ஜெனரல் செர்மன் மரம்
தாவர இனம் / From Wikipedia, the free encyclopedia
ஜெனரல் செர்மன் மரம் அல்லது செக்கோயா மரம் (General Sherman), அமெரிக்க ஐக்கிய நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தின் வடக்கில் உள்ள துலாரே கவுண்டியில் அமைந்த செக்கோயா தேசிய பூங்காவில்[1] உள்ள உலகின் மிகப்பெரிய மரமாகும்.[2]இம்மரத்தின் வயது 2,300 ஆண்டு முதல் 2,700 ஆண்டுகள் எனக்கணிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் செர்மன் மரம் 83.8 மீட்டர் உயரமும், 11 மீட்டர் விட்டமும், 1487 கன மீட்டரும் கொண்டது. இம்மரம் கிளைகள் அற்று, ஒரே தண்டுடன் உள்ளது. இதன் விதைகள் ஊசி முனை அளவில் இருக்கும். இதன் வேர்கள் 3 அல்லது 4 கிலோ மீட்டர் தொலைவு வரை பரவி இருக்கும். [3]
விரைவான உண்மைகள் ஜெனரல் செர்மன் மரம்செக்கோயா மரம், வகை ...
ஜெனரல் செர்மன் மரம் செக்கோயா மரம் | |
---|---|
கலிபோர்னியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய ஜெனரல் செர்மன் மரம் | |
வகை | பெரிய செக்கோயா () |
ஆள்கூறுகள் | 36°34′54″N 118°45′05.5″W |
விதைக்கப்பட்டது | கிமு 700 – கிமு 300 |
மூடு
செப்டமர், 2021-இல் கலிபோர்னியா காட்டுத் தீயில் இம்மரம் கருகிவிடாமல் இருக்க, இம்மரத்தைச் சுற்றி அலுமனியத் தாட்களால் சுற்றப்பட்டது. [4][5]