சைபுல் முலுக் ஏரி

பாகித்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்திலுள்ள ஒரு ஏரி From Wikipedia, the free encyclopedia

சைபுல் முலுக் ஏரிmap

சைபுல் முலுக் ஏரி ( Lake Saiful Muluk) சைபுல் முலுக் தேசிய பூங்காவில் உள்ள நரன் நகருக்கு அருகில் ககன் பள்ளத்தாக்கின் வடக்கு முனையில் அமைந்துள்ள ஒரு மலைப்பாங்கான ஏரியாகும். கடல் மட்டத்திலிருந்து 3,224 மீ (10,578 அடி) உயரத்தில், இந்த ஏரி மரங்களின் வரிசைக்கு மேலே அமைந்துள்ளது. இது பாக்கித்தானின் மிக உயரமான ஏரிகளில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் சைபுல் முலுக் ஏரி, அமைவிடம் ...
சைபுல் முலுக் ஏரி
Thumb
இந்த ஏரியானது வடக்கு பாக்கித்தானின் மலைகளில் அதன் அழகிய அமைப்பிற்காக குறிப்பிடத்தக்கது
Thumb
சைபுல் முலுக் ஏரி
சைபுல் முலுக் ஏரி
அமைவிடம்சைபுல் முலுக் தேசியப் பூங்கா
ககன் பள்ளத்தாக்கு
ஆள்கூறுகள்34.876957°N 73.694485°E / 34.876957; 73.694485
ஏரி வகைஅல்பைன், பனிப்பாறை ஏரி
முதன்மை வரத்துபனிப்பாறை தண்ணீர்
வடிநில நாடுகள்பாக்கித்தான்
மேற்பரப்பளவு2.75 km2 (1.06 sq mi)
அதிகபட்ச ஆழம்113 அடி (34 m)
கடல்மட்டத்திலிருந்து உயரம்3,224 மீட்டர்கள் (10,577 அடி)[1]
குடியேற்றங்கள்நரன்
மூடு

அமைவிடம்

Thumb
ஏரிக்கான பாதை ககன் பள்ளத்தாக்கின் மலைகளைக் கடந்து செல்கிறது

சைபுல் முலுக் கைபர் பக்துன்க்வாவின் மன்சேரா மாவட்டத்தில் நரனுக்கு வடக்கே சுமார் 9 கிலோமீட்டர் (5.6 மை) தொலைவில் ககன் பள்ளத்தாக்கின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. [2] பள்ளத்தாக்கின் மிக உயரமான சிகரமான மாலிகா பர்பத் ஏரிக்கு அருகில் உள்ளது. [3]

கோடை காலத்தில் அருகிலுள்ள நகரமான நரனில் இருந்து ஏரியை அணுகலாம். கடுமையான பனிப்பொழிவு மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக குளிர்காலத்தில் அணுகல் குறைவாக இருக்கும்.

அம்சங்கள்

சைபுல் முலுக் பள்ளத்தாக்கு வழியாக செல்லும் நீரோடையின் நீரை தடுக்கும் பனிப்பாறைக்கழிவடைகளால் உருவாக்கப்பட்டது. [4] ககன் பள்ளத்தாக்கு பிலிசுடோசின் காலத்தில் உருவானது. கிட்டத்தட்ட 300,000 ஆண்டுகளுக்கு முந்தைய பகுதி பனியால் மூடப்பட்டிருந்தது. உயரும் வெப்பநிலை மற்றும் பனிப்பாறைகள் ஒரு காலத்தில் பனிப்பாறைகள் இருந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளத்தை ஏற்படுத்தியது. பனி உருகி சேகரிக்கப்பட்ட நீரால் ஏரி உருவானது.

Thumb
வசந்த காலத்தில் சைப்-உல்-முலுக்கின் அகன்றக் காட்சி

சூழலியல்

இந்த ஏரி வளமான சுற்றுச்சூழல் பன்முகத்தன்மையைக் கொண்டுள்ளது. மேலும் பல வகையான நீல-பச்சை பாசிகளையும் கொண்டுள்ளது. சுமார் ஏழு கிலோகிராம் எடை கொண்ட பெரிய பழுப்பு நிற மீன்கள் ஏரியில் அதிகளவில் காணப்படும். [5] இப்பகுதியில் சுமார் 26 வகையான கலன்றாவரத் தாவரங்கள் உள்ளன. சூரியகாந்திக் குடும்பம் பொதுவாகக் காணப்படும் இனமாகும். பபேசியே போன்றவையும் இப்பகுதியில் பொதுவாகக் காணப்படும் பிற இனங்களாகும்.

நாட்டுப்புறக் கதை

சைபுல் முலுக் ஏரி ஒரு பழம்பெரும் இளவரசரின் பெயரால் அழைக்கப்படுகிறது. சூபிக் கவிஞர் மியான் முகம்மது பக்ச் எழுதிய சைப்-உல்-முலுக் என்ற விசித்திரக் கதை, ஏரியைப் பற்றி பேசுகிறது. [6] ஏரியில் இளவரசி பத்ரி-உல்-ஜமாலா என்ற தேவதை இளவரசியை காதலித்த எகிப்திய இளவரசர் சைபுல் மலூக் பற்றிய கதையை இது கூறுகிறது. [7]

புகைப்படங்கள்

இதனையும் பார்க்கவும்

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.