ஜுபைல்
From Wikipedia, the free encyclopedia
ஜுபைல் (Jubail, அரபு: "الجبيل") சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில், அரபிக்கடலோரம் அமைந்துள்ள மிகப்பெரிய தொழில் நகராகும். இங்கு இருபதுக்கும் மேற்பட்ட கனரக இரசாயனத் தொழிற்கூடங்கள் உள்ளன. இந்த தொழிற் நகரின் அடிப்படை உள்கட்ட வசதிகளை " Royal Commission for Jubail & Yanbu" செய்து தருகிறது. இதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 179,544 ஆகும்.
ஜுபைல் | |
---|---|
ஆள்கூறுகள்: 27°0′N 49°40′E | |
நாடு | சவூதி அரேபியா |
மாகாணம் | கிழக்கு மாகாணம் |
அரசு | |
• வகை | முடியாட்சி |
• மாகாண ஆளுநர் | Saud bin Nayef |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 3,92,948 |
• Nationality (2011) | 73% சவுதி 17% இந்தியர் 4% பிலிப்பினோக்கள் 3% பாகிஸ்தானியர்கள் 1% வங்காளதேசிகள் 1% அமெரிக்கர்கள் 1% ஐரோப்பியர்கள் 2.5% பிற நாடுகள் |
நேர வலயம் | ஒசநே+3 (AST) |
இங்கு உள்ள ஐ.டபிள்யூ.பி.பி (சுதந்திர நீர் மற்றும் மின் திட்டம்) தினமும் 2743.6 மெகாவாட் மின்சாரத்தையும் 800,000 சதுர மீற்றர் தண்ணீரையும் உற்பத்தி செய்கிறது. இங்கு எஸ்ஏபிஐசி என்ற மத்திய கிழக்கின் மிகப்பெரிய மற்றும் உலகின் நான்காவது பெரிய பெற்றோலிய வேதிப்பொருட்கள் நிறுவனம் காணப்படுகிறது.[1]
இன்றைய ஜுபைல் நகரம் பழைய நகரமான அல்ஜுபைல் (ஜுபைல் பாலாட்) ஐ உள்ளடக்கியது. 1975 ஆம் ஆண்டு வரை சிறிய மீன்பிடி கிராமமாகவும் புதிய தொழில்துறை பகுதியாகவும் இருந்து வந்தது. ஜுபைல் தொழிற்துறை நகரம் இன்று உலகின் மிகப்பெரிய பொதுப் பொறியியல் திட்ட நகரமாகும். 1975 ஆம் ஆண்டில், சவூதி அரசாங்கம் ஜுபைலை ஒரு புதிய தொழிற்துறை நகரத்திற்கான தளமாக நியமித்தது. புதிய தொழிற்துறை மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு மதனாத் அல் ஜுபைல் அய்னா யா (ஜூபில் தொழில்துறை நகரம்) என்று பெயரிடப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் சனத்தொகை கணக்கெடுப்பு அறிக்கை 224,430 குடியிருப்பாளர்களை மதிப்பிடுகிறது.