செண்டிமீட்டர் அல்லது சென்டிமீட்டர் (centimetre அல்லது centimeter) அல்லது சதமமீட்டர் (இலங்கை வழக்கு) (குறியீடு செமீ (cm) என்பது மெட்ரிக் முறையில் நீளத்தின் ஓர் அலகு ஆகும். இது மீட்டரின் நூறில் ஒரு பங்கிற்குச் சமமாகும். "செண்டி" (centi) என்பது 1100 பின்னத்தின் அனைத்துலக முறை அலகு முன்னொட்டாகும்.[1] இப்போது வழக்கொழிந்த சென்டிமீட்டர்-கிராம்-செகண்ட் (சிஜிஎஸ்) அலகுகளில் நீளத்தின் அடிப்படை அலகு செண்டிமீட்டர் ஆகும்.
சென்டிமீட்டர் centimetre | |
---|---|
சென்டிமீட்டர் அலகுகளைக் காட்டும் ஆசாரியின் அளவுகோல் | |
பொது தகவல் | |
அலகு முறைமை | மெட்ரிக்கு |
அலகு பயன்படும் இடம் | நீளம் |
குறியீடு | செமீ (cm) |
அலகு மாற்றங்கள் | |
1 செமீ (cm) இல் ... | ... சமன் ... |
அனைத்துலக முறை அலகுகள் | 10 மிமீ |
பிரித்தானிய, அமெரிக்க முறை | ~0.3937 அங் |
இன்று பல அளவீடுகளுக்கு, 103 காரணிகளுக்கான SI முன்னொட்டுகள் (மில்லி-, கிலோ- போன்றவை) பெரும்பாலும் தொழில்நுட்பவியலாளரகளால் விரும்பப்படுகின்றன. இம்பீரியல் அளவை முறையில் உள்ள ஓர் அங்குலம் என்பது 2.54 செண்டிமீட்டர் நீளத்துக்கு ஈடாகும். இது சற்றேறக்குறைய ஆள்காட்டி விரல் அகலம் உடையது.
நீளத்தின் ஏனைய அலகுகளும் செண்டிமீட்டரும்
1 செண்டிமீட்டர் = 10 மில்லிமீட்டர்கள் = 0.01 மீட்டர்கள் = 0.393700787401574803149606299212598425196850 அங்குலங்கள் (ஓர் அங்குலத்தில் சரியாக 2.54 செண்டிமீட்டர்கள் உள்ளன.)
அனைத்துலக முறை அலகுகளில் ஒரு மில்லிலீட்டர் என்பது ஒரு கன சென்டிமீட்டருக்கு சமமாகும்.
ஏனைய பயன்பாடுகள்
நீள அளவீட்டைத் தவிர, செண்டிமீட்டர் பின்வரும் நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றது:
- மழை அளவீடு மூலம் அளவிடப்படும் மழையின் அளவைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[2]
- செமீ.கி/செக் (CGS) வழக்கில், செண்டிமீட்டர் கொண்மத்தை அளவிடப் பயன்படுத்தப்படுகிறது,1 செமீ கொண்மம் = 1.113×10−12 பாரடுகள்[3]
- வரைபடங்களில், செண்டிமீட்டர்கள் வரைபட அளவிலிருந்து உண்மையான உலக அளவில் (கிலோமீட்டர்கள்) மாற்றுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
- செமீ.கி/செக் (CGS) வழக்கில் ஓர் அலகான கெய்சரின் தலைகீழ், இதனால் அலை எண்ணின் SI-அல்லாத மெட்ரிக்கு அலகு: 1 கெய்சர் = 1 அலை/சென்டிமீட்டர்; அல்லது, பொதுவாக, (கெய்சர்களில் அலை எண்) = 1/(சென்டிமீட்டரில் அலைநீளம்). அலைஎண்ணின் SI அலகு தலைகீழ் மீட்டர், m−1 ஆகும்.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.