From Wikipedia, the free encyclopedia
ஜார்சுகுடா (Jharsuguda), கிழக்கு இந்தியாவில் உள்ள ஒடிசா மாநிலத்தின் ஜார்சுகுடா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது சத்தீஸ்கர் மாநில எல்லையை ஒட்டியுள்ளது. 45 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஜார்சுகுடா உலோகத் தொழிற்சாலைகள் நிறைந்த தொழில் நகரம் ஆகும். இந்நகரம் ஒடிசாவின் மின்சக்தி தலைநகரம் எனப்போற்றப்படுகிறது. ஜார்சுகுடா நகரத்தில் வீர் சுரேந்திர சாய் வானூர்தி நிலையம் உள்ளது.ஜார்சுகுடா நகரம் மாநிலத் தலைநகரான புவனேஸ்வருக்கு வடமேற்கே 343.6 கிலோ மீட்டர் தொலைவில், சத்தீஸ்கர் மாநில எல்லையை ஒட்டியுள்ளது.
ஜார்சுகுடா
ஒடிசாவின் மின்சக்தி நிலையம் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): JSG | |
ஆள்கூறுகள்: 21.85°N 84.03°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஒடிசா |
மாவட்டம் | ஜார்சுகுடா |
நிறுவிய ஆண்டு | 1951 |
பரப்பளவு | |
• மொத்தம் | 45 km2 (17 sq mi) |
ஏற்றம் | 218 m (715 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,24,500 |
• அடர்த்தி | 2,800/km2 (7,200/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | ஒடியா |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 768201 |
வாகனப் பதிவு | OD-23 (முன்னர் OR-23) |
இணையதளம் | jharsuguda |
ஜார்சுகுடா நகரத்தில் சபாரா மக்கள், கிஷான் மக்கள், குறுக் மக்கள், புயான் மக்கள், முண்டா மக்கள், சாந்தலி மக்கள் 16,948 பேர் வாழ்கின்றனர்.
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 24 வார்டுகளும், 21,916 வீடுகளும் கொண்ட ஜார்சுகுடா நகரத்தின் மக்கள் தொகை 97,730 ஆகும். அதில் ஆண்கள் 50,932 மற்றும் பெண்கள் 46,798 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 919 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 84.9% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 13,870 மற்றும் 16,948 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 89.73%, இசுலாமியர் 5.78%, சீக்கியர்கள் 0.41%, கிறித்தவர்கள் 3.7% மற்றும் பிறர் 0.37% ஆகவுள்ளனர்.[2]
ஜார்சுகுடா சந்திப்பு இரயில் நிலையம் டாடாநகர்-பிலாஸ்பூர், ஹவுரா-நாக்பூர்-மும்பை மற்றும் ஜார்சுகுடா-விஜயநகரம் இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. ஜார்சுகுடா வானூர்தி நிலையம் உள்நாட்டுப் போக்குவரத்திற்கு மட்டும் உள்ளது. மாநில நெடுஞ்சாலை எண் 10 இந்நகரம் வழியாகச் சென்று, தேசிய நெடுஞ்சாலை எண் 49 உடன் இணைகிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், ஜார்சுகுடா (1981–2010, extremes 1951–2012) | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 35.0 (95) |
38.4 (101.1) |
42.7 (108.9) |
46.1 (115) |
48.0 (118.4) |
47.1 (116.8) |
41.7 (107.1) |
36.2 (97.2) |
37.1 (98.8) |
36.2 (97.2) |
35.6 (96.1) |
32.8 (91) |
48.0 (118.4) |
உயர் சராசரி °C (°F) | 27.8 (82) |
30.8 (87.4) |
35.7 (96.3) |
40.1 (104.2) |
41.0 (105.8) |
36.8 (98.2) |
31.9 (89.4) |
31.2 (88.2) |
32.0 (89.6) |
32.2 (90) |
30.2 (86.4) |
27.8 (82) |
33.1 (91.6) |
தாழ் சராசரி °C (°F) | 12.6 (54.7) |
15.4 (59.7) |
19.7 (67.5) |
24.4 (75.9) |
26.9 (80.4) |
26.5 (79.7) |
25.0 (77) |
24.8 (76.6) |
24.4 (75.9) |
21.4 (70.5) |
16.5 (61.7) |
12.6 (54.7) |
20.9 (69.6) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 5.6 (42.1) |
7.2 (45) |
11.1 (52) |
15.8 (60.4) |
18.7 (65.7) |
16.3 (61.3) |
17.4 (63.3) |
16.6 (61.9) |
16.7 (62.1) |
12.1 (53.8) |
8.4 (47.1) |
6.1 (43) |
5.6 (42.1) |
மழைப்பொழிவுmm (inches) | 19.0 (0.748) |
19.5 (0.768) |
14.6 (0.575) |
24.5 (0.965) |
37.9 (1.492) |
221.2 (8.709) |
421.7 (16.602) |
386.3 (15.209) |
233.3 (9.185) |
64.8 (2.551) |
15.7 (0.618) |
8.7 (0.343) |
1,467.2 (57.764) |
% ஈரப்பதம் | 43 | 34 | 26 | 23 | 29 | 54 | 77 | 81 | 76 | 64 | 53 | 47 | 51 |
சராசரி மழை நாட்கள் | 1.3 | 1.3 | 1.6 | 2.2 | 3.5 | 9.8 | 16.6 | 17.0 | 11.3 | 3.7 | 0.9 | 0.6 | 69.9 |
ஆதாரம்: India Meteorological Department[3][4] |
ஜார்சுகுடா சந்திப்பு இரயில் நிலையம் டாடாநகர்-பிலாஸ்பூர், ஹவுரா-நாக்பூர்-மும்பை மற்றும் ஜார்சுகுடா-விஜயநகரம் இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. ஜார்சுகுடா வானூர்தி நிலையம் உள்நாட்டுப் போக்குவரத்திற்கு மட்டும் உள்ளது. மாநில நெடுஞ்சாலை எண் 10 இந்நகரம் வழியாகச் சென்று, தேசிய நெடுஞ்சாலை எண் 49 உடன் இணைகிறது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.