியம் | பிரித்தானியா |
துறை | மருந்தியல் |
பணியிடங்கள் | கிளாஸ்கோ பல்கலைக் கழகம் எடின்பர்க் பல்கலைக் கழகம் லண்டன் பல்கலைக் கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | லண்டன் பல்கலைக் கழகம் |
அறியப்படுவது | அறுவை மருத்துவம் நோய் நுண்மத்தடை தொழில்நுட்பம் |
கையொப்பம் |
மூடு