செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம்
From Wikipedia, the free encyclopedia
செவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடம் (Mars Science Laboratory, MSL) என்பது செவ்வாய்க் கோளில் தரையிறங்கி அதன் மேற்பரப்பை ஆராயவென ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஒரு விண்வெளித் தரையுளவித் திட்டம் ஆகும். இத்தரையுலாவி விண்கலம் 2011 நவம்பர் 26 ஆம் நாள் 10:02 மணிக்கு புளோரிடாவின் கேப் கேனவரல் வான்படைத் தளத்தில் இருந்து அட்லஸ்-5 என்ற ஏவுகலம் மூலம் ஏவப்பட்டது[2][3]. இத்திட்டத்தின் "கியூரியோசிட்டி" (Curiosity) எனப் பெயரிடப்பட்ட தரையுலாவி[12][13] செவ்வாயில் கேல் பள்ளம் என்ற பகுதியில் 2012 ஆகத்து 6 ஆம் நாள் ஒசநே 05:14:39 மணிக்கு வெற்றிகரமாகத் தரையிறங்கியது.[2][3] [14][15]
இயக்குபவர் | நாசா |
---|---|
முதன்மை ஒப்பந்தக்காரர் | போயிங் லொக்ஹீட் மார்ட்டின் |
திட்ட வகை | தரையுளவி |
ஏவப்பட்ட நாள் | நவம்பர் 26, 2011 15:02:00.211 UTC[1][2][3] |
ஏவுகலம் | அட்லஸ் 5 541 (ஏவி-028) |
ஏவு தளம் | கேப் கேனவரல் வான்படைத் தளம்[4] |
திட்டக் காலம் | 686 பூமி நாட்கள் |
தரையிறங்கல் | ஆகத்து 5, 2012 (திட்டம்)[5][6] |
தே.வி.அ.த.மை எண் | MARSCILAB |
இணைய தளம் | செவ்வாய் அறிவியல் ஆய்வுகூடம் |
நிறை | 900 கிகி[7] |
திறன் | கதிரியக்க ஐசோடோப்பு வெப்பமின்னாக்கி (RTG) |
செவ்வாய் landing | |
திகதி | ஆகத்து 5, 2012 (திட்டம்)[5][8] |
ஆள்கூறுகள் | கேல் பள்ளம், 4° 36′ 0″ S, 137° 12′ 0″ E (தரையிறங்கும் பகுதி) |
References: [6][9][10][11] |
கேல் பள்ளத்தின் உள்ளே 5 கிமீ உயரமான மலை ஒன்றின் மீது இந்த தளவூர்தி ஏறி ஆராயும். பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாயில் நீர் ஓடிய போது இந்த மலைக்கு வந்து சேர்ந்த பாறைகளை இது ஆராயும். இங்குள்ள பாறைகள், மணல், வளி மண்டலம் போன்றவற்றை ஆராயும் வகையில் 10 உயர்நுட்பச் சாதனங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளன[16].