தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
சோ ராமசாமி (Cho Ramaswamy, அக்டோபர் 5, 1934 - டிசம்பர் 7, 2016), பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வக்கீல் எனப் பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர். சோ என அழைக்கப்பட்டவர். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவரின் 'அரசியல் நையாண்டி' எழுத்துகள் இவருக்குப் 'பத்திரிக்கை உலகில்' தனி இடம் வகுத்துத் தந்தது.
சோ இராமசாமி | |
---|---|
மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் 16 நவம்பர் 1999 – 16 நவம்பர் 2005 | |
குடியரசுத் தலைவர் | கே. ஆர். நாராயணன் (1997–2002) ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் (2002–2007) |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
தொகுதி | நியமனம் |
துக்ளக் நிறுவன ஆசிரியர் | |
பதவியில் 14 சனவரி 1970 – 7 திசம்பர் 2016 | |
பின்னவர் | சுவாமிநாதன் குருமூர்த்தி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சிறிநிவாச ஐயர் இராமசாமி 5 அக்டோபர் 1934 மயிலாப்பூர், சென்னை, இந்தியா |
இறப்பு | 7 திசம்பர் 2016 82) சென்னை, இந்தியா | (அகவை
துணைவர்(கள்) | சௌந்தராம்பா (தி.1966-2016) |
வேலை | நடிகர், ஊடகவியலாளர், வழக்கறிஞர், பத்திரிகாசிரியர், இயக்குநர், எழுத்தாளர் |
விருதுகள் | பத்ம பூசண் (2017) |
சோ ராமசாமி சென்னையில் பிறந்தவர். இவருடைய தந்தையார் ரா. ஸ்ரீநிவாசன், தாயார் ராஜம்மாள். இவர் தன்னுடைய பள்ளிப் படிப்பை மயிலாப்பூர் பி.எஸ். உயர்நிலைப் பள்ளியிலும், கல்லூரிப் படிப்பை லயோலா கல்லூரியிலும் பயின்று இளநிலைஅறிவியல் (பி.எஸ் சி) பட்டப் படிப்பை விவேகானந்தா கல்லூரியிலும் பயின்றார். பின் 1953-55-ஆம் ஆண்டுகளில் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று இளநிலைச்சட்டப் படிப்பில் (பி.எல்) பட்டம் பெற்றார். 1957 முதல் 1962 வரை சென்னை உயர் நீதி மன்றத்தில் வக்கீலாகப் பணியாற்றினார். 1962 முதல் டி.டி.கே (T.T.K) கம்பெனிகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றினார். இவருக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். ’சோ’ எனும் பெயர் பகீரதன் எழுதிய தேன்மொழியாள் மேடை நாடகத்தில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயராகும்.[1]
1957 ஆம் ஆண்டு நாடகங்களை எழுதத் துவங்கினார். 1970 ஆம் ஆண்டு துக்ளக் வார இதழைத் தொடங்கினார். பின்னர் 1976ஆம் ஆண்டில் PickWick என்ற ஆங்கில இதழைத் தொடங்கினார்.
இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார். மிஸ்டர் சம்பத், முகமது பின் துக்ளக், யாருக்கும் வெட்கமில்லை, உண்மையே உன் விலையென்ன ஆகிய நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.[2] நான்கு தொலைக்காட்சிப் படங்களுக்குக் கதை எழுதி இயக்கி நடித்தும் உள்ளார்.
இவர் தனது பத்திரிக்கைத்துறைச் பணிக்காக 1985 இல் 'மஹாரான மேவார்' வழங்கிய ஹால்டி காட்டி விருதும், 1986 இல் வீரகேசரி விருதும், 1994 ஆம் ஆண்டு கொயங்கா விருதும், 1998 இல் நச்சிக்கேதஸ் விருதும் பெற்றார்.
இவர் 22 நாடகங்களையும், 8 புதினங்களையும், அரசியல், கலை எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவரது முகமது பின் துக்ளக் என்னும் 'அரசியல் நையாண்டி' நாடகம் மிகவும் புகழ் பெற்றது. இது பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது.
இவர் மாநிலங்களவை உறுப்பினராக வாஜ்பாயால் நியமனம் செய்யப்பட்டு 1999 முதல் 2005 வரை பணியாற்றினார்.
சோ ராமசாமி இலங்கைத் தமிழர்களுக்கு, குறிப்பாக விடுதலைப்புலிகளுக்கு எதிரான[3] போக்கினைக் கொண்டிருந்தார். இலங்கைத் தமிழர் பற்றிய போதியளவு புரிதல் அற்றும் இருந்தார்.[4] இவர் 1980 இல் இலங்கை வந்து, அதிபர் ஜே.ஆர் ஜெயவர்த்தனாவிடமிருந்து பரிசு வாங்கியது முதல் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்டார் என்ற கருத்துள்ளது. இவரின் தமிழின எதிர்ப்பின் காரணமான 1986 இல் மதுரையில் வைத்து அமில முட்டை வீசப்பட்டது. அதனால் அவருக்கு பல வருடங்களாக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது.[5] இவர் ஆரம்பித்த துக்ளத் சஞ்சிகைகள் 2007 இல் இலண்டனில் இலங்கைத் தமிழர்களினால் தீக்கிரைக்குள்ளாயின. அவர்கள் விடுதலைப் புலிகள் என்றும், அல்லது அவர்களுடைய ஆதரவாளர்கள் என்றும் சில செய்திகள் தெரிவித்தன.[6]
சோ ராமசாமி, 2016 டிசம்பர் 7 அன்று காலை 4 மணியளவில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.