செம்பனை
ஒரு வகை பனை மரம் / From Wikipedia, the free encyclopedia
செம்பனை (Oil Palm) என்பது ஒரு வகை பனை மரம் ஆகும். தென்னையைப் போன்ற இந்த மரம், பாமாயில் பனை என்று அழைக்கப்படுகிறது. மலேசியாவில் செம்பனை என்றும் கெலாப்பா சாவிட் என்றும் அழைக்கிறார்கள்.[2]
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
விரைவான உண்மைகள் செம்பனை, உயிரியல் வகைப்பாடு ...
செம்பனை | |
---|---|
ஆப்பிரிக்க செம்பனை (Elaeis guineensis) | |
உயிரியல் வகைப்பாடு | |
இனங்கள் | |
| |
வேறு பெயர்கள் [1] | |
|
மூடு
இரு வகையான செம்பனை மரங்கள் உள்ளன. ஆப்பிரிக்காவின் செம்பனை எலியிஸ் குயினென்சிஸ் (Elaeis quineensis) என்கிற இனத்தைச் சேர்ந்தது. மற்றொன்று அமெரிக்க செம்பனை. இந்த இனம் எலியிஸ் ஒலிபெரா (Elaesis oleifera) என்கிற இனத்தைச் சேர்ந்தது.[3]
இவற்றைத் தவிர அத்லியா மாரிபா (Attalea maripa) என்கிற செம்பனை வகையும் உள்ளது. இந்த வகை செம்பனை மலேசியாவில் அதிகமாகப் பயிரிடப் படுகிறது. மாரிபா பனை மரம் சிவந்த நிறத்தைக் கொண்ட பனை பழங்களை உருவாக்குகிறது.