From Wikipedia, the free encyclopedia
ஜெரமி லீ ரெனர் (ஆங்கில மொழி: Jeremy Lee Renner)[1] (பிறப்பு: சனவரி 7, 1971)[2][3][4] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டு த ஹர்ட் லாக்கர் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான அகாதமி விருது மற்றும் 2010 இல் 'தி டவுன்' என்ற படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதையும் வென்றுள்ளார்.
ஜெரமி ரெனர் | |
---|---|
பிறப்பு | ஜெரமி லீ ரெனர் சனவரி 7, 1971 மாடஸ்டோ, கலிபோர்னியா, அமெரிக்கா |
பணி | நடிகர், பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1995–இன்றுவரை |
வாழ்க்கைத் துணை | சோனி பச்சேகோ (தி. 2014; ம.மு. 2015) |
பிள்ளைகள் | 1 |
இவர் 2011 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான தோர்,[5][6][7] தி அவேஞ்சர்ஸ் (2012), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015),[8] கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018)[9] போன்ற திரைப்படங்களில் கொக்கெய் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் ஹன்ஸல் அண்ட் க்ரேடெல் (2013), அமெரிக்கன் ஹஸ்ல் (2013), அரைவல்[10] போன்ற பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.