![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d4/J._R._R._Tolkien%252C_ca._1925.jpg/640px-J._R._R._Tolkien%252C_ca._1925.jpg&w=640&q=50)
ஜே. ஆர். ஆர். டோல்கீன்
From Wikipedia, the free encyclopedia
ஜே. ஆர். ஆர். டோல்கீன் (J. R. R. Tolkien, ஜனவரி 3, 1892 – செப்டம்பர் 2, 1973) என்று பரவலாக அறியப்படும் ஜான் ரொனால்ட் ரூல் டோல்கீன் (John Ronald Reuel Tolkien) ஒரு ஆங்கில எழுத்தாளர், கவிஞர் மற்றும் பேராசிரியர். ஆங்கிலக் கனவுருப்புனைவு பாணியின் முன்னோடியாகக் கருதப்படுபவர். த லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் மற்றும் த காபிட்டு ஆகியவை இவரது மிகவும் அறியப்பட்ட படைப்புகள். டோல்கீனுக்கு முன்பே பல எழுத்தாளர்கள் கனவுருப்புனைவுப் படைப்புகளை எழுதியிருந்தாலும் அவரது படைப்புகளே இருபதாம் நூற்றாண்டில் அப்புனைவுப் பாணிக்கு புத்துயிர் அளித்து வாசகர்களிடையே புகழ்பெறச் செய்தன. எனவே டோல்கீன் 'நவீன கனவுருப்புனைவு இலக்கியத்தின் தந்தை' எனக் கருதப்படுகிறார்.[1][2][3]
விரைவான உண்மைகள் ஜே. ஆர். ஆர். தோல்கீன், பிறப்பு ...
ஜே. ஆர். ஆர். தோல்கீன் | |
---|---|
பிறப்பு | ஜான் ரொனால்ட் ரூல் டோல்கீன் ஜனவரி 3, 1892 புளூம்ஃபோண்டெய்ன், ஆரஞ்சு விடுதலை மாநிலம், தென்னாப்பிரிக்கா |
இறப்பு | செப்டம்பர் 2, 1973 பூர்ன்மவுத், இங்கிலாந்து |
தொழில் | எழுத்தாளர், ஆய்வாளர், மொழியறிவியலாளர், கவிஞர் |
தேசியம் | பிரித்தானியர் |
வகை | கனவுருப் புனைவு, மேல்மட்ட கனவுருப்புனைவு, மொழிபெயர்ப்பு, இலக்கியத் திறனாய்வு |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தி ஹோபிட் த லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் தி சில்மரீலியன் |
துணைவர் | எடித் பிராட் (1916–1971) |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d4/J._R._R._Tolkien%2C_ca._1925.jpg/640px-J._R._R._Tolkien%2C_ca._1925.jpg)